2018 பிசா ஆய்வு: அனைத்துலகத் திறனில் சிங்கப்பூர் மாணவர்களுக்கே முதல் இடம்

அனைத்­து­லக கலா­சா­ரம், உல­க­ளா­விய விவ­கா­ரங்­கள் ஆகி­ய­வற்­றைப் புரிந்­து­கொண்டு செயல்­படும் திற­னைச் சோதித்­துப் பார்த்த அனைத்­து­ல­கத் தேர்வு ஒன்­றில் சிங்­கப்­பூ­ரின் 15 வயது மாண­வர்­களே முத­லி­டத்­தில் வந்­த­னர்.

2018ஆம் ஆண்­டில் நடத்­தப்­பட்ட இத்­தேர்­வின் முடி­வு­களை பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு, வளர்ச்சி நிறு­வ­னம் (ஓஇ­சிடி) நேற்று அறி­வித்­தது.

‘பிசா’ எனப்­படும் அனைத்­து­லக மாண­வர் மதிப்­பீட்­டுத் திட்­டத்­தின் ஓர் அங்­க­மாக இடம்­பெற்ற ‘உல­க­ளா­விய திறன்’ தேர்­வில் சிங்­கப்­பூர் மாண­வர்­க­ளுக்­குச் சரா­ச­ரி­யாக 576 மதிப்­பெண்­கள் கிடைத்­தன.

இரண்­டா­வது நிலை­யில் வந்த கன­டிய மாண­வர்­க­ளுக்கு 554 மதிப்­பெண்­களும் மூன்­றா­வது நிலை­யில் வந்த ஹாங்­காங் மாண­வர்­க­ளுக்கு 542 மதிப்­பெண்­களும் கிடைத்­திருந்­தன.

இந்­தத் தேர்­வில் பங்­கேற்ற சிங்­கப்­பூர் மாண­வர்­களில் 46 விழுக்­காட்­டி­னர், மிகச் சிறந்த உல­க­ளா­விய திறன் தேர்ச்சி நிலை என்று கரு­தப்­படும் நான்கு அல்­லது ஐந்­தாம் நிலை­யைப் பெற்­றி­ருந்­த­னர்.

மதிப்­பீட்­டில் பங்­கேற்ற 27 நாடு­களின் கல்வி அமைப்­பு­களில் சரா­சரி­யாக 14 விழுக்­காட்­டி­னர் நான்­காம், ஐந்­தாம் நிலை­களில் தேறி­யி­ருந்­த­னர்.

வெவ்­வேறு கண்­ணோட்­டங்­களி­லி­ருந்து பகுப்­பாய்வு செய்­வது, தக­வலை மதிப்­பிட்டு வேறு­ப­டுத்­திக் காண்­பது போன்ற அம்­சங்­களில் சிங்­கப்­பூர் மாண­வர்­கள் அதி­கத் திறன் பெற்­றுள்­ள­னர் என்­பதை இந்த முடி­வு­கள் காட்­டு­வ­தாக கல்வி அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

2018 ‘பிசா’ ஆய்வு

இதற்­கி­டையே உல­க­ளா­விய விவ­கா­ரங்­கள் குறித்து சிங்­கப்­பூர் மாண­வர்­கள் அதி­கம் அறிந்­தி­ருந்­தா­லும் உலக சச்­ச­ர­வு­கள் மற்­றும் பொரு­ளி­யல் குறித்து அதி­கம் அறிந்­தி­ருக்­க­வில்லை என்று ‘2018 பிசா ஆய்வு’ தெரி­வித்­துள்­ளது.

கிட்­டத்­தட்ட 6,670 மாண­வர்­கள் இந்த ஆய்­வில் பங்­கேற்­ற­னர். பத்­தில் எட்டு சிங்­கப்­பூர் மாண­வர்­கள், தங்­க­ளால் உல­க­ளா­விய பரு­வ­நிலை மாற்­றம், உலக வெப்­ப­ம­ய­மா­தல் போன்ற விவ­கா­ரங்­கள் குறித்து நம்­பிக்­கை­யு­டன் விளக்க முடி­யும் என்று தெரி­வித்­த­னர்.

