கைகலப்பு: மூன்று மாதர்கள் கைது

மரின் பரேடில் உள்ள புளோக் 13 மரின் டெரசுக்கு அருகே கைகலப்பு நிகழ்ந்ததை அடுத்து 32 முதல் 55 வரை வயதுள்ள மூன்று மாதர்கள் கைதாகி இருக்கிறார்கள். 

இந்தச் சம்பவம் தொடர்பில் 14 மற்றும் 15 வயதுள்ள இரு பதின்ம வயது பெண்களும் 38 வயது ஆடவரும் விசா ரிக்கப்பட்டு வருகிறார்கள்.

சம்பவ இடத்தில்  செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 1.45க்கு மொத்தம்  11 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்ததையும் தொடர்ந்து அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டதையும் பார்த்ததை அடுத்து தாங்கள் நடவடிக்கை எடுத்ததாக போலிஸ் தெரிவித்தது. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

‘தேசிய பல்கலைக்கழகம் மேலும் ஒளிவுமறைவு இல்லாத நிலையைக் கடைப்பிடிக்கும்’

தவறான பாலியல் நடத்தைகள் பற்றிய தகவல்களைத்  தெரியப்படுத்தும் முறையில் மேலும் ஒளிவுமறைவு இல்லாத நிலையைக் கடைப்பிடிக்கப்போவதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உறுதி கூறி இருக்கிறது. அந்தக் கல்லூரியில் துறைத் தலைவராக பணியாற்றிய டாக்டர் ஜெரமி ஃபெர்னாண்டோ என்பவருக்கு எதிராக கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை இந்தப் பல்கலைக்கழகம் கையாண்ட முறையில் குறைபாடுகள் இருப்பதாக பேராசிரியர் டோமி கோ நேற்று தெரிவித்தார். 

டாக்டர் ஃபெர்னாண்டோ போதித்து வந்த தெம்புசு கல்லூரியின் தலைவராக இருக்கும் பேராசிரியர் கோ, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இனிமேல் மிகவும் ஒளிவுமறைவு இல்லாத நிலையைக் கடைப்பிடித்து குறித்த காலத்தில் தகவல்களை வெளியிடும் என்று தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஃபெர்னாண்டோ சம்பந்தப்பட்ட விவகாரம் பற்றிய புதிய தகவல்களைக் குறித்த நேரத்தில் இந்தப் பல்கலைக்கழகம் தெரியப்படுத்தவில்லை என்று ஊடகத்திடம் பேசிய அவர் கூறினார். 

சார்ஸ், கொவிட்-19 போன்ற பிரச்சினைகளை சிங்கப்பூர் அரசாங்கம் கையாண்ட விதத்தில் இருந்து இந்தப் பல்கலைக்கழகம் கற்றுக்கொள்ள முடியும் என்றும் பேராசிரியர் டோமி கோ தெரிவித்துள்ளார். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

பார்தி லியானி புகார்: அரசு தரப்பு வழக்கறிஞர்களை விசாரிக்க அனுமதி

அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் டான் யான்யிங், டான் வீ ஹாவ் ஆகிய இருவரும் தமது வழக்கைக் கையாள்வதில் முறைகேடாக நடந்துகொண்டனர் என்று முன்னாள் வீட்டுப் பணிப்பெண் திருவாட்டி பார்தி லியானி செய்த புகாரை விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

சாங்கி விமான நிலையத்தின் முன்னாள் தலைவர் லியூ மன் லியோங்கின் வீட்டில் பணிபுரிந்த 46 வயது பார்தி மீது $34,000 திருடியதாக அக்குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கீழ்நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். 

உயர்நீதி மன்றத்தில் முன்னைய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டு, கடந்த மாதம் திருவாட்டி பார்தி குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். வழக்கில் குறுக்கு விசாரணை செய்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தம்மை நியாயமான முறை யில் விசாரிக்கவில்லை என்று திருவாட்டி பார்தி புகார் செய்தார்
வழக்கில் முறைகேடு நடந்ததற்கான அடிப்படை இருந்ததால், புகாரை விசாரிப்பதற்குத் தலைமை நீதிபதி அனுமதி அளித்திருப்பதாகக் கூறப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

