குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு மேசை, நாற்காலி

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், வீட்டில் இருந்து கற்றலில் ஈடுபடுவதற்காக மடக்கக்கூடிய இலவச மேசை, நாற்காலிகளை சீனர் மேம்பாட்டு உதவி மன்றம் (சிடிஏசி) வழங்கியுள்ளது. 

இத்திட்டத்தின் வழி 930 குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி செல்லும் பிள்ளைகள் பலனடைவர். 

வீட்டில் தகுந்த கற்றல் சூழல் அமைந்திட இந்த இலவச மேசை, நாற்காலிகள் உதவும் என்றார் கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூலிங். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

சிங்கப்பூரில் மேலும் 14 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் 2 சம்பவங்கள்

சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 24) நண்பகல் நிலவரப்படி புதிதாக 14 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,965 ஆகியுள்ளது.

இன்று பதிவான தொற்றுச் சம்பவங்களில் இரண்டு உள்ளூர் சம்பவத்திலும் ஒன்று விடுதிவாசிக்கும் கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 11 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். 

நேற்று பதிவான 10 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

அவர்கள் பங்ளாதேஷ், பிரான்ஸ், பிலிப்பீன்ஸ், ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வத்தவர்கள்.

அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், அறுவர் வேலை அனுமதி அட்டை உடையவர்கள், இருவர் சார்ந்திருப்போர் அட்டையில் இருப்பவர்கள்; மற்றவர் மாணவர் அனுமதி அட்டை வைத்திருப்பவர்.

இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 28 பேர் உயிரிழந்தனர்.

அனைத்துலக அளவில் 41.6 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.1 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

ஈசூனில் மரம் வெட்டியபோது பாரந்தூக்கி கவிழ்ந்து ஊழியர் காயம்

பாரந்தூக்கி ஒன்று கவிழ்ந்ததில் அதில் ஏறி பணிபுரிந்துகொண்டிருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.

ஈசூன் ஸ்திரீட் 81ல் உள்ள புளோக் 828க்கு அருகில் லாரி ஒன்றுடன் இணைக்கப்பட்டிருந்த அந்த பாரந்தூக்கி நான்கு மாடி உயரத்துக்கு உயர்த்தப்பட்டிருந்தது. அதில் ஏறிய ஊழியர், மரத்தின் கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அந்தப் பாரந்தூக்கி கீழே இறக்கப்பட்டபோது, மூன்று, நான்கு மாடி உயரத்துக்கிடையே இருக்கும்போது அந்த பாரந்தூக்கி கவிழத் தொடங்கியது என நீ சூன் நகரமன்றம் நேற்று தெரிவித்தது.

அந்த பாரந்தூக்கி கீழே விழுந்தபோது அந்த ஊழியர் அதனுடன் பட்டை மூலம் பிணைக்கப்பட்டிருந்தார்.

கீழே விழுந்த அவருக்கு சிராய்ப்புக் காயம் ஏற்பட்டது. அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த வியாழக்கிழமை மாலை 3.55 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தது.

அந்த ஊழியருக்கு உடல் நலம் சீராக இருப்பதாகவும் அவருக்கு 5 நாட்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும் நகரமன்றம் தெரிவித்தது.

ஊழியர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் எனவும் தேவைப்பட்டால் உதவி நல்கப்படும் என்றும் நகரமன்றம் தெரிவித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

மேலும் ஓங்கியது இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் அதிகார பலம்

இரண்டு நாள் கடும் விவாதத்தில் எதிர்க்கட்சியினரால் அரசியலமைப்பின் ‘சர்வாதிகாரி’ என்று குற்றம்சாட்டப்பட்டார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே.

பின் ‘20ஏ’ அரசியலமைப்பு திருத்தத்தின் வாக்கெடுப்பில் உயர் அதிகாரிகளை நியமிக்கவும் சட்டமன்றத்தைக் கலைக்கவும் கணிசமான அதிகாரத்தைப் பெற்றுவிட்டார். 

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபருக்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஆளும் இலங்கை மக்கள் கட்சியின் ஓர் உறுப்பினர் திருத்தச் சட்டத்துக்குத் தேவையான பெரும்பான்மையைக் கொடுக்காதபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் எண்மர் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

இந்நிலையில், பிரதமரான தம் சகோதரர் மகிந்த ராஜபக்சே உட்பட எந்த அமைச்சரையும் அதிபர் இனி பணிநீக்கம் செய்ய முடியும். 