இது ஓஇ­சி­டி­யின் சரா­ச­ரி­யான 6, 7 மாண­வர்­க­ளை­விட அதி­கமே.

இருப்­பி­னும், அனைத்­து­லக ரீதி­யில் நடந்து வரும் மோதல்­கள், கொள்­ளை­நோய்­கள், பொரு­ளி­யல் போன்ற விவ­கா­ரங்­கள் தொடர்­பில் சிங்­கப்­பூர் மாண­வர்­க­ளி­டம் அந்த அளவு தன்­னம்­பிக்கை இல்லை.

உதா­ர­ணத்­திற்கு, துணி­க­ளின் விலை­யை­யும் அத்­து­ணி­க­ளைச் செய்­யும் நாடு­களில் உள்ள வேலைச் சூழல்­க­ளை­யும் 50 விழுக்­காட்­டி­ன­ரால் மட்­டுமே தொடர்­பு­ப­டுத்­திப் பார்க்க முடிந்­தது. இது ஓஇ­சி­டி­யின் சரா­சரி விகி­த­மான 58 விழுக்­காட்­டைக் காட்­டி­லும் குறைவு.

புதிய சூழல்­கள் அல்­லது சவால்­க­ளுக்கு ஏற்­பத் தங்­களை மாற்­றிக்­கொள்­வது தொடர்­பில் 50 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே முடி­யும் என்­ற­னர். ஓஇ­சி­டி­யின் சரா­சரி விகி­தம் 59%.

புதிய, சவால்­மிக்க சூழல்­களுக்கு ஏற்ப மாறிக்­கொள்­ளும் தன்மை பெற்ற மாண­வர்­க­ளி­டம் கூடு­தல் மீள்­தி­றன் அமைந்­தி­ருக்­கும் என்று கல்வி அமைச்சு ‘பிசா 2018’ ஆய்வை மேற்­கோள் காட்­டி­யது. மாண­வர்­கள் பரந்த முறை­யில் கல்வி கற்­ப­தைத் தொடர்ந்து ஊக்கு­விக்­கும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

அதிகமானோர் வீட்டில் இருந்து வேலை செய்வதால் இணையப் பாதுகாப்புக்கு மிரட்டல்கள் கூடின

கொவிட்-19 கார­ண­மாக முன்­பை­விட அதி­க­மான மக்­கள் வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்­கி­றார்­கள்.

இந்­தச் சூழ­லில் இங்கு செயல்­படும் நிறு­வ­னங்­கள், கணி­ச­மான அள­விற்கு அதி­க­மாக இணை­யப் பாது­காப்­புச் சவால்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றன.

சிஸ்கோ என்ற அமெ­ரிக்க தொழில்­நுட்ப நிறு­வ­னம் நடத்­திய ஆய்வு மூலம் இது தெரி­ய­வ­ரு­கிறது. அந்த ஆய்வு ஜூன் 16 முதல் செப்­டம்­பர் 4 வரை 21 நாடு­க­ளைச் சேர்ந்த 3,200 நிறு­வ­னங்­களை உள்­ள­டக்கி நடத்­தப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் YouGov என்ற அமைப்பு இந்த ஆய்வை நடத்­தி­யது.

அமெ­ரிக்கா, சீனா, ஜெர்­மனி உள்­ளிட்ட நாடு­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள் ஆய்­வில் உள்­ள­டக்­கப்­பட்­டன.

வீட்­டில் இருந்து வேலை பார்ப்­ப­தைப் பொறுத்­த­வ­ரை­ ஆ­சி­யப் பசி­பிக்­கி­லேயே சிங்­கப்­பூ­ரில்­தான் பெரும் மாற்­றம் ஏற்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்ட நிறு­வ­னங்­களில் 10ல் சுமார் ஆறு நிறு­வ­னங்­கள் கொவிட்-19 தொடங்­கி­யது முதல் இணைய மிரட்­டல்­கள் குறைந்­த­பட்­சம் 25 விழுக்­காடு அதி­க­ரித்து இருப்ப தாகத் தெரி­வித்­துள்­ளன.

இணை­யத்­தில் மோசடி தளங்­க­ளுக்­கான இணைப்­பு­கள், ரக­சி­ய­மாக ஒரு­வ­ரின் தக­வல்­க­ளைப் பெற இடம்­பெ­றும் சட்டவிரோத செயல்கள் முத­லா­னவை இத்­த­கைய மிரட்­டல்­களில் அடங்­கும்.

