மோசடி செய்தியைத் தடுக்கும் செயலி அறிமுகம்

மோசடி அழைப்புகளும் செய்திகளும் கைபேசிப் பயனீட்டாளர்களைப் போய் சேராமல் தடுத்துவிடக்கூடிய புதிய கைத்தொலைபேசி செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

‘ஸ்கேம்ஷீல்டு’ என்று குறிப்பிடப்படும் அந்தச் செயலி, ஒருவருக்கு வரக்கூடிய குறுஞ்செய்திகளையும் அழைப்புகளையும் பரிசோதிக்கும்.

ஏற்கெனவே நன்கு தெரிந்திருக்கும் மோசடி எண்கள் அடங்கிய பட்டியல் அந்தச் செயலியில் இருப்பதால் அந்த எண்களில் இருந்து வரும் அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் அது தடுத்துவிடும்.

தேசிய குற்றச்செயல் தடுப்பு மன்றமும் ‘ஓப்பன் கவர்ன்மென்ட் புரோடெக்ட்ஸ்’ என்ற நிறுவனமும் புதிய செயலியை உருவாக்கி உள்ளன.

இந்தப் புதிய செயலியை பயன்படுத்துவோர் தங்களுடைய கைபேசி எண்ணைப் பதிய வேண்டிய தேவையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

ஒரே இடத்தில் ஏர்பஸ் செயல்பாடுகள்; சிலேத்தாரில் புதிய வளாகம் திறப்பு

விமா­னத் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான ஏர்­பஸ் செயல்பாடுகள் அனைத்­தை­யும் ஒரே இடத்­தில் இடம்­பெ­றச் செய்­யும் வகை­யில் சிலேத்­தா­ரில் $38 மில்­லி­யன் செல­வில் கட்­டப்­பட்ட ஒரு வளா­கம் நேற்று அதிகார பூர்­வ­மாகத் திறக்­கப்­பட்­டது.

கொவிட்-19 கார­ண­மாக உல­களா­விய விமா­னப் போக்­கு­வ­ரத்து துறை­யும் ஆகாய தொழில் து­றை­யும் மிகமோ­ச­மா­கப் பாதிக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

பரா­ம­ரிப்­புச் சேவை­களும் விமானத் தயா­ரிப்­பும் 40% குறைந்து­விட்­டன. பய­ணி­க­ளின் எண்­ணிக்கை 66 விழுக்­காடு படுத்­து­விட்­டது. இந்த நிலை­யில் ஏர்­பஸ் நிறு­வ­னம் ஒரே இடத்­தில் தன்­னு­டைய செயல்­பா­டு­கள் அனைத்­தை­யும் ஒருங்­கி­ணைக்­கிறது.

புதிய வளா­கம் 51,000 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் அமைக்­கப்­பட்டு இருக்­கிறது. இது ஏழு காற்­பந்துத் திடல்களைவிட பரப்­ப­ள­வில் கொஞ்­சம் அதி­க­மா­னது.

சிங்­கப்­பூ­ரில் ஏர்­பஸ் கொண்­டி­ருக்­கும் நம்­பிக்­கைக்கு இது அடை­யா­ள­மா­கத் திகழ்­வ­தாக வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று வளா­கத்­தின் அதி­கா­ரபூர்வ திறப்­பு­வி­ழா­வில் தெரி­வித்­தார்.

“கொவிட்-19க்கு முன்பு இது இடம்­பெற்­றி­ருந்­தால் இங்கு விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் இடம்­பெ­றக்­கூ­டிய மற்­றொரு முதலீடாக இதை நாம் கரு­து­வோம்.

“விமா­னத் தொழில்­துறை வளர்ந்து வரு­வது பற்றி இப்­போ­தைய சூழ்­நி­லை­யில் நினைத்து பார்ப்­ப­வர்­கள் வெகு சிலரே. இந்­தச் சூழ­லில் இந்த வளா­கம் திறக்­கப்­ப­டு­வது குறிப்­பி­டத்­தக்­கது,” என்று அமைச்­சர் கூறி­னார்.

ஐரோப்­பாவை சேர்ந்த ஏர்­பஸ் நிறு­வ­னத்­தில் சிங்­கப்­பூ­ரில் ஏறக்­கு­றைய 800 பேர் வேலை பார்க்­கிறார்­கள். உல­கம் முழு­வ­தும் இந்த நிறு­வ­னத்­தில் 130,000க்கும் அதிக ஊழி­யர்­கள் பணி­யாற்­று­கி­றார்­கள்.