அத்துடன் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் இரண்டரை ஆண்டு முடிந்த நிலையிலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் அதிபர் கோத்தபய ராஜபக்சே பெற்றுள்ளார். 

இந்நிலையில், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “இந்த மசோதாவால் சர்வாதிகாரி ஆட்சி மட்டும் இருக்காது, ஒரு சர்வாதிகாரி உருவாகியிருப்பார்,” என்றார். 

சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை அதிபரான இவர், உடனே முன்னாள் அதிபரும் தம் சகோதரருமான மகிந்த ராஜபக்சேயை பிரதமராக்கினார். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

‘நான் மெட்ராஸ் பொண்ணு’

தமி­ழில் ‘இமைக்கா நொடி­கள்’, ‘அடங்­க­மறு’, ‘அயோக்யா’, ‘சங்­கத்­த­மி­ழன்’ என்று நான்கு படங்­களை நடித்­துள்ள ராஷி­கண்ணா ரசி­கர்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மாகி உள்­ளார்.

தற்­போது ‘அரண்­மனை-3’, ‘மேதாவி’, ‘துக்­ளக் தர்­பார்’ உள்­ளிட்ட படங்­களில் நடித்து வரு­கி­றார்.

தமி­ழில் பெரிய வெற்­றிப் படத்தை தர வேண்­டும் என்ற விருப்­பம் இன்­னும் நிறை­வே­ற­வில்லை என்று சொல்­ப­வர், தற்­போது அது மட்­டுமே தமது ஒரே இலக்கு என்­கி­றார்.

தமி­ழில் பேசி நடித்­தால் ரசி­கர்­க­ளின் ஆத­ரவு அதி­க­ரிக்­கும் என்று நலன்­வி­ரும்­பி­கள் சிலர் அறி­வுரை கூறி­யதை அடுத்து தமிழ் கற்று வரு­கி­றா­ராம் ராஷி. அது மட்­டு­மல்ல, எப்­போது சென்­னைக்கு வந்­தா­லும் அனை­வ­ரி­ட­மும் தமி­ழில்­தான் பேசு­கி­றார்.

“ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்ட போது உண்­மை­யி­லேயே எரிச்­ச­லாக இருந்­தது. இரண்­டா­வது மாதமே இணை­யம் வழி தமிழ் வகுப்­பில் சேர்ந்து தமிழ் படிக்க ஆரம்­பித்­து­விட்­டேன்.

“எனது தமிழ் ஆசி­ரியை லீலா சென்­னை­யில் தான் இருக்­கி­றார். அவ­ரது பயிற்­சி­யால் மற்­ற­வர்­கள் தமி­ழில் பேசு­வ­தைப் புரிந்­து­கொண்டு பதி­ல­ளிக்க ஆரம்­பித்­துள்­ளேன்.

“எனது அடுத்த படம் முதல் நானே தமி­ழில் பின்­னணி குரல் கொடுக்க முடி­யும் என நம்­பு­கி­றேன்,” என்று சொல்­லும் ராஷிக்கு, இசை­யி­லும் பெரும் ஆர்­வம் உண்­டாம்.

இணை­யம் வழி ‘கித்தார்’ பயிற்­சி­யும் பெற்று வரு­கி­றார். அன்­றா­டம் தமிழ் ஆசி­ரியை வழங்­கும் வீட்­டுப் பாடங்­க­ளை­யும் தவ­றா­மல் செய்து முடிக்­கி­றா­ராம்.

“முக்­கி­ய­மான வார்த்­தை­களை எழுதி வைத்து மனப்­பா­டம் செய்­கி­றேன். அப்­போது தான் சர­ள­மா­கப் பேச வரும் என்று எனது ஆசி­ரியை அறி­வு­றுத்தி உள்­ளார்,” என்று சொல்­லும் ராஷிக்கு, மணி­ரத்­னம், வெற்­றி­மா­றன் ஆகி­யோ­ரின் இயக்­கத்­தில் நடிக்க வேண்­டும் என்­பது நீண்ட நாள் விருப்­பங்­களில் ஒன்­றாம்.

மேலும் இளம் இயக்­கு­நர்­களில் அட்­லியை ரொம்­பப் பிடிக்­கு­மாம்.

“மிகக் குறு­கிய காலத்­தி­லேயே இந்­திப் படத்தை இயக்­கும் வாய்ப்பை பெற்­றுள்­ளார் அட்லி. அத­னால் அவ­ரது இயக்­கத்­தில் நடிக்க விரும்­பு­கி­றேன். வெற்­றி­மா­ற­னும் வித்­தி­யா­ச­மான கதைக்­களங்­க­ளு­டன் படங்­களை உரு­வாக்­கு­கி­றார்.

