நாட்டுமக்களுக்கு நல்லது செய்த டானல்ட் டிரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டானல்ட் டிரம்ப் இந்த வாரத் தொடக்கத்தில் நாட்டுமக்களுக்கு நல்ல காரியம் செய்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டானல்ட் டிரம்ப் கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு நிறைய தீங்கு செய்துள்ளார்.

2020 தேர்தல் முடிவுகள் குறித்து அவர் செய்த புகார்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

ஆனால், இந்த வார தொடக்கத்தில், அவர் உண்மையிலேயே நாட்டு மக்களுக்கு பெரும் நன்மையைச் செய்துள்ளார்.

தம்முடனான ஒரு நேர்காணலில் கொவிட்-19 தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியதிலிருந்து “அதிகமான மக்கள் இறந்துவிட்டனர்” என்று விமர்சகர் கேண்டெஸ் ஓவன்ஸ் கூறிய கருத்துகளை டிரம்ப் நிராகரித்தார்.

அது மட்டுமின்றி, தடுப்பூசி போட வேண்டியதன் தெளிவான விளக்கத்தையும் நாட்டு மக்களுக்கு அளித்துள்ளார்.

“தடுப்பூசி பயனளிக்கிறது. ஆனால் சிலர் அதை போட்டுக்கொள்ளவில்லை. கடுமையாகப் பாதிக்கப்படுபவர்கள் தடுப்பூசி போடாதவர்கள்தான். தடுப்பூசி போடும்போது மக்கள் இறக்கவில்லை,” என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் கடுமையான பாதிப்பிலிருந்தும் கொரானா மரணத்திலிருந்தும் பாதுகாக்கிறது என்பதை பல ஆய்வுகள் சுட்டி வருகின்றன.

அடுத்த அலையை ஏற்படுத்தி வரும் ஓமிக்ரான் வகைக் கிருமியிலிருந்தும் தடுப்பூசி காக்கிறது.

டிரம்ப் அந்த உண்மையைக் கூறவது மிகவும் முக்கியமானது, ஏனெனில் ஜனநாயகக் கட்சியினரைவிட குடியரசுக் கட்சியினர் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதோடு, கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பை அவர்கள் குறைவாகவே மதிப்பிடுகின்றனர்.

அமெரிக்காவில் ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதைத் தொடர்ந்து அங்கு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 24) மட்டும் 120 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரபலமான டைம்ஸ் சதுக்கக் கொண்டாட்டம் மிகவும் குறைக்கப்பட்டு விட்டது.

டெல்டா வகையின் பாதிப்பின் உச்சத்தைத் தாண்டி, ஓமிக்ரான் பாதிப்பு அங்கு கடுமையாக உள்ளது.

விமான நிறுவனங்களை ஊழியர்கள் இல்லாமல் தவிக்கின்றன.

டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு பிறந்ததும் பந்து உருள்வதைப் பார்க்க அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மேயர் பில் டி பிளாசியோ தள்ளப்பட்டுள்ளார்.

அங்கு புதிய தொற்றுச் சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை நேற்று 185,841ஐ எட்டியுள்ளது. இது முந்தைய நாளை விட 10% அதிகம்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல், அமெரிக்காவில் வசிக்கும் அறுவரில் ஒருவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

#கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!