என்­றா­லும் இணைய மிரட்­டல்­க­ளைச் சமா­ளிக்­க­வும் தொலை­தூ­ரத்­தில் இருந்து வேலை பார்க்க ஏது­வாக மாறிக்­கொள்­ள­வும் தேவை­யான அள­விற்கு தாங்­கள் மிக­வும் ஆயத்­த­நி­லை­யில் இருப்­ப­தாக 42 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் தெரி­வித்­தன.

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர்­களில் பாதி பேருக்­கும் அதி­க­மா­ன­வர்­கள் வீட்­டில் இருந்து வேலை பார்க்­கின்ற ஏற்­பாட்டை நடை­மு­றைப்­ப­டுத்தி இருக்­கும் நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்கை 59 விழுக்­காடு அதி­க­ரித்து இருக்­கிறது.

இந்த அள­வுக்கு வேறு எந்த ஆசி­யப் பசி­பிக் நாட்­டி­லும் அதி­க­ரிப்பு இல்லை.

இப்­ப­டிப்­பட்ட ஒரு சூழ­லில் பாது­காப்பு சாத­னங்­க­ளின் கட்­டுப்­பாட்­டை­யும் கொள்­கை­க­ளை­யும் நிலை­நாட்டி வரு­வ­து­தான் இணை­யப் பாது­காப்­பைப் பொறுத்­த­வ­ரை­மிக முக்­கிய சவா­லாக உரு­வெடுத்து இருப்­ப­தாக 58 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் தெரி­வித்து இருக்­கின்­றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

2018ல் அறப்பணி நன்கொடை $2.9 பில்லியன்

சிங்­கப்­பூ­ரில் அறப்­பணி அமைப்பு­களுக்­கான நன்­கொடை 2018ல் $2.9 பில்­லி­ய­னாக இருந்­தது. இது 10 ஆண்­டு­களில் ஆக அதி­க­மா­ன­தா­கும். இருந்­தா­லும் கொவிட்-19 கார­ண­மாக இந்த ஆண்­டில் நன்­கொ­டை­கள் குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அறப்­ப­ணி­க­ளுக்­கான நன்­கொடை 2017ல் $2.7 பில்­லி­ய­னாக இருந்­தது. அது 2018ல் 8% கூடி $2.9 பில்­லி­ய­னா­கக் கூடி­யது என்று அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்ட அறப்­பணி ஆணை­யர் 2019 ஆண்­ட­றிக்கை தெரி­விக்­கிறது.

2018ல் பெறப்­பட்ட நன்­கொடை தொகை 10 ஆண்­டு­க­ளி­லேயே ஆக அதி­க­மா­னது என்­றும் 2009ல் திரண்ட $1.8 பில்­லி­ய­னை­விட அது சுமார் 60 விழுக்­காடு அதிகம் என்­றும் ஆணை­யர் ஆங் ஹாக் செங் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­துள்ளது.

கல்வி, சம­யம், சமூ­கம், நல்­வாழ்­வுத் துறை­களில் நன்­கொ­டை­கள் பெரி­தும் அதி­க­ரித்­தன. இத­னால் 2018ல் சாதனை அள­வுக்கு கொடை திரண்­டது என்று டாக்­டர் ஆங் விளக்­கி­னார்.

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்டு டிசம்­பர் நில­வ­ரப்­படி பதிவு பெற்ற 2,281 அறப்­பணி அமைப்­பு­கள் செயல்­பட்­டன என்­பது ஆணை­யரின் அறிக்கை மூலம் தெரி­ய­வரு­கிறது.

2019ல் புதி­தாக 21 அமைப்­பு­கள் மட்­டுமே பதி­யப்­பட்­டன. இந்த எண்­ணிக்கை 2018ல் 40 ஆக­வும் 2017ல் 39 ஆக­வும் இருந்­தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் இளையர் பட்டிமன்றம்

தேசிய அளவில் சிறந்த மாணவப் பேச்சாளர்களை உருவாக்கும் பொருட்டு தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் நாளை சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இணையம் வழி இளையர் சிறப்பு பட்டி மன்றத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் நடுவராக பொறுப்பேற்று உள்ள இந்த நிகழ்வு, மாணவர்கள் தேசிய அளவில் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘கல்வி மேம்பட பெரிதும் உதவுவது வீட்டுச் சூழலா? வெளிச்சூழலா?’ என்ற தலைப்பில் மாணவர்கள் விவாதிக்க இருக்கிறார்கள்.