“மணி­ரத்­னம் படத்­தில் நடிக்க வேண்­டும் என்­பது அனைத்து கலை­ஞர்­க­ளுக்­குமே உள்ள ஆசை. நானும் அதற்கு விதி­வி­லக்­கல்ல,” என்று சொல்­லும் ராஷி கண்ணா, கிசு­கி­சுக்­களை கண்­டு­கொள்ள மாட்­டா­ராம்.

அதே சம­யம் தன்­னைப் பற்றி தவ­றான தக­வ­லைத் தெரி­வித்­தால் கோபம் வந்­து­வி­டும் என்­கி­றார். அண்­மை­யில் உடல் எடை­யைக் குறைப்­ப­தற்­காக சிகிச்சை பெற்­ற­தாக வெளி­யான தக­வல் ராஷி­யைக் கோபப்­பட வைத்­துள்­ளது.

சக நடி­கை­களில் தமன்­னா­வி­டம் தான் திரை­யு­ல­கம் சார்ந்த விஷ­யங்­கள் குறித்து பேசு­கி­றார்.

‘பெங்­கால் டைகர்’ படத்­தில் நடிக்­கும்­போது அழ­குப் பரா­ம­ரிப்பு, மன­ந­லம் குறித்து பல்­வேறு ஆலோ­ச­னை­களை வழங்­கி­னா­ராம் தமன்னா. இன்று வரை அவற்றை தவ­றா­மல் கடைப்­பி­டித்து வரு­வ­தா­கச் சொல்­கி­றார்.

“சிகிச்சை பெறா­மல் உடல் கொழுப்­பைக் குறைத்­தது எப்­படி என்று பல­ரும் ஆச்­ச­ரி­யத்­து­டன் விசா­ரிக்­கி­றார்­கள். என்­னைப் பொறுத்­த­வரை கொழுப்­பைக் குறைக்க வேண்­டும் என்­றால் முத­லில் நம் உட­லில் கொழுப்பு சேர வேண்­டும். அத­னால் தின­மும் காலை­யில் ஒரு தேக்­க­ரண்டி நெய் எடுத்­துக் கொள்­வேன். பின்­னர் தீவிர உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­டு­வேன்,” என்­கி­றார் ராஷி கண்ணா.

கிரா­மத்­துப் பெண்­ணாக நடிக்க வேண்­டும் என்­பது ராஷி­யின் ஆசை­களில் ஒன்று. அதே போல் விஜய்க்கு ஜோடி­யாக வேண்­டும் என்­றும் விரும்­பு­கி­றா­ராம்.

காதல், திரு­ம­ணம் தொடர்­பான கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து சலித்­துப் போய்­விட்­ட­தாம்.

நடி­கை­க­ளி­டம் மட்­டும் இந்­தக் கேள்­வியை எழுப்­பு­வது எரிச்­ச­லூட்­டு­வ­தா­க­வும் சொல்­கி­றார்.

“சினி­மா­வில் நடிக்­கத் தொடங்­கிய பிறகு அடிக்­கடி சென்­னைக்கு வந்து போகி­றேன். ‘சென்னை’ என்று சொல்­வ­தை­விட ‘மெட்­ராஸ்’ என்­பது­தான் பிடித்­தி­ருக்­கிறது.

“இப்­போது நான் ‘மெட்ராஸ்’ பெண்­ணா­கி­விட்­டேன்,” என்­று உற்சாகத்துடன் சொல்கி­றார் ராஷி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

இரு நண்பர்களின் வாழ்க்கையை விவரிக்கும் படம்

நடிகர் ஜீவாவின் குடும்பத் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் தயாரிக்கும் புதிய படம் ‘களத்தில் சந்திப்போம்’.

ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்குகிறார்.

ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர்.

ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். “இது நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம். கபடி வீரர்களான ஜீவாவும் அருள்நிதியும் சிறு வயது முதலே நண்பர்கள்.

மேலும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். இருவரது வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இப்படம்,” என்கிறார் இயக்குநர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

மலேசியா: கொரோனாவால் பத்துப் பேர் மரணம்

மலே­சி­யா­வில் இதற்­கு­முன் இல்­லாத வகை­யில் கொவிட்-19 தொற்­றால் ஒரே நாளில் பத்­துப் பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இதை­ய­டுத்து, அங்கு கிரு­மித் தொற்­றால் மாண்­டோர் எண்­ணிக்கை 214ஆக அதி­க­ரித்­தது.

