பிள்ளைகளிடையே அதிகரிக்கும் தொற்றுப் பாதிப்பு: பாலர் பள்ளிகள் தவிப்பு

5 வயதிலிருந்து 11 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு அதிமாக கிருமித் தொற்று ஏற்படுகிறது (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

சிங்கப்பூரில் கிருமித் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், ஓமிக்ரான் தொற்றால் சிறுவர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாலர் பள்ளிகள் பின்பற்றக்கூடிய சுகாதார விதிமுறைகள் மாறிகொண்டே இருப்பதால், அவற்றை நடைமுறைபடுத்த அதிகச் சிரமத்தை எதிர்நோக்குவதாக ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் உடன் பேசிய பாலர் பள்ளிகள் தெரிவித்தன

தொற்று உறுதிசெய்யப்பட்ட பிள்ளைகள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் ஆகியோரின் தகவல்களைப் பள்ளிகள் சுகாதார அமைச்சிடம் தெரிவிக்கவேண்டும்.

அதோடு, பள்ளிகளில் ஏற்படும் தொற்றுச் சம்பவங்கள் பற்றி பிள்ளைகளின் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.

சுகாதார அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிள்ளைகள் பள்ளிக்கு வருவதற்கு முன் ஏஆர்டி பரிசோதனை செய்திருப்பமை உறுதிசெய்யவேண்டும்.

இந்த விதிமுறைகள் அனைத்தையும் பாலர் பள்ளிகள் பின்பற்றவேண்டும்.

ஆனால் சில வேளைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தொற்று இருப்பதைப் பள்ளிகளுக்குத் தெரிவிக்காதபோது, சவால்கள் ஏற்படுவதாக பள்ளி அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே, பள்ளி ஆசிரியர்களுக்குத் தொற்று ஏற்படும்போது, இன்னும் அதிகமான சிரமங்களைப் பள்ளிகள் எதிர்நோக்குகின்றன.

சில சமயங்களில் பள்ளி தலைமையாசிரியர்கள் பிள்ளைகளுக்குச் சமைக்கவும், பாடம் நடத்தவும் உதவியதாக சில பள்ளிகள் குறிப்பிட்டன.

ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்க்குப் பேட்டியளித்த பெரும்பாலான பாலர் பள்ளிகளில் ஆள்பற்றாக்குறை இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதனால் அன்றாட பாடங்களை முறையாக நடத்துவதில் சிரமம் உள்ளதாக பள்ளி நிர்வாகிகள் கூறினர்.

இன்னும் அதிகமான பிள்ளைகள் தடுப்பூசி போட்டுக்கொண்டால், விதிமுறைகள் சற்று தளர்த்தப்படலாம் என்பது பள்ளிகளின் எதிர்பார்ப்பு.

5 வயதிலிருந்து 11 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் கிருமித் தொற்றுக்கு அதிகமாக ஆளாகின்றனர்.

இதுவரை 192,000க்கு மேற்பட்ட சிறுவர்கள் தடுப்பூசிப் போட்டுக்கொண்டுள்ளனர்.

#கொவிட்-19 #covid19
#சிங்கப்பூர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!