விஜயதசமியில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க அனுமதி

சென்னை: விஜ­ய­த­சமி் அன்று குழந்­தை­க­ளைப் பள்­ளி­களில் சேர்க்­க­வும் அப்­படி குழந்­தை­களை பள்­ளி­களில் சேர்க்­கும் நாளன்றே அவர்­க­ளுக்கு இல­வச பாடப்­ புத்தகங்­களை வழங்­க­வும் தமி­ழக தொடக்­கக் கல்­வித்­துறை அறி­வுறுத்தி உள்­ளது.

இந்­தக் கல்­வித்­துறை சார்­பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதி­கா­ரி­க­ளுக்­கும் அனுப்பி யுள்ள சுற்­ற­றிக்­கை­யில், “தமிழ கத்­தில் உள்ள பள்­ளி­களில் விஜய தச­மி­யின்போது பெற்­றோர் தங்­கள் குழந்­தை­களை முதன்மு­த­லாக பள்­ளி­யில் சேர்த்து விடு­வர். இது ஒரு வழக்­க­மான நடை­முறை. எனவே அர­சுப் பள்ளிகளில் நாளை மறு­நாள் 26ஆம் தேதி கொண்­டா­டப்­படும் விஜயதச­மி­யின் போது மாண­வர்­க­ளின் சேர்க்­கையை அதி­கப்­ப­டுத்­த­லாம்.

“ஊர் பொது இடங்­களில் பதா கைகள் வைத்­தும் ­மக்களிடம் மாண­வர்­களை அர­சுப் பள்­ளி­களில் சேர்ப்­பது குறித்து தெரி­யப்­ப­டுத்­தி­யும் அர­சுப் பள்ளிகளில் குழந்­தை­க­ளைச் சேர்க்க நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும்,” என்று கூறப்­பட்­டுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

உணவகத்தை மூட உத்தரவு; மேலும் மூன்று உணவகங்களுக்கும் 13 பேருக்கும் அபராதம்

சர்க்கியூலர் ரோட்­டில் உள்ள ‘லாஸ் அமி­கோஸ்’ எனும் மெக்­சிகோ உண­வ­கம் ஒன்­றில் கொவிட்-19 பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் பல­முறை அத்­து­மீ­றப்­பட்­ட­தைத் தொடர்ந்து அந்த உண­வ­கத்தை 20 நாட்­க­ளுக்கு மூட உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

உணவு, பானக் கடை ஒன்றை இத்­தனை நாட்­கள் மூட உத்­த­ர­விட்டு இருப்­பது இதுவே முதன்­முறை என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் நேற்று கூறி­யது.

கடந்த புதன்­கி­ழமை முதல் நவம்­பர் 10ஆம் தேதி வரை லாஸ் அமி­கோஸ் உண­வ­கத்தை மூட உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் 10ஆம் தேதி அந்த உண­வ­கத்­தில் எட்­டுப் பேர் ஒன்று­கூ­டி­யி­ருப்­ப­தை­யும் ஒரு மீட்­ட­ருக்­கும் குறை­வான இடை­வெளி விட்டு வாடிக்­கை­யா­ளர்­கள் நின்­ற­தை­யும் அதி­கா­ரி­கள் கண்­ட­னர்.

இதற்கு முன் ஜூலை மாதத்­தில் அந்த உண­வ­கம் பாது­காப்பு நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­றத் தவ­றி­ய­தால் அது 10 நாட்­க­ளுக்கு மூட உத்­த­ர­வி­டப்­பட்டு $1,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்டு இருந்­தது.