நேற்று முன்­தி­னம் 800க்கு மேற்­பட்­டோரை கொரோனா தொற்­றிய நிலை­யில், நேற்று அந்த எண்­ணிக்கை 710ஆகப் பதி­வா­னது.

ஆக அதி­க­மாக சாபா மாநி­லத்­தில் 528 பேர் கிரு­மித்­தொற்­றால் புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­ட­னர். சிலாங்கூர் (62), பினாங்கு (39), நெகிரி செம்பிலான் (37), லபுவான் (19) ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களைப் பிடித்தன.

மலேசியாவில் இதுவரை 24,514 பேரை கொரோனா தொற்றிவிட்ட நிலையில் அவர்களில் 15,884 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டனர். இப்போது 90 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

சீனாவிலிருந்து கொரோனா தூசு; வடகொரியா எச்சரிக்கை

சீனாவிலிருந்து வீசும் ‘மஞ்சள்’ தூசில் கொவிட்-19 கிருமி இருக்கலாம் என்பதால் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி தன் மக்களை வடகொரியா எச்சரித்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் தலைநகர் பியோங்யாங்கில் தெருக்கள் முழுவதும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. தன் நாட்டில் கொரோனா தொற்று அறவே இல்லை என வடகொரியா கூறி வருகிறது. ஆயினும், கடந்த ஜனவரி முதலே எல்லைகளை மூடியும் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதித்தும் அந்நாடு அதிக விழிப்புடன் இருந்து வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

சீனாவுடன் நெருக்கம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

 சீனாவுட­னான நெருக்கத்தைக் குறைத்­துக்­கொள்­ளும்­படி இலங்­கையை அமெ­ரிக்கா மறை­மு­க­மாக எச்சரித்துள்ளது.

அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் மைக் பொம்­பியோ அடுத்த வாரம் இந்­தியா, இலங்கை, மாலத்­தீவு, இந்­தோ­னீ­சியா ஆகிய ஆசிய நாடு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­வி­ருக்­கி­றார்.

சீனா­விற்கு எதி­ராக ஆத­ரவு திரட்­டு­வதே அவ­ரது இந்­தப் பய­ணத்­தின் முக்­கிய நோக்­க­மாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், சீனாவை நேர­டி­யா­கக் குறிப்­பி­டா­மல், பொரு­ளி­யல் ஒத்துழைப்பிற்காக எந்­நாட்­டு­டன் கைகோக்­கி­றோம் என்­ப­தில் கவனம் தேவை என்று அமெ­ரிக்கா இலங்­கையை எச்­ச­ரித்துள்ளது.

“பார­பட்­சமான, வெளிப்­ப­டைத்­தன்­மை­யற்ற நடை­மு­றை­க­ளைப் போல அன்றி வெளிப்­ப­டை­யான, நிலைத்தன்மைமிக்க பொரு­ளி­யல் வளர்ச்­சித் தெரி­வு­களை நாங்­கள் முன்­வைக்­கி­றோம். அதனை மறு­ஆய்வு செய்­யும்­படி இலங்­கையை நாங்­கள் ஊக்­கு­விக்­கி­றோம்,” என்று அமெ­ரிக்க வெளியுறவு அமைச்சு அதிகாரி டீன் தாம்­சன் தெரி­வித்து உள்ளார்.

“தனது நீண்­ட­கால வளப்­பத்திற்­கான பொரு­ளி­யல் சுதந்­தி­ரத்­தை அடைந்திட கடி­ன­மான, ஆனால் தேவை­யான முடி­வு­களை எடுக்­கும்­படி இலங்­கையை வலி­யு­றுத்­து­கிறோம்,” என்­றார் திரு தாம்­சன்.

இத­னி­டையே, அவ­ரது இந்­தக் கருத்­து­கள் ‘பனிப்­போர் மன­நிலை’ யைக் காட்­டு­வ­தாக உள்­ளது என்று சீன வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் ஸாவ் லிஜி­யன் குறிப்­பிட்டார்.

