இருவகை ஆற்றல் உடைய தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

காக்கி புக்கிட் கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி நிலையத்தில் உள்ள ஓர் அறை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இங்குள்ள தடுப்பூசி நிலையங்கள் இன்று வெள்ளிக்கிழமை பரபரப்பாக காணப்பட்டன. மொடர்னா நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட ஸ்பைக்வேக்ஸ் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கி இருப்பதே இதற்குக் காரணம்.

காக்கி புக்கிட் கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி நிலையத்திற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு காலை 10.15 மணிக்கு சென்று நிலவரத்தைக் கண்டறிந்தது. அப்போது 50க்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மூத்தோர்.

இருவகை கொவிட்-19 திரிபுகளைக் குறிவைக்கிறது என்பதால் இருவகை ஆற்றல் உடைய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள விரும்புவதாக மக்களில் சிலர் கூறினர். ‘எக்ஸ்பிபி’ ஓமிக்ரான் துணைத் திரிபு காரணமாக தொற்று அதிகரித்துள்ளதால், கூடுதல் பாதுகாப்பு பெறுவதற்காக தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்திருப்பதாக மற்ற சிலர் கூறினர்.

மொடர்னாவின் இந்த இருவகை ஆற்றல் உடைய தடுப்பூசிக்கு சுகாதார அறிவியல் ஆணையம் செப்டம்பரில் ஒப்புதல் அளித்திருந்தது.

கடைசியாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டு குறைந்தது ஐந்து மாதங்கள் ஆகியிருந்தால் 50 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடையோர் ஒன்பது கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி நிலையங்களில் ஏதாவது ஒன்றுக்குச் சென்று இருவகை ஆற்றல் உடைய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!