இந்­நி­லை­யில், பாது­காப்பு நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­றத் தவ­றிய மேலும் மூன்று உண­வ­கங்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ராபர்ட்­சன் வாக் பகு­தி­யில் உள்ள ‘கன்­பாய் 789’ எனும் உண­வ­கத்­திற்கு $2,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. கொவிட்-19 நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்த ஏப்­ரல் மாதத்­தில் அந்­தக் கடை ஊழி­யர்­கள் சரி­யாக முகக்­க­வ­சம் அணி­யா­த­தற்­காக அந்­தக் கடைக்கு $1,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

போட் கீ பகு­தி­யில் மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னை­யில் ‘ஃபாரம் சீஃபூட் வில்­லேஜ்’ உண­வ­கம், லியாங் சியா ஸ்தி­ரீட்­டில் உள்ள ‘ஸியாங் சிக்­னேச்­சர்’ உண­வ­கம் ஆகி­ய­வற்­றுக்­குத் தலா $1,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. ஐவ­ருக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் அடங்­கிய குழுக்­களை அனு­ம­தித்­ததை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­தைத் தொடர்ந்து அந்த உண­வ­கங்­களுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றத் தவ­றிய 13 வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு 300 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே, போட் கீ பகு­தி­யில் ஐவ­ருக்­கும் அதி­க­மா­னோர் குழுக்­க­ளாக ஒன்­று­கூ­டி­ய­தற்­காக 13 பேருக்­குத் தலா $300 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

சிறப்புப் பயண ஏற்பாடுகளைத் தொடங்க சிங்கப்பூரும் ஜெர்மனியும் இணக்கம்

சிங்­கப்­பூ­ரும் ஜெர்­ம­னி­யும் இரு நாடு­க­ளுக்கு இடையே சிறப்­புப் பயண ஏற்­பா­டு­க­ளைத் தொடங்க இணக்­கம் கண்­டுள்­ளன.

சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சும் ஜெர்­மா­னிய கூட்­ட­ரசு வெளி­யு­றவு அலு­வ­ல­க­மும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் இது தெரி­விக்­கப்­பட்­டது.

இரு நாடு­க­ளுக்கு இடையே சிறப்­புப் பயண ஏற்­பா­டு­க­ளைத் தொடங்­கு­வ­தற்­கான தேதி இன்­ன­மும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

பயண ஏற்­பா­டு­க­ளுக்­கான விண்­ணப்ப மற்­றும் சுகா­தார நடை­முறை போன்ற மேல் விவ­ரங்­கள் பிந்­தைய தேதி­யில் அறி­விக்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இது­வரை எந்­த­வொரு ஐரோப்­பிய நாட்­டு­ட­னும் சிங்­கப்­பூர் சிறப்­புப் பயண ஏற்­பா­டு­க­ளைக் கொண்­டி­ருக்­க­வில்லை. தற்­போது இரண்­டா­வது கொரோனா கிரு­மித்­தொற்று அலையை ஐரோப்பா எதிர்­கொண்டு வரு­கிறது.

“இரு நாடு­க­ளுக்­கும் இடையே வர்த்­தக, அதி­கா­ர­பூர்­வப் பய­ணங்­களை மேற்­கொள்ள இந்­தச் சிறப்­புப் பயண ஏற்­பா­டு­கள் வழி­வ­குக்­கும்,” என்று இரு நாட்டு அமைச்­சு­களும் அறிக்­கை­யில் தெரி­வித்­தன.

சிங்கப்பூரும் ஜெர்மனியும் ஏற்றுக்­கொண்டுள்ள கொவிட்-19 தடுப்பு, பொதுச் சுகா­தார நடை­முறை­க­ளுக்­குப் பய­ணி­கள் உட்­பட்டு நடக்க வேண்­டும். சிங்­கப்­பூ­ருக்­கும் மற்ற ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கும் இடையே எதிர்­கா­லத்­தில் இது­போன்ற பயண ஏற்­பா­டு­க­ளைத் தொடங்க இது ஓர் எடுத்­துக்­காட்­டாக விளங்­கும் என்று இரு நாடு­களும் குறிப்­பிட்­டன.

சிங்­கப்­பூர் கடை­சி­யாக ஹாங்­காங்­கு­டன் சிறப்­புப் பயண ஏற்­பாடு­க­ளைச் செய்­து­கொண்­டது. தற்­போது மலே­சியா, சீனா, ஜப்­பான், ஆஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட 10 வேறு நாடு­க­ளு­டன் சிங்­கப்­பூர் பயண ஏற்­பா­டு­க­ளைக் கொண்­டி­ருக்­கிறது.