ஏர்­பஸ் நிறு­வ­னம் சுமார் 50 ஆண்டு கால­மாக சிங்­கப்­பூ­ரில் செயல்­பட்டு வரு­கிறது. 1969ல் சிங்கப்­பூர் விமா­னப் படைக்கு அது முதன்­மு­த­லாக நான்கு ஹெலி­காப்­டர்­களை விற்­றது.

அது முதல் சிங்­கப்­பூ­ரில் ஆகா­யத் தொழில்­து­றை­யைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளு­டன் ஏர்­பஸ் அணுக்­க­மா­கச் செயல்­பட்டு வரு­கிறது.

சிங்கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­து­டன் கூட்­டாக முத­லீடு செய்து விமா­னி­க­ளுக்கு அது பயிற்சி அளிக்­கிறது. ­ஆய்­வு­க­ளி­லும் ஈடு­பட்டு வரு­கிறது.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

அமரர் லீ குவான் இயூவின் உயிலை தவறாகக் கையாண்ட வழக்கறிஞர் 15 மாதங்களுக்கு இடைநீக்கம்

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் மருமகளான மூத்த வழக்கறிஞர் லீ சுயெட் ஃபெர்ன், 15 மாத காலம் இடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.  

திரு லீயின் கடைசி உயிலைக் கையாண்டதில் அந்த வழக்கறிஞர்  தவறாக நடந்துகொண்டு இருக்கிறார் என்று மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் முடிவு செய்து அவரை நீக்கி வைத்துள்ளது.

“திரு லீயின் கடைசி உயிலை வேகமாக நிறைவேற்ற வழக்கறிஞர் திருவாட்டி லீ உதவி இருக்கிறார். 

“அந்த உயில்படி கணிசமாக பலன் அடையக்கூடியவரான தனது கணவரின் உத்தரவுகளைக் கண்மூடித்தனமாக திருவாட்டி லீ பின்பற்றி இருக்கிறார். 

“இவற்றின் மூலம் ஒரு வழக்கறிஞர், ஒரு சொலிசிடருக்குப் பொருத்தமில்லாத வகையில் அவர் தவறாக நடந்துகொண்டு இருக்கிறார்,” என்று எழுத்து மூலமான தீர்ப்பில் அந்த மூவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், மேல்முறையீட்டு நீதிபதி ஜூடித் பிரகாஷ், நீதிபதி ஊ பி லி ஆகியோர் அடங்கிய அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது.

வழக்கறிஞர்கள் தவறாக நடந்தார்களேயானால் அதுபற்றி விசாரிக்கும் ஆக உயரிய ஒழுங்குமுறை அமைப்பு இந்த மூவர் நீதிமன்றமே ஆகும்.  

திரு லீ குவான் இயூவின் கடைசி உயில் 2013 டிசம்பர் 17ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. அந்த உயிலைத் தயாரிப்பதிலும் நிறைவேற்றுவதிலும் வழக்கறிஞர் திருவாட்டி லீ பங்காற்றினார். 

அந்தப் பங்கை மையமாகக் கொண்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. திரு லீயின் கடைசி உயில், அவருடைய ஆறாவது உயிலில் இருந்து பல வழிகளில் மாறுபட்டு இருந்தது. 

திரு லீயின் சொத்துகளை அவருடைய மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுப்பது, எண் 38 ஆக்ஸ்லி ரோடு முகவரியில் உள்ள திரு லீயின் வீட்டை இடிப்பது ஆகியவை இவற்றில் அடங்கும். 

திரு லீ, தன்னுடைய வழக்கமான வழக்கறிஞரான குவா கிம் லியுடன் விவாதித்திருந்த, அவர் விரும்பி இருந்த சில மாற்றங்கள் கடைசி உயிலில் இல்லை என்பதை அந்த நீதிமன்றம் சுட்டியது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு விசாரணை நடந்தது. 

வழக்கறிஞர் திருவாட்டி லீ நிபுணத்துவ ரீதியில் தவறாக நடந்து கொண்டிருக்கிறார் என்பதால் அவரை வழக்கறிஞர்கள் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று சட்டக் கழகம் வாதிட்டது. 

வழக்கறிஞர் திருவாட்டி லீ, சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் திரு லீ குவான் இயூவின் புதல்வரான திரு லீ சியன் யாங்கின் மனைவி ஆவார். அவர் 37 ஆண்டுக்கும் அதிக காலமாக வழக்கறிஞராக தொழில் நடத்தி வருகிறார். 

