இந்தியா: 1,700 மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களுக்குத் தொற்று

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக கொவிட்-19 சிகிச்சை மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள். படம்: இபிஏ

புதுடெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் கொவிட்-19 வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. அவ்வகையில், அந்நோய்த்தொற்றுக்கு மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆளாவதும் கூடி வருகிறது.


ஒன்பது மாநிலங்களில், ஒரே வாரத்தில் மட்டும் 1,700க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பிற மருத்துவப் பணியாளர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டதாக ‘இந்தியா டுடே’ ஊடகம் தெரிவித்துள்ளது.


அதிகபட்சமாக, மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளைச் சேர்ந்த 400க்கு மேற்பட்ட மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பீகார், மகாராஷ்டிர மாநிலங்களில் இதுவரை தலா 300க்கு மேற்பட்ட மருத்துவத் துறையினருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், டெல்லி, சண்டிகர், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் மருத்துவத் துறையைச் சேர்ந்த பலர் அந்நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா
கொவிட்-19
கொரோனா
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!