வருமுன் காக்க மூவகைப் பரிசோதனை

வயது தொடர்பான செயலாற்றல் சரிவை முன்கூட்டியே கண்டறிய சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனை நோக்கம் கொண்டுள்ளது. தொடக்கத்திலேயே அறிகுறிகள் கண்டறியப்படாவிட்டால் தினசரி வாழ்க்கையில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இர்ஷாத் முஹம்மது 

மூப்படையும் மனிதர்களுக்கு உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் சற்று குன்றுவது இயல்பு. பொதுவாகவே வேகம் குறைந்து உடல் பலவீனமடைந்து தடுமாற்றம் ஏற்படுவதும் இயல்பாகும். அந்த வரிசையில் கண் பார்வை மோசமடைவது, செவிப்புலன் சரிவது, வாய் சுகாதாரம் கெடுவது போன்ற சுகாதார செயல்பாட்டுக் குறைபாடுகளுக்கும் மூப்படைதலுக்கும் தொடர்பு உள்ளது. 

மூத்தோர்களின் உடல்நலனையும் வாழ்க்கைத் தரத்தையும் இத் தகைய மருத்துவ நிலைகள் பாதிக்கக்கூடும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத் தில் வெள்ளித் திரைத் திட்டம் எனும் தேசிய அளவிலான சமூக சுகாதார செயல்பாட்டுப் பரிசோ தனைத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மூத்தோரின் கண்பார்வை, செவிப்புலன், வாய் சுகாதாரத்தைப் பரிசோதனை செய்து ஆரம்பக் கட்டத்திலேயே செயல்பாட்டுச் சரிவை கண்டறிய இந்தத் திட்டம் வழிவகுக்கிறது. தேவை ஏற்பட் டால் தக்க நேரத்தில் அதற்குத் தீர்வு காணவும் இந்தத் திட்டம் உதவும். மூக்குக் கண்ணாடி, செவிச் சாதனம், பொய்ப்பற்கள் போன்ற உதவிச் சாதனங்கள் தேவைப்படும் மூத்தோர் இந்தத் திட்டத்தின் வாயிலாக சமூகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பராமரிப்புச் சேவைகளுடன் இணைக்கப்படுவார்கள். அதன்மூலம் குறைந்த விலையில் சாதனங்களை அவர்கள் பெற்று சமூகத்திலேயே ஆரோக்கியமாக மூப்படையலாம்.

சுகாதார செயல்பாட்டுப் பரிசோ தனையால் பலனடைந்த மூத்தோரில் ஒருவர் 67 வயது திருவாட்டி சகுந்தலை. மூன்றாண்டுகளுக்கு முன்னர் கண் சிகிச்சை செய்துள்ள அவருக்கு மீண்டும் கண்பார்வை சற்று மங்கலாக இருந்துள்ளது. ஆனால் அது கண்களில் கோளாறுதானா என்பது பற்றி அவருக்குச் சரியாகத் தெரியவில்லை. ஏற்கெனவே கண் சிகிச்சை திருவாட்டி சகுந்தலைக்குச் செய்யப் பட்டுள்ளதால் அவரது பார்வைத் திறனுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என நம்பிக்கைக் கொண்டிருந்தார் அவர்.  யீசூன் வட்டாரத்தில் தங்கி உள்ள அவர், வீட்டுக்கு அருகில் யீசூன் ரிங் ரோடு புளோக் 115ல் அமைந்துள்ள ‘வெல்னஸ் கம்போங்’ எனும் மூத்தோர் பராமரிப்பு நிலையத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம். 
மூத்தோருக்குப் பல நடவடிக்கை கள், நிகழ்ச்சிகள், பல தலைப்புக் களில் உரைகள் அங்கு நடத்தப் படுவதால் அவர் அங்கு தமது நண்பர்களுடன் செல்வதை வழக்க மாகக் கொண்டுள்ளார். 

அதுபோன்ற ஒரு வருகையின் போது அந்த நிலையத்தில் நடை பெற்ற சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனையில் திருவாட்டி சகுந்தலை ஈடுபட்டார். 
அதன்மூலம் அவரது கண்க ளில் ஏதோ சில குறைபாடுகள் இருப்பதை அறிந்து, அட்மிரல்டி மருத்துவ மையத்திற்குச் சென்று மருத்துவ உதவியை நாடுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற திருவாட்டி சகுந்தலைக்குக் கண் பரிசோதனை செய்யப்பட்டுக் கூ டெக் புவாட் மருத்துவமனையில் கண்பார்வை யைச் சரிசெய்ய சிகிச்சை அளிக்கப்பட்டது.  கடந்த 12 ஆண்டுகளாக மூக்குக் கண்ணாடி அணிந்து வந்த திருவாட்டி சகுந்தலை, இப்போது இந்தச் சிகிச்சைக்குப் பின் மூக்குக் கண்ணாடி அணி வதில்லை. தெளிவான கண்பார் வையைக் கொண்டு தமது ஆரோக்கிய வாழ்வை அவர் பின்  பற்றிவருகிறார். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர் கள் இந்த வெள்ளித் திரைத் திட்டத்தால் பலனடையலாம். முன்னோடி தலைமுறைத் திட்டத்தின் அட்டை வைத்திருப் போருக்கு இந்தப் பரிசோதனைகள் இலவசம். ‘சாஸ்’ அட்டை வைத்திருப் போருக்கு $2 மட்டுமே. மற்ற சிங்கப்பூரர்கள் $5 கட்டணம் செலுத்தவேண்டும். 

 

முக்கிய குறிப்புகள்
வெள்ளித் திரைத் திட்டத்தின் கீழ் உங்கள் வீடமைப்புப் பேட்டையில் நடத்தப்படும் சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனையில் ஈடுபடுங்கள். 
projectsilverscreen.sg எனும் இணையத் தளம் மூலமாகவோ 1800 650 6060 எனும் தொலைபேசி எண் மூலமாகவோ சிங்கப்பூர் சில்வர் லைனைப் பொது விடுமுறைகளைத் தவிர திங்கள் முதல் வெள்ளி வரை  காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தொடர்புகொள்ளலாம்.  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon