வேன் ஹால் தலை தப்பியது

லண்டன்: மான்செஸ்டர் யுனை டெட் காற்பந்துக் குழு அடுத்த ஆட்டத்திலும் தோற்றால் அக்குழு வின் நிர்வாகியான வேன் ஹால் அக்குழுவைவிட்டு துரத்தப்படுவது நிச்சயம் என்று பேசப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை நடந்த எஃப்ஏ கிண்ணப் போட்டி யில் மேன்யூ 3=0 என்ற கோல் கணக்கில் இரண்டாம் நிலைக் குழுவான ஸ்ரூஸ்பரி டௌன் குழுவைத் தோற்கடித்ததால் இப் போதைக்கு அந்த ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறார் வேன் ஹால். ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் மேன்யூவின் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார் கிறிஸ் ஸ்மாலிங். முற்பாதியின் கூடுதல் நேரத்தில் யுவான் மாட்டாவும் 61வது நிமிடத்தில் லிங்கார்டும் மேன்யூ சார்பில் கோலடித்தனர்.

அடுத்த பருவத்தில் மேன்யூ நிர்வாகியாக ஜோசே மொரின்யோ பொறுப்பேற்கலாம் எனப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் நடந்த யூரோப்பா லீக் ஆட்டத்தில் அதிகம் அறியப்படாத மிட்யுலேண்ட் குழுவிடம் 2=1 என மேன்யூ மண்ணைக் கவ்வ, வேன் ஹாலுக்கு நெருக்கடி முற்றியது. இதையடுத்து, நேற்றைய எஃப்ஏ கிண்ண ஆட்டத்திலும் மேன்யூ தோற்கும் பட்சத்தில் அவரது பதவி பறிக்கப்படுவது உறுதி எனக் கூறப்பட்டது. நல்லவேளையாக அந்த ஆட் டத்தில் மேன்யூ வென்றதால் வேன் ஹால் நிம்மதி அடைந்துள் ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

கூட்டு சேர்ந்து பெட்ரோல் விலையை உயர்த்தவில்லை

இங்குள்ள பெட்ரோல் நிறுவனங் கள் கூட்டு சேர்ந்து செயற்கையாக பெட்ரோல் விலையை உயர்த்து கின்றன என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சிங்கப்பூர் போட்டித்தன்மை ஆணையம் நேற்று தெரிவித்தது. கால்டெக்ஸ், எஸ்ஸே„, ஷெல், சிங்கப்பூர் பெட்ரோலியம் எனும் நான்கு பெட்ரோல் நிறுவனங்கள் ஒன்று மற்றதன் பெட்ரோல் விலை களைப் பார்த்து தங்கள் விலை களை நிர்ணயித்து வந்தாலும், அவை வேண்டுமென்றே தங்கள் விருப்பத்துக்கு விலையை நிர்ண யிக்கவில்லை என்று ஆணையத் தின் இடைக்கால அறிக்கை தெரிவித்தது.

அரசாங்க வரி உயர்வைக் காட்டிலும் ஏன் தங்களது பெட் ரோல் விலைகள் அதிகமாக உள்ளது என்று சிங்கப்பூரின் நான்கு பிரதான பெட்ரோல் நிறு வனங்களிடம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆணையம் கேட்டிருந்தது. பெட்ரோல் நிறுவனங்கள் தங்கள் விலைகளை உயர்த்தி லாபத்தைச் சம்பாதிக்கின்றன என்று சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் புகார் கூறியதை அடுத்து ஆணையம் இந்த வினாவை அவற்றின் முன் வைத்தது. அதன் பிறகு கச்சா எண்ணெய் யைக் காட்டிலும் பெட்ரோல் விலை கள் குறைவாகவே சரிந்தன. பத் தாண்டுகளில் அது ஆக அதிக மாக அதாவது 70% குறைந்தது.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