இதற்­கி­டையே, ஜெர்­ம­னி­யில் குறு­கி­ய­கா­லம் தங்க சிங்­கப்­பூர்­வாசி­கள் அந்­நாட்­டிற்­குச் செல்­ல­லாம் என்று ஜெர்­மனி நேற்று அறி­வித்­தது. ஜெர்­ம­னி­யைச் சென்று அடைந்­த­வு­டன் பய­ணி­கள் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்ற தேவை­யில்லை. வரும் செவ்­வாய்க்­கி­ழமை இந்த நடை­முறை நடப்­புக்கு வரு­கிறது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், சிங்கப்பூர்வாசிகள் அங்கு செல்வதற்கான கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்த இவ்வாரம் ஐரோப்பிய மன்றம் பரிந்துரைகளை வெளியிட்டு இருந்ததைத் தொடர்ந்து ஜெர்மனியின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

இரைப்பைப் புற்றுநோயைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை

இரைப்பை சம்­பந்­த­மான புற்­று­நோயை அதன் ஆரம்­ப­க்கட்­டத்­தி­லேயே கண்­ட­றி­யும் ரத்­தப் பரி­சோ­தனை முறை தற்­போது சோதிக்­கப்­பட்டு வரு­வ­தாக தேசிய பல்­க­லைக்­க­ழக சுகா­தார முறை (என்யு­எச்­எஸ்) தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் இரைப்பை புற்­று­நோய் ஒவ்­வோர் ஆண்­டும் ஏறத்­தாழ 300 பேரின் உயி­ரைப் பறிக்­கிறது. ஆண்­க­ளி­டையே ஏற்­படும் புற்­று­நோய் மர­ணங்­களில் இரைப்பை புற்­று­நோய் ஐந்­தா­வது இடத்­தி­லும் பெண்­க­ளி­டையே அது ஆறா­வது இடத்­தி­லும் உள்­ளது.

இரைப்பைப் புற்­று­நோய் முற்­றிய நிலையை எட்­டும்­போது அது கண்­ட­றி­யப்­ப­டு­கிறது. இத­னால் அத­னைக் குணப்­ப­டுத்­து­வது சிர­ம­மா­கிறது.

பொது­வாக ‘எண்­டோஸ்­கோபி’ (Endoscopy) பரி­சோ­தனை மூலம் அந்­நோய் கண்­ட­றி­யப்­ப­டு­கிறது. இந்­தப் பரி­சோ­தனை முறைக்கு அதி­கம் செல­வா­வ­தோடு அது உட­லில் ஊடு­ரு­வும் தன்­மை­யை­யும் (invasive) கொண்­டது.

இந்­தப் பரி­சோ­தனை முறை­யில் கேமரா கருவி கொண்ட மெல்­லிய குழாய், வாய் வழி­யாக தொண்­டைக்­குள் செலுத்தப்பட்டு அது வயிறு வரை இறக்­கப்­ப­டு­கிறது. மருத்­து­வக் கட்­டணக் கழிவு போக, எண்­டோஸ்­கோ­பிக்கு $200 முதல் $800 வரை செல­வா­கும் என்று சுகா­தார அமைச்­சின் இணை­யப் பக்­கம் குறிப்­பி­டு­கிறது.

மாறாக, தற்­போது சோதிக்­கப்­பட்­டு வரும் ரத்­தப் பரி­சோதனைக்கு அதை­விட செலவு குறை­வா­கும். பொது மருத்­து­வ­ம­னை­களில் அதற்கு $200க்கும் குறை­வாக செல­வா­க­வும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

மேலும், ரத்­தப் பரி­சோ­தனை உட­லில் ஊடு­ரு­வும் தன்மை கொண்­ட­தல்ல. இத­னால் இரைப்பைப் புற்­று­நோயை ஆரம்­பக்­கட்­டத்­தி­லேயே கண்­ட­றிய இந்தப் பரி­சோ­தனை முறை பொது­மக்­க­ளி­டையே அதிக வர­வேற்பைப் பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. எண்­டோஸ்­கோபி மீதான சார்­பு­நி­லை­யை­யும் இது குறைக்க உத­வும். ரத்­தப் பரி­சோ­தனை முடி­வு­கள் ஒரு வாரத்­திற்­குள் மருத்­து­வ­ரி­டம் அனுப்பி வைக்­கப்­ப­ட­லாம். இந்­தப் பரி­சோ­தனை முறையை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்சி 2012ல் தொடங்­கி­யது.

அனைத்து இரைப்பைப் புற்­று­நோய்­க­ளி­லும் 87 விழுக்­காட்­டைத் துல்­லி­ய­மா­கக் கண்­ட­றி­யும் ஆற்­றலை ரத்­தப் பரி­சோ­தனை கொண்­டி­ருக்­கிறது. குறிப்­பாக, முதல் கட்ட புற்­று­நோய்­களில் 87.5 விழுக்­காட்டை அது கண்­ட­றி­யும்.

எண்­டோஸ்­கோபி முறை­யை­விட ரத்­தப் பரி­சோ­தனை விலை கட்­டுப்­ப­டி­யாக இருப்­ப­தால், இரைப்பைப் புற்­று­நோய் ஏற்­படும் சாத்­தி­ய­முள்ள பிரி­வி­ன­ரி­டையே நடத்­தப்­படும் தேசிய அள­வி­லான பரி­சோ­த­னை­யில் ரத்­தப் பரி­சோ­தனை சேர்க்­கப்­படும் வாய்ப்பு உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

மரண தண்டனை நடைமுறை: மேல்முறையீட்டுக்கு அனுமதி

மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்­றும் நடை­மு­றை­யில், மரண தண்­ட­னைக் கைதி­கள் சம­மாக நடத்­தப்­ப­டு­வ­தில்லை என்று தனது வழக்கை வாதி­டு­வ­தற்­காக, போதைப்­பொ­ருள் கடத்­த­லில் ஈடு­பட்ட சையத் சுஹைல் சையத் ஜின் என்ற 44 வயது கைதிக்கு மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் நேற்று அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

தனக்குமுன் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு முன்­ன­தாக, தனக்கு மரண தண்­டனை நிறை­வேற்ற சிங்­கப்­பூர் சிறைச்­சா­லைத் துறை எடுத்த முடிவை நீதித்­துறை மறு­ஆய்வு செய்ய வேண்­டும் என்று சுஹைல் சீராய்வு மனுத்­தாக்­கல் செய்­துள்­ளார்.

இது அர­சி­ய­ல­மைப்­பில் அனை­வ­ரும் சம­மாக நடத்­தப்­பட வேண்­டும் என்ற கோட்­பாட்­டுக்கு எதி­ராக உள்­ளது என்று அவர் கூறி­யுள்­ளார்.

சுஹை­லுக்கு முன்­ன­தா­கவே 2015ல் தட்­சி­ணா­மூர்த்தி என்­பவ­ருக்கு மரண தண்­டனை விதிக்கப்­பட்­ட­ தாக சுஹை­லின் வழக்­க­றி­ஞர் திரு எம். ரவி மனு­வில் சுட்­டி­யிருந்­தார். அதில் தட்­சி­ணா­மூர்த்­தி­யின் கைதி எண் 944 என்­றும் சுஹை­லின் கைதி 949 என்­றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்த மனு­வைப் பரி­சீ­லித்த தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன் தலை­மை­யி­லான மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்ற அமர்வு, உள்­துறை அமைச்சு தாக்­கல் செய்­த உறுதி மொழிப் பத்­தி­ரத்­தில் உள்ள விவ­ரங்­க­ளுக்­கும் மனு­வில் காணப்­படும் விவ­ரங்­க­ளுக்­கும் இடையே முரண்­பாடு இருப்­ப­தா­கக் கூறி­யது. அத­னால் மேல்­முறை­யீட்டு மனு விசா­ர­ணைக்கு ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கக் கூறி­யது.

