செல்ஃபி எடுத்ததால் தம்பதி மரணம் என உறவினர் தகவல்

சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் உள்ள யோஸ்மைட் என்ற தேசியப் பூங்காவின் தஃப்ட் பாய்ண்ட் என்னும் மலை உச்சியி லிருந்து கடந்த வாரம் ஓர் இந்திய தம்பதி கீழே விழுந்து மாண்டனர். இவர்களின் உடல்கள் பூங்காவின் 800 அடி பள்ளத்தில் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது.
அதன் பின் நடந்த விசாரணையில் இவர்கள் பெயர் விஷ்ணு விஷ்வானந்த் 29, மீனாட்சி மூர்த்தி, 30, என்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந் தது. இருப்பினும் தம்பதியின் இறப்புக்கான காரணம் குறித்துத் தெரியாமல் புலனாய்வு அதிகாரிகள் திணறி வந்தனர்.
எப்படி இந்தத் தம்பதி கீழே விழுந்தார்கள், எதற்காகக் விழுந்தார்கள், இது விபத்தா அல்லது கொலையா என்ற பல கோணங் களில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில். இந்தச் சம்பவம் குறித்து 'ஃபாக்ஸ் நியூஸ்' ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள விஷ்ணு விஷ்வானந்தின் சகோ தரர் ஜிஷ்ணு, "அவர்கள் இருவரும் செல்ஃபி எடுக்க முயன்றபோது தான் கீழே விழுந்திருக்க வேண் டும். மிகவும் புகழ்பெற்ற கலிஃ போர்னியா பூங்காவின் உயரமான இடங்களில் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. அந்தப் பகுதிகளில் ஒரு கண் காணிப்புக் புகைப்படக் கருவிகூட இல்லை. உடல்கள் மீட்கப்பட்ட இடத்தில் ஒரு புகைப்படக் கருவிவும் ட்ரைபாடும் இருந்துள்ளன," எனக் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!