மரினா ஸ்குவேர் பாலம் பாதுகாப்பாக உள்ளது: பிசிஏ

மரினா ஸ்குவேர் கடைத் தொகு திக்கும் மில்லேனியா வாக் கடைத்தொகுதிக்கும் இடைப் பட்ட மக்கள் கடந்து செல்லும் மேம்பாலத்தின் பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கட்டட, கட்டுமான ஆணையம் நேற்று முன்தினம் தெரிவித்தது. திங்கட்கிழமை காலை 11.45 மணிக்கு ஒரு கனரக லாரியின் பாரந்தூக்கி மேம்பாலத்தின் கீழ் பகுதியை உரசிக்கொண்டு சென்றதால், பாலத்தில் கீழ்ப் பகுதிக் கூரைப் பகுதிகள் பாதிப்படைந்தன. பாதிப்படைந்து கீழே விழுந்த பாலத்தின் கீழ்ப்புற கூரையின் பகுதிகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. ஆணையத்தின் கட்டடப் பொறியாளர்கள் சோதித்துப் பார்த்ததில், பாலத் தின் வடிவமைப்புக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அறி யப்பட்டது. கனரக லாரியின் ஓட்டுநரான 56 வயது ஆடவர் கைது செய் யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

கடவுச்சீட்டை மறந்த சுவாரெஸ்

பார்சிலோனா: லண்டன் எமிரேட்ஸ் விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ஆர்சனல்=பார்சிலோனா குழுக்கள் மோதின. இதற்காக நேற்று முன்தினம் காலையில் லண்டனுக்குப் புறப்பட்டது பார்சிலோனா குழு. விமான நிலையத்திற்கு வந்த பின்புதான் அக்குழுவின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லூயிஸ் சுவாரெஸ் தமது கடவுச்சீட்டை வீட்டிலேயே மறந்து விட்டு வந்தது தெரிந்தது.

இதையடுத்து, குழு அதிகாரிகளில் ஒருவர் சுவாரெசின் வீட்டிற்குச் சென்று கடவுச்சீட்டை எடுத்து வர, உரிய நேரத்தில் அவரால் விமானத்தைப் பிடிக்க முடிந்தது. இன்றைய ஆட்டத்திற்கு முன்பு வரை இந்தப் பருவத்தில் பார்சிலோனாவிற்காக 37 போட்டிகளில் பங்கேற்ற சுவாரெஸ் 41 கோல்களையும் புகுத்தினார்.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

புதிய ரேடார் சாதனத்தை சீனா நிறுவக்கூடும்

வா‌ஷிங்டன்: சர்ச்சைக்குரிய ஸ்பிராட்லி தீவுகளில் புதிய நவீன ரேடார் முறையை சீனா ஏற்படுத் தக்கூடும் என்று அமெரிக்க ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது. அதற்கான பணியில் சீனா ஈடுபட்டிருக்கக்கூடும் என்பதை அண்மையில் எடுக்கப்பட்ட துணைக்கோளப் படங்கள் காட்டுவதாக அந்த ஆய்வுக் கழகம் குறிப்பிட்டுள்ளது. தென்சீனக் கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடும் சீனா அதன் கோரிக்கையை வலுப் படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வரிசையில் சீனா தற்போது ஸ்பிராட்லி தீவுகளில் ஏற்படுத்தி வரும் புதிய ரேடார் வசதிகளுக்கான கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைய வுள்ளதாக துணோக்கோளப் படங்கள் காட்டுவதாக அந்த ஆய்வும் கழகம் தெரிவித் துள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் சீனா உருவாக்கியுள்ள செயற்கை தீவு சுமார் 210,500 சதுர மீட்டர் பரப்பளவை உள்ளடக்கி யிருப் பதாகவும் ஆய்வுக் கழக அறிக்கை தெரிவித்தது. செயற்கைத் தீவின் வடக்குப் பகுதியில் இரு ரேடார் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ள தாகவும் தெற்குப் பகுதியில் ரேடார் சாதனங்கள் நிறுவப் பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளது.

ஸ்பிராட்லி தீவுகளில் சீன ராணுவத்தின் கடற்படை வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

ஒபாமாவுடன் நடனமாடிய 106 வயது மூதாட்டி

வா‌ஷிங்டன்: இதுவரை 18 அமெரிக்க அதிபர்களை சந்தித் துள்ள 106 வயதான மூதாட்டி, தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தது தமக்கு அளவுகடந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பதாகக் கூறியுள் ளார். தெற்கு கரோலினாவைச் சேர்ந்த வெர்ஜினியா மெக்லாரின் என்ற அந்த மூதாட்டி வெள்ளை மாளிகையில் ஒபாமா தம்பதியைப் பார்த்ததும் அவரால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

