பிக் பாஸ் 5: கோதாவில் 'ஜெர்மனி' மதுமிதா

ஐந்தாம் முறையாக இடம்பெறும் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டுள்ளார் ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் மதுமிதா ரகுநாதன்.


மதுமிதாவின் பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.


தற்போது ஜெர்மனியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மதுமிதா, ஆடை வடிவமைப்பாளர், விளம்பர அழகி எனப் பன்முகம் கொண்டவர். இப்போது, கலைத்துறையிலும் கால்பதித்து இருப்பதாக இவர் கூறுகிறார்.


ஆஸ்திரேலியாவில் ஆடை வடிவமைப்புப் படிப்பையும் முடித்துள்ள மதுமிதா, நிகழ்ச்சித் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசனுக்குப் பூ வேலைப்பாட்டுடன் கூடிய கழுத்துப் பட்டையை (tie) பரிசாக அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட கமல், அதை ஒருநாள் நிகழ்ச்சிக்கு அணிந்துவருவதாக உறுதியளித்தார்.


‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியைக் காட்டிலும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தம்மை மிகவும் கவர்ந்துள்ளதால் அதில் பங்கேற்க விரும்பியதாகக் குறிப்பிட்டார் மதுமிதா.


‘எஞ்சாய் எஞ்சாமி’ புகழ் பாடகி ‘தீ’யின் தோழி இவர்.


உலகெங்கும் வாழும் தமிழர்கள், மதுமிதாவிற்குப் பெருவாரியாக ஆதரவளித்து வெற்றிபெறச் செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!