தரம், சுவை, நறுமணம், ஆரோக்கியம் நிறைந்த அனார்கலி சூப்பர் பாஸ்மதி அரிசி

கடந்த 25 ஆண்டுகளாக சிங்கப் பூரில் பிரபலமாகச் செயல்பட்டு வருகிறது அனார்கலி நிறுவனம். தரம், சுவை, நறுமணத்துடன் கூடிய இந்த அனார்கலி பாஸ்மதி அரிசி பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. 
அதிகமானோர் சிறப்பு விழாக் களிலும் வழக்கமான நாட்களிலும் இந்த ரக அரிசியைப் பயன்படுத்தி வருகின்றனர். 
சிங்கப்பூரின் பிரதான பேரங்காடிகளிலும் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பல சரக்குக்கடைகளிலும் அனார்கலி பாஸ்மதி அரிசியை வாங்கலாம். 
இரண்டு ஐந்து கிலோ அனார்கலி பாஸ்மதி அரிசியை ங் சியோங் கடைத்தொகுதியில் வாங்கினால் ஸ்டீம் குக்கர் ஒன்று இலவசமாகப் பெறலாம். 
தன்மை மிகுந்த நீளமான அரிசிகளைக் கொண்ட இந்த அனார்கலி, பாஸ்மதி அரிசி வகைகளில் உயர்தர வகையைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத் தில் இமயமலை அடிவாரத்தி லுள்ள விளைச்சல் நிலத்தில் அறு வடை செய்யப்படும் இந்த அரிசி வகைகள் சுத்தமாகவும் ஆரோக் கியமாகவும் இருக்கின்றன. மேலும் அவை அறுவடை செய்து இரண்டு ஆண்டுகள் பதப்படுத்தப்பட்டவை.
பாஸ்மதி அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த அரிசி வகையாக சோதனையின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக உயரச் செய்யும் தன்மையைக் கொண்டுள்ள இந்த வகை அரிசி யைக்கொண்டு பிரியாணி, வெள்ளைச் சோறு, நாசி லெமாக், சிக்கன் ரைஸ் போன்ற பலவகை உணவுகளையும் சமைக்கலாம்.