அமைச்சு தாக்­கல் செய்த மனு­வில் சுஹை­லின் மரண தண்டனையை 2020 செப்­டம்­பர் 18ஆம் தேதி நிறை­வேற்­றக் குறிப்­பி­டப்­பட்­ட­போது, மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதி­க­ளி­லேயே அவர்­தான் முத­லா­ம­வர் என்று குறிக் ­கப்­பட்­டி­ருந்­தது. திரு ரவி, தட்­சி­ணா­மூர்த்­தி­யின் வழக்கை மேற்­கோள்காட்­டிய பின்­னர், அரசு வழக்­ க­றி­ஞர் பிரான்­சிஸ் இங், மேலும் ஓர் உறுதிமொழிப் பத்­தி­ரத்தை தாக்­கல் செய்ய கால அவ­கா­சம் கோரி­யுள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

லிட்­டில் இந்­தி­யா­வில் ரிக்‌ஷா உலாவுடன் தீபாவளிக் கொண்டாட்டம்

லிட்­டில் இந்­தி­யா­வில் இந்த ஆண்டு தீபா­வ­ளிக் கொண்­டாட்­டத்­தில் சைக்­கிள் ரிக்‌ஷா சுற்­று­லா­வும் இடம்பெறு­கிறது.

நவம்­பர் 13 ஆம் தேதி வரை ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழ­மை­யும், கேம்­பல் லேனில் உள்ள இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தி­லி­ருந்து ரிக்­‌ஷாக்­கள் உலாவைத் தொடங்கும். ­

அப்­துல் கபூர் மசூதி, ஸ்ரீ வீர­மா­கா­ளி­யம்­மன் கோயில் போன்ற முக்­கிய இடங்­களை இந்த உலா­வில் கண்டு ரசிக்­க­லாம்.

அக்­டோ­பர் 16ஆம் தேதி தொடங்­கிய இந்த ரிக்‌ஷா சவா­ரியை இந்­திய மர­பு­டைமை மையம் ஏற்­பாடு செய்­துள்­ளது. மாலை 6 மணி முதல் இரவு 7.45 மணி வரை ரிக்‌ஷா பய­ணம் இடம்­பெ­றும்.

ஒவ்­வொரு சவா­ரி­யும் 15 நிமி­டங்­கள் நீடிக்­கும். ஒரு ரிக்­‌ஷா­வில் இரண்டு பய­ணி­கள் மட்­டுமே அமரலாம்.

ரிக்‌ஷா சவா­ரிக்­கு https://ihc-programmes.peatix.com/view இணையதளத்தில் பதிவு செய்லாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

லிட்டில் இந்தியாவிலும் ரயில், பேருந்துகளிலும் அழகு மயில் பவனிவரும் அலங்காரம்

தீபா­வளி பண்­டிகை உணர்­வைப் பிரதிபலிக்கும் வகை­யில் குறிப்­பிட்ட சில எம்­ஆர்டி ரயில்­களும் பேருந்­து­களும் வண்­ண­மிகு தீபா­வளி அல­கா­ரங்­க­ளைக் கொண்டு வலம் வர­வுள்­ளன.

ஒரு மாத காலத்­திற்கு லிட்­டில் இந்­தியா ரயில் நிலை­யம், பூன் லே பேருந்து நிலை­யம் ஆகி­யவை ‘மயில்’ கருப்­பொ­ருள் கொண்ட அலங்­கா­ரங்­க­ளு­டன் காட்­சி­ய­ளிக்­கும்.

மொத்­தம் நான்கு ரயில்­க­ளி­லும் 10 பேருந்­துச் சேவை­க­ளி­லும் இந்த அலங்­கா­ரங்­கள் இடம்­பெ­றும்.

கடந்த ஐந்து ஆண்­டுக­ளா­கவே நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டைமை சங்­க­மும் (லி‌‌‌ஷா) இணைந்து இம்­மு­யற்­சிக்கு ஏற்­பாடு செய்து வரு­கின்­றன.

“தீபா­வளி பண்­டிகை லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தை­யும் தாண்டி மற்ற பகு­தி­களில் அன்­றா­டம் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பய­ணிக்­கும் மக்­க­ளைச் சென்­ற­டைய வேண்­டும் என்ற நோக்­கத்­தில் அலங்­கா­ரங்­க­ளைப் பல சேவை­களில் விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளோம்,” என்று தெரி­வித்­தார் லி‌‌‌ஷா­வின் தலை­வர் திரு ராஜ்­கு­மார் சந்­திரா.

