சுடச் சுடச் செய்திகள்

‘பாலர் கல்வியில் பெற்றோர், ஆசிரியரின் கூட்டு முயற்சி அவசியம்’

எஸ்.வெங்கடேஷ்வரன்

 தமிழைச் சுவாரசியமான முறையில் கற்பிக்க ஈசூன் பிளோக் 796Aஇல் அமைந்திருக்கும் ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பல திட்டங்களைச் சிறார்களின் பாடத்திட்டத்தில் புகுத்தியுள்ளது.  
சுமார் ஒன்பது ஆண்டுகளாக ஈசூன் பிளோக் 796A ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பள்ளியில் பணிபுரிந்து, தற்போது நிர்வாகத் தலைமை ஆசிரியராக இருக்கிறார் திருமதி கோகிலவாணி அஞ்சப்பன், 39. கிட்டதட்ட 20 ஆண்டுகளாகக் கற்றல் துறையில் பணி புரிந்து அவரும் அவர் கடந்த 15 ஆன்டுகளாகப் பாலர் கல்வித் துறையில் பணியாற்றி வருகிறார். 
 
சில மாணவர்களின் பெற்றோர் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது தமது கற்றல் பயணத்தில் எதிர்நோக்கிய சவால்களில் ஒன்று என்று கூறினார் திருமதி கோகிலவாணி. சில பெற்றோர், தமிழ் மொழி எதிர்காலத்தில் வேலை தேடத் தேவைப்படாது என்று எண்ணி அதனால் தமிழ்ப் பயனில்லாத மொழி என்ற தவறான எண்ணம் கொண்டு, தம் பள்ளைகளைச் சீன மொழி கற்க விண்ணப்பிக்கிறார்கள் என்றார் அவர்.   
“தமிழ் என்பது வாழ்க்கைக்குப் பயன்-படும் மொழி, ஆகையால் முதற்கொண்டு வீட்டில் பெற்றோர் அதை அவர்களின் குழந்தைகளுடன் பயன்படுத்துவது அவசியம். சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், தேசிய மரபுடைமைக் கழகம், போன்ற வெவ்வேறு அமைப்புகளுடன் ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பள்ளி இணைந்து தமிழைச் செயல்முறை மூலம் கற்றுக்கொடுக்கிறோம்,” என்றார் திருமதி கோகிலவாணி.    
திருமதி கோகிலவாணியில் தலைமையில் இயங்கிய ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பள்ளி 2016ஆம் ஆண்டில் பாலர் கல்வி மேம்பாட்டு வாரியம் (இசிடிஏ) வழங்கிய ‘ஸ்பார்க்’ என்னும் கல்வி விருதைப் பெற்றது. இவ்விருது தரமான கல்வியும் சேவையும் வழங்கும் பாலர் பள்ளிகளை அங்கீகரிக்கும் நோக்கத்தில் 2013ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. 
 
சென்ற ஆண்டு நிர்வாகத் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றார் திருமதி கோகிலவாணி. அன்பால் எதையும் சாதிக்கலாம் என்ற் எண்ணுபவர் அவர். 
ஒரு சமயத்தில் ஒர் ஐந்து வயது சிறுவன், சிறுப்பு தேவைகளால் ஏற்பட்ட சவால்மிக்க நடத்தையால் பாலர் கல்லியிலிருந்து விலக நினைத்தார். அந்தச் சிறுவனின் திறன் மீது இருந்த நம்பிக்கையால், அவரின் குடுமபத்துடன் சேர்ந்து அவனது நடத்தையைச் சரிசெய்ய ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ ஆசிரியர்கள் முயற்சி செய்தனர். ஒர் ஆண்டுக்குப் பிறகு அந்தச் சிறுவன் பல மடங்கு முன்னேற்றம் கண்டார் என்றார் திருமதி கோகிலவாணி நினைவு கூர்ந்தார்.   
“கற்றல் துறையின் சவால்களைச் சமாளிக்கவும் சிறார்களின் முன்னேற்றத்தையும் மேம்பாட்டையும் கவனிக்கவும், பெற்றோருடன் ஆசிரியர்கள் அடிக்கடி கலந்துரையாடுவது உதவும்,” என்று குறிப்பிட்டார் திருமதி கோகிலவாணி. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon