கிறிஸ்மஸ் மாதத்தைக் கொண்டாட 2000க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டாய்ஸ் 'ஆர்' அஸ் கடைகளில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. 

எல்லா வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் ஆர்வங்களுக்கு ஏற்ப 130 நிறுவனங்களின் 2000 மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள் டாய்ஸ் 'ஆர்' அஸ் கடைகளில் விற்கப்படும்.
 
இம்மாதம் இறுதியில் 'கிரேட் வர்ல்ட் சிட்டியில் புதிய டாய்ஸ் 'ஆர்' அஸ் கிளை திறக்கப்படவிருக்கிறது.

அங்கு சிறுவர்களுக்குப் பிடித்த அசல் அளவு விளையாட்டுப் பொருட்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.

இம்மாதம் 'விவோ சிட்டி'யில் அமைந்துள்ள கிளையில் 'ட்ரான்ஸ்ஃபாமர் பம்பல்பீ'யுடன்  புகைப்படம் எடுத்துகொள்ளும் வாய்ப்பு அனைவருக்கும் அளிக்கப்படுகிறது. அதனின் சிறப்பு அம்சமாக இம்மாதம் 21ஆம் தேதி காலை இரண்டு மணி வரை கடை திறந்திருக்கும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளதால் இக்கிளையில் புகைப்படம் எடுக்கும் நேரமும் அதிகரிக்கும்.

'க்லப் ரேன்போ' போன்ற அமைப்புகளுடன், டாய்ஸ் 'ஆர்' அஸ் நிறுவனம் கூட்டணி வைத்துள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் வாங்கும் விளையாட்டுப் பொருள்களை பரிசாக மடிக்கும் சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த அமைப்புகளுக்குச் சிறு நன்கொடை அளிக்கலாம். 

படம்: தி நியூ பேப்பர்