புதிய ஆபரணத் தொகுப்பு அறிமுகம்

தங்கம், வைரம், நவரத்தின ஆபரண நகைகளின் புதிய தொகுப்பை மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
தீபாவளியை முன்னிட்டு வெளிவந்துள்ள 200க்கும் மேற்பட்ட புதிய ஆபரணங்களை அந்நிறு வனத்தின் தூதுவரான பிரபல இந்தித் திரைப்பட நடிகைக் கரீனா கபூர் கான் அறிமுகப்படுத்தினார். 
உலகின் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ், இவ்வாண்டு அதன் 25ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. பத்து நாடுகளில் 250க்கும் மேற்பட்ட நகைக்கடைகளைக் கொண்டுள்ள அந்த நிறுவனம், புதிய வடிவமைப்பிலான நகைகள் மத்திய கிழக்கு, தூர கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள கடைகளில் மட்டுமே கிடைக்கும் என்று கூறியுள்ளது. 
எதிர்வரும் நவம்பர் 11ஆம் தேதி வரையில் 250,000 தங்கக் காசுகளை வெல்லும் பிரசாரம் சிங்கப்பூரில் நடப்பில் இருக்கும். 
$1,000 மதிப்பிலான தங்க நகைகளை வாங்குவோருக்கு ‘ஸ்கிரேட்ச் அண்ட் வின்’ அதிர்ஷ்டக் கூப்பன் வழங்கப்படும். அதன்மூலம் ஒரு தங்கக் காசு உறுதிச் செய்யப்படுவதுடன் 100 தங்கக் காசுகள் வரையில் வெல்லவும் வாய்ப்புள்ளது. 
$1,000 மதிப்பிலான வைர ஆப ரணங்கள் வாங்குவோருக்கு ஒரு கிராம் தங்கக் காசு இலவசமாக வழங்கப்படுகிறது. 
அத்துடன் மேலும் பல சலுகைக் களையும் வாடிக்கையாளர்களுக் காக மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் நடப்பில் வைத்துள்ளது.