மீண்டும் குறைந்த கொவிட்-19 தொற்று எண்ணிக்கை

சிங்கப்பூரில் புதிதாக கொவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்தது. சனிக்கிழமை (மார்ச் 12) அன்று 12,632 பேருக்குப் புதிதாக கொவிட்-19 தொற்று பதிவானது.  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் புதிதாக கொவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்தது. சனிக்கிழமை (மார்ச் 12) அன்று 12,632 பேருக்குப் புதிதாக கொவிட்-19 தொற்று பதிவானது.

இதனுடன், 1,375 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

ஒப்புநோக்க, வெள்ளிக்கிழமை அன்று 15,345 தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. 1,396 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

வாராந்திர கொவிட்-19 தொற்று பரவல் விகிதம் 0.89ஆக இருந்தது. தொடர்ந்து 11வது நாளாக அந்த விகிதம் 1க்குக்கீழ் உள்ளது. இது கிருமிப் பரவல் குறைந்து வருவதைக் காட்டுகிறது.

மேலும், 10 பேர் உயிர் இழந்ததாக சனிக்கிழமை அன்று சுகாதார அமைச்சு கூறியது.

அத்துடன், 37 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160 பேருக்கு செயற்கை உயிர்வாயு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

#கொரோனா #கொவிட்-19 #சிங்கப்பூர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!