அலங்­கா­ரங்­க­ளைப் பாராட்­டிய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங், பல இன சிங்­கப்­பூர் சூழ­லில் ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரின் பாரம்­ப­ரி­யம், கலா­சா­ரம், விழாக்­கள் குறித்து அதி­கம் அறிந்­தி­ராத பட்­சத்­தில் அவற்­றைப் பற்றி தெரிந்­து­கொள்ள முன்­வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

470,000 பேருக்கு $810 மி. மதிப்பில் வேலைநலன் சிறப்புத் தொகை

கிட்­டத்­தட்ட 470,000 ஊழி­யர்­க­ளுக்கு இம்­மா­தம் $810 மில்­லி­யன் மதிப்­பி­ல் வேலை­ந­லன் சிறப்­புத் தொகை வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக நிதி அமைச்சு நேற்று தெரி­வித்­தது. வேலை­ந­லன் துணை வரு­மா­னத் திட்­டத்­தின்­கீழ் குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அக்­டோ­ப­ரில் இத்­தொகை கிடைக்­க­வுள்­ள­தாக அமைச்சு கூறி­யது.

இம்­மா­தம் 28ஆம் தேதி­யி­லி­ருந்து வழங்­கு­தொ­கையை இந்­தக் குறைந்த வரு­மான சிங்­கப்­பூ­ரர் ஊழி­யர்­கள் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

இவர்­களில் பெரும்­பா­லா­னோர் முன்­னரே வேலை­ந­லன் சிறப்­புத் தொகைக்­குத் தகு­தி­பெற்றவர்கள்.

அதன்­படி 2019ஆம் ஆண்­டில் செய்­தி­ருந்த வேலைக்­காக இவ்­வாண்டு ஜூலை­யில் அவர்­க­ளுக்கு முதல் வழங்­கு­தொ­கை­யான $1500 கிடைத்­தி­ருக்­கும். இறுதி வழங்­கு­இத்தொ­கை­யான மேலும் $1500ஐ அவர்­கள் இம்­மா­தம் பெற­வுள்­ள­னர்.

இத்தொகை அவர்­க­ளின் வங்­கிக் கணக்­கில் போடப்­படும், அல்­லது அவர்­க­ளின் வீட்டு முக­வ­ரிக்கு நவம்­பர் 15ஆம் தேதிக்­குள் காசோ­லை­யாக அனுப்­பப்­படும். 2007ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட வேலை­ந­லன் ஒரு நிரந்­த­ரத் திட்­ட­மா­கும். குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்தை அதி­க­ரிக்­கும் வகை­யில் நிரப்­புத்­தொகை செலுத்­தப்­ப­டு­கிறது. இது அவர்­க­ளின் ஓய்­வுக்­கா­லத்­திற்­குச் சேமிக்க உத­வும் என்று கூறப்­பட்­டது.

துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான ஹெங் சுவீ கியட், ஆகஸ்ட் 17ஆம் தேதி­யன்று அறி­வித்த தமது அமைச்­சு­நிலை அறிக்­கை­யில், வேலை­ந­லன் துணை வரு­மா­னத் திட்­டத்­திற்கு மேலும் 70,000 ஊழி­யர்­கள் தகு­தி­பெ­று­வர் என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

வேலை­ந­லன் சிறப்­புத் தொகை பெறாத நிலை­யில், இவர்­கள் 2020ஆம் ஆண்­டில் செய்த வேலைக்­காக வேலை­ந­லன் துணை வரு­மா­னத் திட்­டத்­தின்­கீழ் சேர்க்­கப்­ப­டு­வர் என்று அவர் கூறி­யி­ருந்­தார்.

அறி­மு­கம் கண்­ட­தி­லி­ருந்து வழங்­கப்­பட்ட வேலை­ந­லன் வழங்­கு­தொ­கை­யின் மதிப்பு $6.8 பில்­லி­ய­னாகி உள்­ளது. இது­வரை 890,000 பேர் இத்­திட்­டம் வழி பல­ன­டைந்­துள்­ள­னர். ஊழி­ய­ர­ணி­யின் ஆகக் குறை­வான வரு­மா­னம் ஈட்­டும் 20 விழுக்­காட்­டி­ன­ராக உள்ள சிங்­கப்­பூ­ரர் ஊழி­யர்­க­ளுக்­குப் பல­ன­ளிக்க இத்­திட்­டம் தொடங்­கப்­பட்­டது.