செல்வி விஷ்ணுவர்தினி, செல்வி ஹரிஷிகா வீட்டுச் சூழலே என்றும் செல்வி ஸ்ரீநிதி, செல்வி சுவேதா வெளிச் சூழலே என்றும் வாதிடவிருக்கிறார்கள். இணையம் வழி நடக்கும் இந்த நிகழ்வுக்கான ஸூம் கூட்ட எண் (Zoom Meeting ID) 870 1481 7296. கடவுச்சொல் தேவையில்லை.

நிகழ்ச்சி தொடர்பான மேற்கொண்ட தகவல்களுக்கு

திரு சையது நிசார் 85034204, திரு நாதன் 98800769,

திரு சரவணன் 97844478 ஆகியோரில் ஒருவரைத் தொடர்புகொள்ளலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

கடல் தொழில்துறையில் 1,000 வேலை, பயிற்சி வாய்ப்புகள்

கடல்­து­றை­யில் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கும் வரும் மாதங்­களில் மொத்­தம் 1,000 பயிற்சி மற்­றும் வேலை­யிட பயிற்சி வாய்ப்­பு­கள் கிடைக்­க உள்ளன.

தானி­யக்க இயந்­தி­ரங்­கள், மின்­னி­லக்க உரு­மாற்­றம், கப்­பல் செயல்­மு­றை­கள், கடல்­துறை மேலாண்மை ஆகிய துறை­களில் வாய்ப்­பு­கள் கிடைக்க இருக்­கின்­றன.

சிங்­கப்­பூர் கடல்­துறைக் கழகத்தின் 10வது கருத்­த­ரங்­கில் நேற்று பேசிய போக்­கு­வ­ரத்து மற்றும் வெளி­யு­றவு மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட், அந்த வாய்ப்புகள் இந்­தத் தொழில்­து­றை­யில் நில­வும் தேர்ச்­சித் தேவைகளைப் பிர­தி­ப­லிப்­ப­தா­கக் கூறி­னார்.

பிறகு இதர துறை­களில் வேலை­யில் சேர விரும்­புவோருக்கும் இந்த வாய்ப்­பு­கள் பலன் அளிக்­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 சூழ­லில் சிங்­கப்­பூரில் கடல்­துறை மீள்­தி­ற­னோடு மட்­டு­மின்றி வளர்ந்து வரும் துறை­யா­க­வும் இருக்­கிறது. இந்­தத் துறையை இன்­னும் வளர்த்து வேலை வாய்ப்­பு­களை அதி­க­மாக உரு­வாக்­கு­வது எப்­படி என்­ப­து­தான் சவால் என்றார் அமைச்­சர்.

வேலை­களை உரு­வாக்­கு­வது ஒரு­பு­றம் இருக்க, அந்த வேலை­களுக்­குத் தோதாக மக்­க­ளின் தேர்ச்­சி­களை மேம்­ப­டுத்­த­வும் உதவ வேண்­டும் என்­றா­ர­வர்.

இத­னி­டையே, எஸ்ஜி யுனைட்­டெட் வேலை தேர்ச்சி இயக்­கத்­தின் கீழ், பல அமைப்­பு­க­ளோ­டும் சேர்ந்து புதிய வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தித் தரு­வ­தாக சிங்­கப்­பூர் கடல்­துறை துறை­முக ஆணை­யமும் இதர பல அமைப்­பு­களும் கூட்­ட­றிக்­கை­யில் நேற்று தெரி­வித்­தன.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நடந்த அந்­தக் கருத்­த­ரங்­கில் பேசிய அமைச்­சர், பல மாற்­றங்­களும் உல­கில் இடம்­பெற்று வரு­வ­தால் அவற்­றுக்­குத் தோதாக நாம் மாறிக்­கொள்ள வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­க் கூறினார்.

சிங்­கப்­பூர் உல­கின் ஆகப் பெரிய கப்­பல் போக்­கு­வ­ரத்து மைய­மா­க­வும் முக்­கி­ய­மான கடல்­துறை மைய­மா­க­வும் இருப்­ப­தால் கரி­ம­ அ­ள­வைக் குறைக்­கும் இலக்கை நிறை­வேற்ற சிங்­கப்­பூர் தொடர்ந்து பாடு­பட்டு பரு­வ­நிலை பாதிப்­பு­க­ளைக் குறைக்­கும் என்று அமைச்­சர் குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

படிப்படியான சம்பள உயர்வு முறை விரைவில் நடைமுறைக்கு வரலாம்

கழிவு மேலாண்மை, மறு­சு­ழற்­சித் துறை­யில் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை விரை­வில் நடை­முறைப்­ப­டுத்­தப்­ப­ட­லாம்.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் ஒரு முத்­த­ரப்­புக் குழுவை அமைப்­பது தொடர்­பில் மனி­த­வள அமைச்­சிற்கு அண்­மை­யில் ஒரு பரிந்­துரை அனுப்­பப்­பட்­டுள்­ளது.

தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் துணைத் தலை­மைச் செய­லா­ளர் ஸைனல் சப்­பாரி நேற்று இத­னைத் தெரி­வித்­தார்.

கழிவு மேலாண்மை, மறு­சு­ழற்­சிச் சங்­கத்­தில் இருந்து அப்­ப­ரிந்­து­ரை­யைப் பெற்ற என்­டி­யுசி, பின் அதனை மனி­த­வள அமைச்­சிற்கு அனுப்பி இருப்­ப­தா­க­வும் அமைச்­சின் பதிலை எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­க­வும் திரு சப்­பாரி கூறி­னார்.

கிராஞ்சி கிர­சென்­டில் உள்ள ‘வா அண்ட் ஹுவா பிரை­வேட் லிமிட்டெட்’ எனும் கழிவு மேலாண்மை நிறு­வ­னத்­திற்கு என்­டி­யுசி தலை­மைச் செய­லா­ளர் திரு இங் சீ மெங்­கும் திரு சப்­பா­ரி­யும் வருகை மேற்­கொண்­ட­னர்.

கழிவு மேலாண்மை, மறு­சு­ழற்­சித் துறை­யில் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை எப்­போது நடை­முறைப்­ப­டுத்­தப்­படும் எனக் குறிப்­பிட்­டுச் சொல்ல முடி­யாது என்­றும் அதனை நடை­மு­றைப்­படுத்­தச் சிறிது காலம் ஆகலாம் என்­றும் அவ்­வி­ரு­வ­ரும் செய்­தி­யாளர்­க­ளி­டம் தெரி­வித்­த­னர்.

எடுத்­துக்­காட்­டாக, தேர்ச்சி நிலை­கள் தொடர்­பில் அத்­துறை சார்ந்த நிறு­வ­னங்­க­ளு­டன் முத்­தரப்புக் குழு பணி­யாற்ற வேண்டி இருக்­கும் என்­றும் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறையை நடை­முறைப்­ப­டுத்த சட்­ட­பூர்வ அமைப்­பு­களு­டன் இணைந்து பொருத்­த­மான வழி­க­ளைக் கண்­ட­றிய வேண்­டும் என்­றும் திரு ஸைனல் விளக்­கி­னார்.

கடந்த வாரம் நாடா­ளு­மன்­றம் கூடி­ய­போது, எல்­லாத் துறை­க­ளி­லும் குறைந்­த­பட்ச ஊதி­ய­மாக $1,300 வழங்­கப்­பட வகை­செய்ய வேண்­டும் என்று பாட்­டா­ளிக் கட்சி வலி­யு­றுத்­தி­யது. அப்­போது, படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை­யால் 80,000 துப்­பு­ர­வா­ளர்­கள், பாது­கா­வ­லர்­கள், நில­வ­னப்பு ஊழி­யர்­கள் அண்­மைய ஆண்­டு­களில் 30% ஊதிய உயர்வு பெற்­றுள்­ள­தாக அர­சாங்­கம் குறிப்­பிட்­டது.