ஆகஸ்ட் மாத விசாரணையின் போது முன்னிலையான திருவாட்டி லீயின் வழக்கறிஞர்கள்,  தன் கட்சிக்காரருக்கு எதிராக அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டனர்.

திரு லீ ஏழு உயில்களை எழுதி இருந்தார். முதல் ஆறு உயில்களை அவருடைய வழக்கறிஞர் திருவாட்டி குவா கிம் லி தயாரித்தார். 

ஆனால் கடைசி உயிலில் திருவாட்டி குவா சம்பந்தப்பட்டு இருக்கவில்லை.  

“பல ஆண்டு காலம் வழக்கறிஞராக இருந்து வந்துள்ள திருவாட்டி லீ கணிசமான அனுபவம் உள்ளவர். 

“ஆனால் அவரின் செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத, எந்தவொரு சாக்குபோக்குக்கும் இடமில்லாதபடி இருக்கின்றன,” என்று நேற்று தன்னுடைய தீர்ப்பில் மூவர் நீதிமன்றம் குறிப்பிட்டு  இருந்தது.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

மலேசியா, ஜப்பானிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) இரவு 11.59 மணியிலிருந்து இது நடப்புக்கு வரும்.

கடந்த 14 நாட்கள் மலேசியாவில் தங்கியிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் வளாகங்களில் தங்கியிருக்க வேண்டும்.

இவ்விரு நாடுகளுக்கிடயே ‘பசுமைத் தட’ ஏற்பாடுகளின் கீழ், பிசிஏ எனப்படும் தங்கியிருந்து வேலை செய்வோர், சிங்கப்பூருக்குத் திரும்பி வரும் பயணிகள் ஆகியோருக்கும் பொருந்தும்.

கடந்த 14 நாட்களில் ஜப்பானில் இருந்து வருவோருக்கும் இதே போன்ற நடைமுறை பொருந்தும்.

வசிப்பிடத்திலேயே தங்கியிருக்கும் உத்தரவை (SHN) தனிமைப்படுத்தல் வளாகங்களில் அல்லாமல், வீடுகளில் நிறைவேற்ற முன்பு அனுமதி பெற்றிருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்தும்.

சாபா தவிர மலேசியாவின் மற்ற பகுதிகளிலிருந்து வருவோர் தங்களது வசிப்பிடத்திலேயே நிறைவேற்றவும் சாபாவிலிருந்து வருவோர் தனிமைப்படுத்தல் வளாகங்களில் 14 நாட்களுக்கு SHN உத்தரவை நிறைவேற்றவும் முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தது.

மலேசியாவிலும் ஜப்பானிலும் கொவிட்-19 தொற்று பரவல் அதிகரித்திருப்பதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் அல்லாதோர் மலேசியாவில் கடந்த 14 நாட்களுக்குள் தங்கியிருந்திருந்தால், அவர்களும் சிங்கப்பூருக்குள் வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு பாலிமெரேஸ் செயின் ரியாக்‌ஷன் பரிசோதனையைச் செய்திருக்க வேண்டும். இந்த நடைமுறை அடுத்த வெள்ளிக்கிழமை இரவு 11.59 முதல் சிங்கப்பூருக்கு வருவோருக்கு நடப்புக்கு வரும். எனினும், சிங்கப்பூர்- மலேசியா இடையேயான ‘பசுமைத் தட’ ஏற்பாடுகளின்படி சிங்கப்பூருக்குத் திரும்பும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பயணிகளுக்கு இது பொருந்தாது.
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

வசிப்பிடத்தில் தங்கியிருக்க வேண்டிய உத்தரவை மீறிய 4 வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி ரத்து

வசிப்பிடத்தில் தங்கியிருக்க வேண்டிய உத்தரவை மீறியதற்காக நான்கு வெளிநாட்டுப் பணியாளர்களின் வேலை அனுமதி அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று (நவம்பர் 20) மனிதவள அமைச்சு தெரிவித்தது.

செல்லத்தக்க காரணங்களின்றி, மனிதவள அமைச்சின் அனுமதியின்றி அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து வெளியே சென்றதாகக் கூறப்பட்டது.

அவர்களில் மூவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர்; ஒருவர் எஸ்-பாஸ் வைத்திருப்பவர்.

