இந்தியாவில் மூன்றாவது கொவிட்-19 அலை அடுத்த மூன்று வாரங்களில் உச்சம் தொடலாம்: அறிக்கை

சென்னை வர்த்தக மையத்தில் கொவிட்-19 பராமரிப்பு வசிப்பிடம். படம்: இபிஏ

இந்தியாவில் மூன்றாவது கொவிட்-19 அலை அடுத்த மூன்று வாரங்களில் உச்சத்தை எட்டக்கூடும் என்று ‘எஸ்பிஐ ரிசர்ச்’ செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தொற்றைப் பதிவுசெய்து வந்த 15 மாவட்டங்களில் தற்போது தொற்று வெகுவாகக் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, நிபுணர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

புதிதாக பதிவாகும் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்த அந்த 15 மாவட்டங்களின் பங்கு, ஜனவரியில் 37.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது. டிசம்பரில் அது 67.9 விழுக்காடாக இருந்தது.

என்றாலும், அந்த 15ல் 10 மாவட்டங்களில் பெருநகர்கள் என்பதைச் சுட்டிய அந்த அறிக்கை, பெங்களூரிலும் புனேவிலும் தொற்று விகிதம் இன்னும் அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்டது.

புதிய தொற்றுப் பாதிப்புகளில் கிராமப்புற மாவட்டங்களின் பங்கு ஜனவரியில் 32.6 விழுக்காடாக அதிகரித்திருப்பதையும் ஆய்வு சுட்டியது. டிசம்பரில் அந்த விகிதம் 14.4 விழுக்காடாக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!