கடந்த 2012ஆம் ஆண்­டில் அறி­மு­கப்படுத்தப்பட்ட படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை, இது­வரை மூன்று துறை­களில் நடை­மு­றைப்­படுத்­தப்­பட்டுள்­ளது. இதை­யடுத்து, அம்­முறை மிக­வும் மெது­வாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதா எனப் பாட்­டா­ளிக் கட்சி கேள்வி எழுப்­பி­யது.

அது­பற்றி திரு இங்­கி­டம் கேட்­ட­தற்கு, “நீண்­ட­கால நோக்­கில், படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை மட்­டு­மின்றி, ஒட்­டு­மொத்த சாத்­தி­யங்­க­ளை­யும் ஆராய்ந்து, பல்­வேறு துறை­க­ளி­லும் ஊழி­யர்­க­ளின் ஊதி­யத்தை உயர்த்த முடி­யும் என என்­டி­யுசி நம்­பு­கிறது,” என்று பதில் ­அளித்­தார்.

வேலை­ந­லன் துணை வரு­மானத் திட்­டத்­து­டன் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை­யால் ஏரா­ள­மான ஊழி­யர்­கள் பல­ன­டைந்­து உள்­ள­தாக திரு இங் குறிப்­பிட்­டார்.

அத்­து­டன், ஊதி­யத்தை உயர்த்­தும் சுமை முழு­வ­து­மாக நிறு­வ­னங்­கள் மீது சுமத்­தப்­ப­டு­வ­தில்லை என்­றும் அவர் சுட்­டி­னார்.

குறைந்த வரு­மான ஊழி­யர்­களுக்கு வேலை­ந­லன் துணை வரு­மா­னத் திட்­டம் மூலம் கூடு­தல் ரொக்­கம் கிடைக்­கிறது. அத­னால், நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் உற்­பத்­தித்­தி­றனை மேம்­ப­டுத்த முடி­யும் என்­றும் ஒட்­டு­மொத்த துறை­யும் வளர்ந்து, ஊழி­யர்­க­ளுக்­குக் கூடு­தல் ஊதி­யம் கிடைக்­க­லாம் என்­றும் திரு இங் கூறி­னார்.

ஊழி­யர்­க­ளுக்கு உத­வு­வ­தன் வழி­யாக நிறு­வ­னங்­க­ளுக்­கும் கைகொ­டுக்­கி­றோம் என்ற அவர், இத­னால் அனைத்­துத் தரப்­பி­ன­ரும் பல­ன­டைய முடி­கிறது என்­றும் சொன்­னார்.

தொழில்­துறை தாக்­குப் பிடிக்க முடி­யாத அள­விற்கு ஊழி­யர்­க­ளுக்­கான கூடு­தல் ஊதி­யம் இருந்­தால், நிறு­வ­னங்­கள் மூடப்­பட்டு, ஊழி­யர்­கள் வேலை­யின்­றித் தவிக்க நேரி­ட­லாம் என்­றும் திரு இங் குறிப்­பிட்­டார்.

படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை, வேலை­ந­லன் துணை வரு­மா­னம் என இரண்­டும் சேர்ந்த ஒட்­டு­மொத்­தப் பிரச்­சி­னை­யாக இதை நாம் பார்க்க வேண்­டும் என்று திரு இங் கேட்­டுக்­கொண்­டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

போலிசுக்கு கையூட்டு கொடுக்க முயன்றவருக்கு 4 வார சிறை

கொவிட்-19 அமலாக்க நடவடிக்கையைத் தவிர்க்க போலிஸ்காரக்கு கையூட்டு வழங்க முயன்ற 28 வயது சென் லோங் என்பவருக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 7ஆம் தேதி பூன் லே ரயில் நிலையத்தின் புகை பிடிக்கும் பகுதியில் சீன நாட்டவரான செங், முகக் கவசம் அணியாமல் நின்றிருந்ததை  பொதுப் போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவின் போலிஸ் அதிகாரிகள் கண்டனர். அவர்கள் சென்னை அணுகி, முகக்கவசத்தை முறையாக அணியுமாறு கூறினர். அப்போது அவர் அணிந்துகொண்டாலும், பிறகு பலமுறை  முகக்கவசமின்றித் தென்பட்டார்.  வொர்க் பர்மிட்டில் பணிபுரியும் செங்கை அதிகாரி சான் ஹுய் ஷி விசாரணை செய்தார். அப்போது, அவர் $50.00 கையூட்டு வழங்க முயற்சி செய்தார். அதை வாங்க மறுத்த அதிகாரி, சென்னுக்கு கொவிட்-19 (தற்காலிக) சட்டத்தின் கீழ் அவருக்கு $300 வெள்ளி அபராதம் விதித்தார்.