அந்த நால்வரில் இருவர் வெளியில் சென்றது, அவர்களுக்கு மனிதவள அமைச்சு வழங்கிய அறிவார்ந்த கடிகாரம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சிங்கப்பூருக்குள் வந்ததும் அறிவார்ந்த கடிகாரத்தை அதிகாரிகள் கட்டி, அது செயல்படுகிறதா என்பதைப் பரிசோதித்து, பின் பூட்டி விடுவர். வசிப்பிடத்திலேயே தங்குவதற்கான உத்தரவைப் பூர்த்தி செய்த பிறகே அதனை நீக்க முடியும். அதனைக் கட்டியிருப்பவர்கள், வசிப்பிடத்திலிருந்து வெளியேறினால் உடனே அது மனிதவள அமைச்சுக்குத் தகவல் அனுப்பிவிடும்.

அந்தக் கடிகாரத்தைச் சேதப்படுத்த அல்லது கையிலிருந்து அகற்ற முயற்சி செய்தாலும் அது எச்சரிக்கைத் தகவலை அதிகாரிகளுக்கு அனுப்பிவிடும். அத்தகையோர் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும்.

தனிமைப்படுத்தல் வளாகத்தில் தங்கியிருந்த இருவர் வெளியே சென்றதை பொதுமக்கள், நிறுவன முதலாளி ஆகியோர் மூலம் அமைச்சு அறிந்தது. தனிமைப்படுத்தல் வளாகத்தில் தங்குவோருக்கு அறிவார்ந்த கடிகாரம் கட்டப்படுவதில்லை.

வசிப்பிடத்தில் தங்கியிருக்க வேண்டிய உத்தரவை மீறியதன் தொடர்பில், கடந்த மே மாதம் முதல் இதுவரை 44 பேரின் வேலை அனுமதி அட்டைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

சிங்கப்பூர் வழியாக இடைமாற்றச் சேவை விமானங்களை இயக்கும் ஜெட்ஸ்டார்

பயணிகள் சாங்கி விமான நிலையத்தில் இறங்கி வேறு விமானத்தில் மாறிக்கொள்ளும் சேவையை ‘ஜெட்ஸ்டார் ஏஷியா’ நிறுவனம் வழங்க இருப்பதாக இன்று (நவம்பர் 20) அறிவித்தது.

பேங்காக், ஹோ சி மின் நகர், ஜகார்த்தா, கோலாலம்பூர், பினாங்கு, நோம் பென் ஆகிய ஆறு தென்கிழக்காசிய நகரங்களிலிருந்து புறப்படும் அந்த நிறுவனத்தின் விமானங்கள், டிசம்பர் 1 முதல் சிங்கப்பூர் வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய இடைமாற்ற விமானப் பயணங்களை அனுமதிக்கும் நான்காவது விமான நிறுவனம் இது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் எஸ்ஐஏ, ஸ்கூட், சில்க்ஏர் ஆகியவை ஆகஸ்ட் மாதத்தில் இச்சேவையை வழங்கத் தொடங்கின.

இதுபோன்ற இடைமாற்ற விமானப் பயணங்களைத் துவங்குவதன் மூலம் சாங்கி விமான நிலையத்தின் போக்குவரத்துக்கு ஒரு சிறு உந்துதல் உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் சிங்கப்பூரில் விமானம் மாறும் பயணிகள், பயணம் முழுக்க தங்களின் கைகளில் வார் ஒன்றை அணிந்திருக்க வேண்டும். 

இதைக்கொண்டு விமான நிலையமும் விமான நிறுவனப் பணியாளர்களும் அவர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.

மேலும் விமானத்தில் அவர்கள் மற்றப் பயணிகளிடமிருந்து முடிந்தவரை மிகத் தொலைவிலேயே அமர வைக்கப்படுவர். 

இருப்பினும் வியட்னாமிலிருந்து வருவோருக்கு இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும். 

இடைமாற்ற விமானப் பயணங்களை “மீண்டுவரும் விமான நிறுவனத்தில் ஆக்கபூர்வமான ஒரு படி,” என்று குறிப்பிட்டார் ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாரா பசுபதி.

இதுவரை சிங்கப்பூரில் இயங்கிவரும் அதன் தொழிலாளர்களில், கால்வாசியினரை நிறுவனம் ஆட்குறைப்பு செய்துவிட்டது. 

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

2021 ஏப்ரலில் ஆக்ஸ்ஃபர்ட் தயாரிப்பிலான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறதாம்; விலை ரூ.1,000 இருக்கலாம்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுகாதார ஊழியர்களுக்கும் வயதானவர்களும் ‘ஆக்ஸ்ஃபர்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள கொவிட்-19 தடுப்பூசி கிடைக்கும் என்றும் அதன்பின் ஏப்ரலில் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வரும் என்றும் ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவாலா தெரிவித்துள்ளார்.