‘அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரைச் சந்தித்து விட்டேன்’ எனக்கூறி உற்சாக மடைந்த அந்த மூதாட்டி திரு ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெலின் கைகளை பிடித்துக்கொண்டு நடனம் ஆடினார். அந்த மூதாட்டியை மேலும் உற்சாகப்படுத்த திரு ஒபாமாவும் அவரது மனைவியும் மூதாட்டியின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடனம் ஆடியிருக்கின்றனர். அமெரிக்காவை வடிவமைத்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி மாதம், கறுப்பின வரலாற்று மாதமாக அமெரிக்காவில் கடைப்பிடிக் கப்படுகிறது. இதையொட்டி அந்த மூதாட்டி ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். “திரு ஒபாமாவை சந்திப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று கூறிய அந்த மூதாட்டி தன் வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்ட தாகக் கூறினார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் 106 வயதான மூதாட்டி வெர்ஜினியா மெக்லாரின், ஒபாமா தம்பதியரின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடனம் ஆடத் தொடங்கி விட்டார்.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

நாடு கடத்தப்பட்ட நால்வரிடம் இந்தோனீசியா விசாரணை

ஜகார்த்தா: ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக சிரியா செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் நான்கு இந்தோனீசியர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் இந்தோனீசியாவுக்கு நாடு கடத்தியதைத் தொடர்ந்து இந்தோனீசிய பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அந்த நால்வரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார். 15 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையை அந்த நால்வர் ஐஎஸ் குழுவை ஆதரிக்கும் இந்தோனீசிய தீவிரவாதக் குழுவின் உறுப்பினர்கள் என்று விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக இந்தோனீசிய போலிசாருக்கு நெருக்கமான தகவல்கள் கூறின. அந்த நால்வரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாத்தாம் தீவு வழியாக இந்தோனீசியாவுக்கு நாடு கடத்தியதை சிங்கப்பூர் உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

முன்னுதாரண மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கிய இந்தியப் பிரதமர்

முன்னுதாரண மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கிய இந்தியப் பிரதமர் என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டாலும் இந்தியாவில், குறிப்பாக ஊரகப் பகுதிகளில் திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழிப்பதை இன்றும் காணலாம். இந்த நிலையை மாற்றி இந்தியாவைத் தூய்மையான நாடாக மாற்றும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடியால் ‘தூய்மை இந்தியா’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. அந்த முயற்சிக்குக் கைகொடுக்கும் விதமாக சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி ஒருவர், தாம் வளர்த்த ஆடுகளை விற்று தமது வீட்டில் கழிவறை கட்டியிருப்பதைப் பெரிதும் பாராட்டினார் பிரதமர் மோடி. ராஜந்த்கான் மாவட்டம், குருபாத் கிரா மத்தில் நேற்று முன்தினம் நடந்த ‘கிராம நகர்ப்புற இயக்கம்’ எனும் திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார். அப்போது, திருவாட்டி குன்வர் பாய் எனும் அம்மூதாட்டியை மேடைக்கு அழைத்து கௌரவித்த மோடி, அவரது காலிலும் விழுந்து வணங்கினார்.

தாம் வளர்த்த ஆடுகளில் சுமார் பத்து ஆடுகளை விற்று தமது வீட்டில் இரு கழிவறைகளைக் கட்டினார் அந்த மூதாட்டி. பின்பு, தம் கிராமத்தினர் அனைவரையும் வரவழைத்து தம் வீட்டில் கட்டப்பட்ட கழி வறைகளைக் காட்டி வீடுகளில் கழிவறை இருக்கவேண்டியதன் அவசியத்தை எடுத் துரைத்தார். இன்று, அந்தச் சிற்றூரில் உள்ள எல்லா வீடுகளிலும் கழிவறை உள்ளது. “நகர்ப்புறத்தில் இருந்து வெகுதொலை வில் இருக்கும் இந்தச் சிற்றூரில் வசித்து வரும் இந்த 104 வயது மூதாட்டி தொலைக் காட்சி பார்ப்பதும் இல்லை, செய்தித்தாள் படிப்பதும் இல்லை. ஆனாலும், தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கிய அம்சமான கழிவறை அமைப்பது எனும் செய்தி எப்படியோ இவரைச் சென்றடைந்துள்ளது,” என்று புகழ்மாலை சூட்டினார் மோடி. இந்தியாவின் ஆணிவேராகத் திகழும் கிராமங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன என்ற அவர், திருவாட்டி குன்வர் பாயின் கதை எல்லாருக்கும், குறிப்பாக இளையர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்பதால் அதை நாடு முழுக்க பரப்பும்படி ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார்.