இச்சம்பவம் குறித்து பின்னர் லஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை இலாகாவிடம் புகார் செய்யப்பட்டது.
கையூட்டு வழங்க முயன்றதற்கு அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறையோ 100,000 வெள்ளி வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

மூலாதார பணவீக்கம் செப்டம்பரில் குறைந்தது: ஏறக்குறைய பூஜ்ஜியம்

சிங்கப்பூரில் மூலாதார பணவீக்கம் சென்ற செப்டம்பர் மாதம் மேலும் குறைந்தது. அதேவேளையில், ஒட்டுமொத்த பணவீக்கம் பூஜ்ஜியத்தை நெருங்கியதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குடியிருப்பு, தனியார் சாலை போக்குவரத்துச் செலவுகளை நீக்கி விட்டு கணக்கிடப்படும் மூலாதார  பணவீக்கம் செப்டம்பரில் -0.1% ஆக இருந்தது. இது முந்தைய மாதத்தில் -0.3% ஆக இருந்தது. 

சேவைகள், மின்சாரம், எரிவாயு செலவு கொஞ்சம் குறைந்ததே  இதற்கு முக்கியமான காரணம். சென்ற ஆண்டு எட்டுமாத அளவுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் தொடர்ந்து எட்டாவது மாதமாக மூலாதார பணவீக்கம் குறைந்து வந்தது. இருந்தாலும் ஆகஸ்ட் மாத அளவைவிட அது செப்டம்பரில் கூடியது. ஒட்டுமொத்த பணவீக்கம் ஆகஸ்டில் -0.4% ஆக இருந்தது. இது செப்டம்பரில் 0% ஆக நிலவியது.

தனியார் போக்குவரத்துச் செலவில் படிப்படியாக அதிக குறைவு இடம்பெற்றதே இதற்கு பெரிதும் காரணம் என்று தெரியவந்தது. மூலாதார மற்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் 2020ல் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை  இந்த ஆணையம் சென்ற வாரம் கணித்து இருந்தது.  அதன்படி இந்த பணவீக்கம் -(மைனஸ்) முதல் -0.5%லிருந்து 0% வரை இருக்கும் என்று அது தெரிவித்தது. மூலாதார பணவீக்கம் அடுத்த ஆண்டில் 0% முதல் 1% வரை இருக்கும் என்றும்  ஒட்டு மொத்த பணவீக்கம் -0.5%க்கும் 0.5%க்கும் இடைப்பட்டு இருக்கும் என்று ஆணையம் முன்னுரைத்து இருக்கிறது. 

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தனியார் போக்குவரத்துச் செலவு சென்ற மாதம் 0.1% குறைந்தது. அதேபோல் மின்சாரம், எரிவாயுச் செலவு சென்ற மாதம் மெதுவான விகிதத்தில் குறைந்தது. ஆகஸ்டில் இந்தக் குறைவு -14.6% ஆக இருந்தது. செப்டம்பரில் இது -14.2% குறைந்தது.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

குடித்துவிட்டு பொது இடத்தில் குந்தகம் - ஆடவர் கைது

மதுபானம் அதிகமாக குடித்துவிட்டு பொது இடத்தில் பிறருக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த 51 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். தானியக்க வங்கி இயந்திரம் ஒன்றை குப்பைத்தொட்டியால் அவர் இடித்ததைக் காட்டும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்தச் சம்பவம் அக்டோபர் 19ஆம் தேதியன்று இரவு நேரத்தில் புளோக் 128 லோரோங் தோபாயோவில் நடந்தது.குடிபோதையில் மஞ்சள் நிறக் குப்பைத் தொட்டியின் மேற்பகுதியை எடுத்து இயந்திரத்தை இடித்துக்கொண்டிருந்தபோது மற்றொரு வழிப்போக்கர் அவ்வழியே வந்து அவரைத் தடுக்க முயன்றதையும் அந்தக் காணொளி காட்டியது. அவ்வாறு அணுகிய அந்த வழிப்போக்கரை குடிபோதையில் இருந்த ஆடவர் பல்வேறு ஆபாச வார்த்தைகளால் திட்டியதும் காணொளியில் பதிவானது

