ஓமிக்ரான் பரவலால் பிரிட்டனில் 3.1 மில்லியன் பேர் வேலைக்குச் செல்லவில்லை; சுமார் 2.4 பில்லியன் வெள்ளி இழப்பு

பிரிட்டனில் ஓமிக்ரான் வகைக் கிருமியின் பரவலால் இவ்வாண்டு ஜனவரி முதல் வாரத்தில் மொத்தம் 3.1 மில்லியன் பேர் வேலைக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது. கொவிட்-19 அதிகரிப்பால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வந்த நிலையில் மருத்துவமனைக் கட்டமைப்பின் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் ஓமிக்ரான் வகைக் கிருமியின் பரவலால் இவ்வாண்டு ஜனவரி முதல் வாரத்தில் வேலைக்குச் செல்லாதவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது.

அந்நாட்டில் மொத்தம் 3.1 மில்லியன் பேர் கடந்த வாரம் வேலைக்குச் செல்லாமல் இருந்திருக்கக்கூடும் என்று குட்ஷேப் எனும் பகுப்பாய்வு நிறுவனம் கூறியது.

பிரிட்டிஷ் ஊழியர்களிடையே வேலை தொடர்பான நோய்களையும் அவர்களின் நலனையும் கண்காணித்து வரும் குட்ஷேப் நிறுவனம், புளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்காக இந்த பகுப்பாய்வை நடத்தியது.

அத்துடன் ஒமிக்ரான் பரவல் பிரிட்டிஷ் பொருளியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக குட்ஷேப் கூறியது.

சுமார் 3.1 மில்லியன் பேர் வேலைக்குச் செல்லாததால் பிரிட்டிஷ் பொருளியல் சுமார் 1.3 பில்லியன் பவுண்டு (2.4 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) இழந்ததாக அது மதிப்பிட்டது.

குறிப்பாக ஜனவரி 3 முதல் 9 வரை சுமார் 1.6 மில்லியன் பேர் வேலைக்குச் செல்லவில்லை என்று நிறுவனம் கூறியது.

அது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 18 விழுக்காடு அதிகம்.

பிரிட்டனில் ஜனவரி 4ஆம் தேதி ஆக அதிகமாக 218,724 பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்று பதிவானது.

இவ்வேளையில் அந்நாட்டின் மருத்துவ அறிவியல் துறையில் ஜனவரி முதல் வாரத்தில் சுமார் 562,000 பேர் வேலைக்குச் செல்லவில்லை என்றும் மதிப்பிடப்பட்டது.

கொவிட்-19 அதிகரிப்பால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் அங்கு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையும் மருத்துவமனைக் கட்டமைப்பின் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதையும் இது காட்டுவதாக குட்ஷேப் கூறியது.

#ஓமிக்ரான்
#கொரோனாதொற்று #கொவிட்-19 #covid19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!