ஆடுகளை விற்று வீட்டில் கழிவறை கட்டியதோடு தூய்மையைப் பேண வேண்டியதன் அவசியத்தை மற்றோருக்கும் எடுத்துரைத்த 104 வயது மூதாட்டி திருவாட்டி குன்வர் பாயின் காலில் விழுந்து வணங்கும் இந்தியப் பிரதமர் மோடி. காணொளிப் படம்

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேர்வோர் அதிகரிப்பு

தொழில்­நுட்­பக் கல்விக் கழ­கத்­தில் சேரும் மாண­வர்­கள் எண்­ணிக்கை கடந்த 10 ஆண்­டு­களில் பெரு­ம­ளவு கூடி­யுள்­ளது. 2005ல் 21,603 ஆக இருந்த அந்த எண்­ணிக்கை 2014ல் 28,000 ஆகி உள்ளது. பிறப்பு எண்­ணிக்கை குறை­ வினால், உயர்­நிலைக் கல்விக்­குப் பிந்திய படிப்­பு­களில் சேர் வோர் எண்­ணிக்கை குறைந்து வரும்­போ­தும் தொழில்­நுட்­பக் கல்விக் கழ­கத்­தில் சேர்வோர் எண்­ணிக்கை கூடி வரு­வ­தாக புள்ளி விவ­ரங்கள் காட்­டு­கின் றன. கல்­வி­யாண்­டில் பள்­ளி­களில் சேரும் மாணவர் எண்­ணிக்கை 2013ல் 41,500 ஆக இருந்தது 10% குறைந்து 2014ல் 38,200 ஆனது. எனினும் அதே­கா­ல­கட்­டத்­தில் தொழில்­நுட்­பக் கல்விக் கழ­கத்­தில் சேர்ந்த மொத்த மாணவர் எண்­ணிக்கை 26,000 இலி­ருந்து 28,000 ஆக உயர்ந்தது.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

இந்தியரிடம் நீரிழிவு கட்டுப்பாடு மோசமாக இருக்கும் ஆபத்து

இந்திய, மலாய் இனத்­த­வர்­களி­டம் நீரிழிவு நோய் கட்­டுப்­பாடு மோசமாக இருக்­கும் ஆபத்து உள்­ளதை­யும் ஆய்வு காட்­டு­கிறது. புதிதாக அடை­யா­ளம் காணப்­பட்ட டைப் 2 வகை நீரிழிவு நோயா­ளி­கள் ஆரம்பத்­தில் தங்க­ளது உடல்­நிலையை நன்கு கவ­னித்­தா­லும் மூன்றாண்­டு­களுக்­குப் பிறகு, அவர்­களி­டம் நோய் பரா­ம­ரிப்பு குறைந்து விடு­வ­தாக அண்மைய ஆய்வில் தெரிய வந்­துள்­ளது. இன்­சு­லின் மருந்தைத் தொடர்ந்து எடுக்­கும் பழக்­கம் பல­ருக்கு இல்­லா­தது இதற்குக் கார­ண மாக இருக்­க­லாம் என்று சிங் ஹெல்த் பலதுறை மருந்த­கங் களின் ஆய்வுப் பிரிவுக்கான இயக்­கு­நர் டாக்டர் டான் நியாம் சுவான் தெரி­வித்­தார்.

டைப் 2 வகை நீரிழிவு நோயா­ளி­கள் நோயைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க மருந்தையே சார்ந்­துள்­ள­னர். எனினும் காலப்­போக் ­கில் மருந்­தினால் நோயைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க முடியாத நிலையை பலர் எட்­டு­கின்ற­னர். அப்போது இன்­சு­லின் தேவைப் ­படு­கிறது. “இன்­சு­லின் பயன்­படுத்­தத் தொடங்­கினால் அதோடு தங்கள் வாழ்க்கையே முடிந்து விடு­வ­தாக பலர் கரு­து­கின்ற­னர். உண்மை­யில் நீரிழிவு நோய் சிகிச்சை­யில் இன்­சு­லின் ஒரு பகு­தி­யாக உள்ளது,” என்றார் டாக்டர் டான்.

Pages