இருமுறை அந்தத் தடுப்பூசியை போட வேண்டியது அவசியம் என்றும் அதற்கு அதிகபட்சம் ரூ.1,000 விலை நிர்ணயிக்கப்படலாம் என்றும் திரு பூனவாலா குறிப்பிட்டார். 

பெரும்பாலும் 2024ஆம் ஆண்டிற்குள் இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிடலாம் என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சநிலை மாநாட்டில்’ பங்கேற்றபோது அவர் சொன்னார்.

“கொள்முதல், வரவுசெலவுத் திட்டம், தளவாடம், உள்கட்டமைப்பு, மக்களின் விருப்பம் போன்ற பல காரணங்களால் இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகலாம்.

தடுப்பூசியின் செயல்திறன் பற்றிக் கேட்டதற்கு, ஆக்ஸ்ஃபர்ட்-அஸ்ட்ராஸெனிக்கா தடுப்பூசி முதியோரிடத்திலும் நல்ல பலனைத் தருகிறது என்றும் பக்க  விளைவு ஏதும் இல்லை என்றும் திரு பூனவாலா கூறினார்.

மற்ற நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்று குழந்தைகளிடத்தில் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை என்ற அவர், அதனால் குழந்தைகளுக்கு அந்தத் தடுப்பூசி போடுவதில் அவசரப்பட வேண்டியது இல்லை என்றும் இன்னும் பலகட்ட ஆய்வு முடிவுகளுக்காகக் காத்து இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

சிங்கப்பூரில் '3டி' வகை இலவச முகக்கவசங்கள் விநியோகம்

சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் இம்மாதம் 30ஆம் தேதி முதல் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடிய இரு முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.

டிசம்பர் 13ஆம் தேதி வரை நீடிக்கக்கூடிய நாடளாவிய இந்த முகக்கவச விநியோகத்தை தெமாசெக் அறநிறுவனம் மேற்கொள்கிறது.

புதிய முகக்கவசங்கள் சுவாசத்துக்கு எளிதான 3டி வகையைச் சேர்ந்தவை என்றும் உள்ளூர் நிறுவனமான 'புரோஷீல்ட்' இதனைத் தயாரித்து உள்ளதாகவும் தெமாசெக் தலைமை நிர்வாகியும் நிர்வாக இயக்குநருமான ஹோ சிங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

தேசிய தின அன்பளிப்புப் பையில் வழங்கப்பட்டதைப்போன்று இந்த 3டி முகக்கவசங்களின் வடிவமைப்பும் முகத்தில் சரியாகப் பொருந்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.

காற்றை வடிகட்டும் வசதி இவற்றில் இருக்கும்.
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

இந்தியாவில் கொவிட்-19 தொற்று 9 மில்லியனைக் கடந்தது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,882 பேரை கொவிட்-19 கிருமி தொற்ற, மொத்த பாதிப்பு 9,004,365ஆக அதிகரித்தது.

கொரோனா தொற்றால் மேலும் 584 பேர் மரணமடைய, உயிரிழந்தோர் எண்ணிக்கை 132,162ஆனது.

தொற்றில் இருந்து மீண்டோர் விகிதம் 93.6 விழுக்காடாக உயர்ந்தது. 

ஆயினும், 46 நாள்களுக்குப் பிறகு கிருமித்தொற்றில் இருந்து  தேறியோர் எண்ணிக்கையைக் காட்டிலும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா 1,763,055 பேருடன் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகியவை பட்டியலின் அடுத்த இடங்களில் இருக்கின்றன.

இதனிடையே, வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்திராவிடில்  2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். முன்னர் அபராதத் தொகை 500 ரூபாயாக இருந்தது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,546 பேரை கொரோனா தொற்றியது; 98 பேர் மரணமடைந்தனர்.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

இந்திய-மியன்மார் எல்லை வழி கடத்தல்; 66 கிலோ தங்கம் சிக்கியது

இந்திய-மியன்மார் எல்லை வழியாக தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு சரக்குந்துகளைச் சோதித்த போது அவற்றில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தலா 166 கிராம் எடை கொண்ட 400 தங்கக் கட்டிகளை, அதாவது 66.4 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அவற்றின் மொத்த மதிப்பு ரூ.35 கோடி எனக் கூறப்பட்டது.

இதன் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Pages