2019ஆம் ஆண்டில் புகைமூட்டம் இருக்காது என இந்தோனீசியா நம்பிக்கை

அடுத்த ஆண்டு தென்கிழக்காசியா வட்டாரம் புகைமூட்டத்தால் பாதிப்படையாது என இந்தோனீசிய அதிகாரி தெரிவித்துள்ளார். 

கடந்த 2015ஆம் ஆண்டு இந்த வட்டாரமே மோசமான புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. ‘எல் நீனோ’ எனும் பருவநிலை மாற்றத்தால் வழக்கத்தைவிட வரட்சியான நிலை ஏற்பட்டு அப்போது காட்டுத்தீ கட்டுக்குள் அடங்காமல் போனது. 

அடுத்த மூன்று மாதங்களில் வரட்சியான பருவநிலை ஏற்படக்கூடும் என்றாலும் அதைக் கையாள முடியும் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளார் இந்தோனீசியா அதிகாரி திரு நசீர் ஃபொயியாட் கூறியுள்ளார். 

ஏற்கெனவே நடந்த மோசமான காட்டுத்தீ சம்பவத்தையடுத்து எளிதாக தீ மூட்டக்கூடிய இடங்களில் இந்தோனீசியா தற்காப்பு முயற்சிகளை எடுத்துள்ளது. 

மேற்கு பசிஃபிக் வட்டாரங்களில், குறிப்பாக சிங்கப்பூர், இந்தோனீசியாவில் வழக்கத்தைவிட சூடான, வரட்சியான பருவநிலை ஏற்படுவதே ’எல் நினோ’என்பதாகும். 

இன்னும் மூன்று மாதங்களில் அந்த நிலை ஏற்படுவதற்கான 80% வாய்ப்புள்ளதாக அமெரிக்க தேசிய சுற்றுப்புற அமைப்பு முன்னுரைத்துள்ளது. 

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்