இதன் தொடர்­பில், திரு ஹெங் தம் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டி­ருந்­தார். குறைந்த வரு­மான ஊழி­யர்­களை உயர்த்­தும் முக்­கிய கொள்கை புத்­தாக்­கங்­களில் வேலை­ந­லன் திட்­ட­மும் படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறை­யும் அடங்­கும் என்­றார் அவர்.

உட­னடி மற்­றும் ஓய்­வுக்­கா­லத் தேவை­க­ளுக்கு மத்­திய சேம­நிதி நிரப்­புத் தொகை­யும் ரொக்­க­மான வழங்­கு­தொ­கை­யும் அளிக்­கப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். கொள்­ளை­நோய் சூழ­லில் இவர்­க­ளுக்கு மேலும் உதவி நல்க பல திட்­டங்­கள் உள்­ள­தென அவர் கூறி­னார்.

“சிங்­கப்­பூ­ரர்­கள், குறிப்­பாக குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்­கும் நம்­மி­டையே உள்ள எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய பிரி­வி­ன­ருக்­கும் இந்த நெருக்­கடி காலத்­தில் உத­வு­வ­தில் அர­சாங்­கம் கடப்­பாடு கொண்­டுள்­ளது,” என்­றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

மலேசியாவில் அவசரநிலை அறிவிப்பது குறித்து பேச்சு

மலேசியாவில் அவசரநிலை நடவடிக்கைகள் அறிவிப்பது தொடர்பில் பேச, மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் நேற்று மாலை மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகம்மது ஷாவை குவாந்தான், பாஹாங்கில் சந்தித்தார்.  

மாமன்னரின் அனுமதியுடன் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் அதிகாரத்தைத் தாம் பெற, பிரதமர் இச்சந்திப்பை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. 

மலேசிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள 2021 வரவுசெலவுத் திட்ட அமர்வு, திடீர் தேர்தலுக்கு வழி விட்டுவிடக் கூடாது என்பதற்காக நேற்று காலை நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் அவசரகால நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. சாபாவில் நடந்து முடிந்த தேர்தலை அடுத்து மலேசியாவில் முன்னர் காணாத அளவில் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. 

இந்த வாரத்தில் பலமுறை நாள் ஒன்றுக்கு 800க்கும் மேற்பட்ட புதிய தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.   

இவ்வாறு மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்று அலை மீண்டும் எழும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் அதன் செலவினத்தைத் திட்டமிடுவதை உறுதிசெய்ய வேண்டுமே தவிர, மேன்மேலும் தடுமாறும் அரசியல் சூழலால் அது பாதிப்படையக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது. இதற்காக ‘பொருளியல் அவசரகால நிலை’ அறிவிக்கப்படலாம் என்று ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழுக்குத் தெரிவிக்கப்பட்டது.

“1969 இனக் கலவரங்களுக்குப் பிறகு விதிக்கப்பட்ட ஊரடங்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ராணுவப் படைகள் போன்ற சூழ்நிலை இருக்காது. மாறாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப்படி இயல்பு வாழ்க்கை தொடரும். சுகாதார நெருக்கடி ஒன்றைச் சமாளிப்பதில் அரசியல் குறுக்கிடாது,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நம்பகமான நபர் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் ஆயுதப் படைத் தலைவர், அரசாங்கத் தலைமை போலிஸ் அதிகாரி, அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும்வரை தேசிய அளவிலான தேர்தல்கள் நடக்காததை உறுதிசெய்ய வேண்டும் என்று உயர்மட்டக் கூட்டங்களின்போது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்திக் கூறியிருந்தனர். இதன் தொடர்பில் இவ்வாரத் தொடக்கத்தில் இந்த மூவரிடமும் ஆலோசனை பெறப்பட்டதாக கூறப்படுகிறது. அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்தும் அதிகாரத்தை வழங்குமாறு அமைச்சரவை எடுத்த முடிவு, பின் நேற்று பகல் தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக உயர் மட்ட அமைச்சரவை உதவியாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

“வரவுசெலவுத் திட்டம் 2021 அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது. இனி மாமன்னருடன் பிரதமர் பேசுவதற்கு நாம் காத்திருக்க வேண்டும்,” என்றார் அவர்.