கட்­டா­யப்­ப­டுத்­து­வதன் மூலம் நாடு­க­ளுக்கு இடை­யி­லான இயல்­பான ஒத்­து­ழைப்­பிற்கு இடை­யூறு விளை­விக்­கும் முயற்சி வெற்­றி­பெறாது என்­றும் அவர் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

ரூ.5 கோடி தங்க, வைர நகை கொள்ளை வழக்கு; திகில் படம் போல் இருந்த காெணாளிக் காட்சி

சென்னை: தியா­க­ராய நக­ரில் உள்ள நகைக்­கடை ஒன்­றில் இரு தினங்­க­ளுக்கு முன்பு ரூ.5 கோடி மதிப்­பி­லான தங்­கம், வைர நகை­கள் சூறை­யா­டப்­பட்­டன.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில், அங்­கி­ருந்த கண்­கா­ணிப்பு புகைப்­படக் கரு­வி­களில் பதி­வாகி இருந்த காணொ­ளிக் காட்­சி­கள் அனைத்­தும் ஒரு திகில் படத்­தைப் பார்ப்­பது போன்ற உணர்வைத் தருவதாக போலி­சார் கூறி­யுள்­ள­னர்.

“கொள்­ளையில் தொடர்­பு­டைய இரு­வ­ரைப் பற்றி துப்பு கிடைத்­துள்­ளது. விரை­வில் அவர்­கள் கைது செய்யப்­ப­டு­வார்­கள்,” என்­றும் போலி­சார் தெரி­வித்­த­னர்.

சென்னை தியா­க­ரா­ய­ந­கர் சாருல்லா தெரு­வைச் சேர்ந்­த­வர் ராஜேந்­தி­ர­கு­மார், 60. இவர் அதே பகு­தி­யில் உள்ள மூசா தெரு­வில் இருக்­கும் ஒரு வீட்­டின் முதல் மாடியை வாட­கைக்கு எடுத்து, அதில் உத்­தம் ஜூவல்­லர்ஸ் என்ற பெய­ரில் நகை­களை மொத்த வியா­பா­ரம் செய்து வந்­தார்.

இந்­நி­லை­யில், திருட்டு நடந்த இடத்­தி­லும் அதைச் சுற்­றி­யுள்ள இடங்­க­ளி­லும் பொருத்­தப்­பட்­டுள்ள 120 கண்­கா­ணிப்பு புகைப்­ப­டக் கரு­வி­களை மூன்று தனிப்­படை போலி­சார் ஆய்வு செய்­து அதை காெணா ளி­யாகத் தயா­ரித்­துள்­ள­னர்.

45 நிமி­டங்­கள் ஓடும் அந்­தக் காணொளி, ஒரு திகில் படம்­போல் உள்­ளதாகவும் கூறப்படுகிறது.

காெணாளியின் தொடக்­கத்­தில் மூசா தெரு­வுக்கு வரும் இரு கொள்­ளை­யர்­கள் இரவு 10.30 மணி­ய­ள­வில் மோட்­டார் சைக்­கிளை நிறுத்­து­கி­றார்­கள்.

கொள்ளை அடிப்பவர் மட்­டும் மோட்­டார்­ சைக்­கிளை விட்டு இறங் கிய நிலை­யில், மற்­றொ­ரு­வர் திரும்­பிச் சென்று விடு­கி­றார்.

இறங்­கிய ஆட­வர், முகத்தை துணி­யால் மூடி­ய­படி, இரண்டு கைக­ளி­லும் கையுறை அணிந்து நகைக்­கடை உள்ள வீட்­டின் பின்­பக்க மதில் சுவ­ரில் ஏறி, உள்ளே குதிக்­கி­றார்.

சரி­யாக 11.30 மணிக்கு பூட்டை உடைத்து நகைக்­க­டைக்­குள் சென்று ஒரு லாக்­கரை உடைக்­கி­றார். அதற்­குள் இருந்த தங்க-வைர நகை­கள், தங்­கம், வெள்­ளிக்­கட்­டி­களை வாரிவாரி பைக்­குள் போடு­கி­றார். பை நிரம்பி விட, மற்றொரு லாக்­கரை உடைக்­கி­றார். ஆனால், அதை உடைக்க முடி­ய­வில்லை.

சுமக்­க­ மு­டி­யா­மல், நகை­கள் உள்ள பையை தூக்­கிக்­கொண்டு, நள்­ளி­ரவு 1.30 மணிக்கு நகைக்­கடையை விட்டு வெளி­யே­று­கி­றார்.

அதி­காலை 4 மணி­ வரை தெரு ஓர­மாக உட்­கார்ந்­தி­ருக்­கி­றார். அதன் பிறகு அவரை இறக்கி விட்­டுச்சென்ற கொள்ளை ஆசாமி மீண்­டும் வந்து, மோட்­டார் சைக்­கி­ளில் கொள்ளை ஆசா­மியை அழைத்­துச் செல்­கி­றார். இப்­படி நீள்கிறது காணொளிக் காட்சி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

Pages