60% சிங்கப்பூரர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது

சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினருக்குக் கொவிட்-19 நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனினும் அதனால் மொத்தமாக சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்று அர்த்தம் இல்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளர்.

இங்கு அதிகாரபூர்வமாக 1.7 மில்லியன் மக்களுக்கு கொவிட்-19 தொற்றியுள்ளது. இது சிங்கப்பூர் மக்கள் தொகையில் 30% ஆகும்.

எனினும் சுகாதார அமைச்சு அவ்வப்போது பலதுறை மருந்தகங்களுக்கு வரும் தொற்று சம்பவங்கள், ஆரோக்கியமான தொண்டூழியர்கள் போன்றோரிடமிருந்து முந்தைய பாதிப்புகளின் அறிகுறிக்காக ரத்த மாதிரிகளைக் கண்காணித்து வருகிறது.

இவற்றின் மூலம் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 60% மக்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது என்று கணிக்கலாம் என்றர் அமைச்சர்.

மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சியா கியன் பெங் இன்று(ஆகஸ்ட் 1) நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அதிகமானோருக்கு நோய் தொற்றி இருப்பதால் சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பரவலாக உள்ளது என்று அர்த்தம் இல்லை என்று அமைச்சர் சுட்டினார்.

#உலகம் #கொவிட்-19 #கிருமித்தொற்று #சிங்கப்பூர் #தடுப்பூசி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!