இதையடுத்தே அவசரநிலை குறித்து அறிவிப்பதற்கு அனுமதி கோர, பிரதமர் முகைதீன் மலேசிய மாமன்னரைச் சந்தித்து இரண்டு மணி நேரம் பேசினார். 

விதிமுறை 150ன் கீழ் மாமன்னரின் அனுமதியுடன் மத்திய அரசியலமைப்பின்படி அவசரநிலை அறிவிக்கப்படலாம். அவ்வாறு அறிவிக்கப்பட்டால் நாடாளுமன்றம் நிறுத்தி வைக்கப்படும். அரசாங்கத்தின் நிர்வாகத்தில் அதிகாரம் ஒப்படைக்கப்படும். அதன்படி விதிமுறைகளை உருவாக்குவதும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான செலவினத்துக்கு ஒப்புதல் அளிக்கவும் முடியும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

வீவக பேட்டைகளில் இயங்கும் வர்த்தகங்கள் ‘சமூகக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக விளங்குகின்றன’

வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் (வீவக) பேட்டைகளில் செயல்படும் வர்த்தகங்கள் சிங்கப்பூரின் சமூக கட்டமைப்பின் முக்கிய அங்கமாக உள்ளன. அவை தொடர்ந்து உருமாறி இந்தக் கட்டமைப்பின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூர் வணிகச் சங்க சம்மேளனத்துடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஹலிமா, வீவக பேட்டைகளில் செயல்படும் வர்த்தகங்கள் இன்றி சிங்கப்பூர் இதேபோன்று இருக்காது என்று சொன்னார். 

“நம் சமூகத்திற்கு துடிப்பைச் சேர்க்கும் இவற்றைப் பலரும் எளிதில் நாடலாம்.

“கடைத்தொகுதிகள் எவ்வளவு வசதியாக இருந்தாலும் அக்கம்பக்க உணவங்காடிக் கடைகளில் மளிகைப்பொருள் கடைகளிலும் கிடைக்கும் வசதி ஈடு இணையற்றது,” என்றார் அதிபர். 

இத்தகைய சிறு வர்த்தகங்கள்தான் பெரும்பாலான சிங்கப்பூரர்களுக்கு மலிவான உணவுகளை வழங்கி வருவதாக திருவாட்டி ஹலிமா கூறினார்.
மாறிவரும் சூழலுக்கு எப்படி தங்களை மாற்றி அமைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதே அந்த வர்த்தகங்கள் எதிர்நோக்கும் சவால் என்று அவர் குறிப்பிட்டார். இருந்தபோதும் இது குறித்து சிங்கப்பூர் வணிகச் சங்க சம்மேளம் அதன் உறுப்பினர்களுக்கு ஆற்றும் உதவி ஊக்கமளிப்பதாக திருவாட்டி ஹலிமா கூறினார்.

குறிப்பாக, உணவங்காடிக் கடைக்காரர்கள், அக்கம்பக்க சில்லறை விற்பனைக் கடைக்காரர்களில் 70 விழுக்காட்டினர் மின்னிலக்க முறைக்கு மாறவேண்டும் என்ற இலக்கை சம்மேளம் நிர்ணயித்துள்ளது. சிங்கப்பூரிலுள்ள 16,000 உணவங்காடிக் கடைக்காரர்களையும் 17,000 சில்லறை விற்பனைக் கடைக்காரர்களையும் சம்மேளனம் பிரதிநிதிக்கிறது.

நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது வீவக பேட்டைகளில் செயல்படும் வர்த்தகங்கள் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி சம்மேள உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். இவற்றுள் மனிதவள பற்றாக்குறை, இணைய வர்த்தகங்கள் கொடுக்கும் போட்டி ஆகியவை தாங்கள் எதிர்நோக்கும் நீண்டகால சவால்களாக அவர்கள் குறிப்பிட்டனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

Pages