போதையால் மனம் பேதலித்த அந்த ஆடவருக்கு உதவ மட்டும் விரும்பியதாக ஷின் மின் செய்தி நிறுவனம் தெரிவித்தது. 

உதவிக்கான அழைப்பு இரவு 9.37 மணிக்குக் கிடைத்ததாகத் தெரிவித்த போலிசார், குடிபோதையில் பொது இடத்தில் பிறருக்குத் தொல்லை விளைவித்ததால் அந்த  51 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாகக் கூறினர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

‘டிரம்ப்-பைடன் இறுதி விவாதத்தில் விறுவிறுப்பு; ஆனால் பொதுமக்கள் கருத்தில் மாற்றமிராது’

அமெரிக்காவில் டிரம்ப்-பைடனின் முதல் விவாதத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து உரக்கப் பேசுவதும் நையாண்டி செய்வதுமாக இருந்தது. அதோடு ஒப்பிடும்போது சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை இருவரும் பங்கேற்ற இரண்டாவதும் இறுதியுமான விவாதம் கூர்மையாகவும் அதே நேரம் கட்டுப்பாடுடனும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், செய்தித் தகவல்களின்படி, அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே இடம்பெறும் விவாதங்கள் பொதுமக்களிடம் பெரும்பாலும் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்துவது இல்லை என ஆய்வுகள் காண்பிப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் இன்று நடைபெற்ற விவாதமும் இதற்கு விதிவிலக்காக அமைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில், அமெரிக்க அரசியல், கலாசார சூழல் பெருமளவு இறுகியிருப்பதால் சுதந்திர மனப்பான்மையுடன்  இருக்கும் பெருமளவிலான வாக்காளர்கள் கூட, இன்று நடந்த ஒரு விவாதத்தை வைத்து, தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளும் சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு ஒரு காரணம், பல வாரங்களாக இருவரும் தொலைக்காட்சி விளம்பரங்கள், பிரசார கூடங்கள், பேரணிகள் மூலம் மேற்கொண்டு வந்துள்ள பிரசாரத்தின் பயனாக இருவரின் நிலை, அவர்களுக்கு இடையே உள்ள கருத்து வேற்றுமைகள் போன்றவை மக்களுக்கு இந்நேரம் நன்கு தெரிந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

நேற்றைய விவாதத்தில் இரு வேட்பாளர்களுமே தத்தம் நிலையை எடுத்துக்கூற ஒருவர் மற்றொருவருக்கு வாய்ப்பளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரு டிரம்ப் திரு பைடன் தமது கருத்துகளை கூற வழிவிட்டு முந்தைய விவாதத்தில் செய்த குறுக்கீடுகளை தவிர்த்தார். திரு பைடனைப் பொறுத்தவரை அவர் சில சந்தர்ப்பங்களில் தமது கருத்துகளை கோர்வையாக எடுத்து வைக்க தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு சமாளித்தார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இரு வேட்பாளர்களுமே கொரோனா கொள்ளைநோய் போன்ற சில பிரச்சினைகளில் தங்கள் வாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடங்கிய இடத்திற்கே திரும்பத் திரும்ப வந்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இந்த விவாதம் முதல் விவாதத்துடன் ஒப்பிடும்போது ஆக்கபூர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. “இருக்கிற கால அவகாசத்தில் நான் இரண்டு வேட்பாளர்களின் தகுதியையும் எடைபோட்டுப் பார்க்கப் போகிறேன். பொதுமக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர்,” என்று ஸ்டோனி புருக் பல்கலைக்கழக அரசு நிர்வாக கல்வித் துறையின் இணைப் பேராசிரியரான யான்னா குருப்னிகோவ் கூறுகிறார். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

Pages