ஊழியர் ஆள்சேர்ப்பு - கையூட்டு பெற்ற முகவை இயக்குநருக்குச் சிறை

ஹைஃபிளக்ஸ் கிளை நிறுவனம் ஒன்றின் முன்னைய மனிதவள நிர்வாகி, ஆள்சேர்ப்பு முகவை ஒன்றின் இயக்குநர் ஒருவரிடம் மொத்தம் 6,000 வெள்ளி கையூட்டைக் கேட்டுப் பெற்றார். 36 வயது கூ சென் ஏ என்ற அந்தக் குற்றவாளி, தமக்கும் தமது காதலிக்குமான பேங்காக் விடுமுறைக்கான செலவு உள்ளிட்ட பல செலவுகளை ஏற்கும்படி ‘லீட்ஸ் எச்ஆர் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநர் ஏழுமலை செல்வகுமாரிடம் கேட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஹைஃபிளக்ஸ் நிறுவனத்திற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கான முகவைகளுடன் செயல்பட கூவை ஹைட்ரோகெம் சிங்கப்பூர் நிறுவனம் நியமித்ததாக அரசுதரப்பு வழக்குரைஞர் டெரக் ஈ நீதிமன்றத்தில் தெரிவித்தார். குப்பை எரிப்பு ஆலை ஒன்றுக்கான திட்டத்தில் அப்போது ஹைஃபிளக்ஸ் ஈடுபட்டிருந்தது.

கையூட்டு பெற்றது தொடர்பிலான இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு ஒப்புக்கொண்ட மலேசியரான கூவுக்கு நேற்று 10 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 
இந்த தண்டனை விதிக்கப்பட்டபோது மேலும் ஒரு குற்றச்சாட்டு கருத்தில் கொள்ளப்பட்டது. திரு செல்வகுமார் மீதான நீதிமன்ற விசாரணை தொடர்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

‘எட்டு பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் இடம் கிடைக்கும்’

சென்னை: ‘நீட்’ தேர்­வில் மொத்­தம் தேர்ச்சி அடைந்­த­வர்­களில் அரசு மற்­றும் அரசு உத­வி­பெ­றும் பள்­ளி­க­ளைச் சேர்ந்த 8 மாண­வர்­களுக்கு மட்­டுமே எம்­பி­பி­எஸ் அனு­மதி கிடைக்­க­லாம் என்­கிற உண்­மையை ஆங்­கில நாளேடு ஒன்று தெரி­வித்­துள்­ளது.

தமிழ்­நாட்­டில் ‘நீட்’ தேர்ச்சி விகி­தம் உயர்­கிறது என்ற மாயத் தோற்­றத்தை ஏற்­ப­டுத்­திட முயற்சி செய்­த­வர்­க­ளின் கபட எண்­ணத்தை இது தகர்த்­துள்­ளது என்று எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான மு.க. ஸ்டா­லின் விமர்­சித்­துள்­ளார்.

இது தொடர்­பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்ததாக ‘இந்து’ இணையத் தளம் குறிப்பிட்டது.

“மொத்­தம் 720க்கு 113 மதிப்­பெண் எடுத்­தால் தேர்ச்சி என நிர்­ண­யித்­துள்­ளது என்­டிஏ எனும் தேசி­யத் தேர்வு முகமை. ஒரு­வர் ‘நீட்’டில் தேர்ச்சி பெற்­றாலே மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் சேர்ந்துவிட­லாம் என்ற கருத்து மாணவ- மாண­வி­ய­ரி­டை­யே­யும் பெற்­றோ­ரி­டை­யே­யும் பரப்­பப்­பட்­டி­ருக்­கிறது. ஆனால் அது உண்­மை­யல்ல. அதன் மூலம் எம்­பி­பி­எஸ் சேர விண்­ணப்­பம் போட மட்­டுமே அந்த மாண­வர் தகுதி பெறு­கி­றார். அவ்­வ­ள­வு­தான்! அதா­வது ‘நீட்’ தேர்ச்சி என்­பது கணி­தத்­தில் 100க்கு 35 எடுத்து “ஜஸ்ட் பாஸ்” ஆவ­தைப் போல.

“இவ்­வாண்டு ‘நீட்’ ‘கட்-ஆஃப்’ மதிப்­பெண்­கள் உயர்ந்­துள்ள நிலை­யில் பெரும்­பா­லும் கிரா­மப் பகு­தி­களில் உள்ள அரசு மற்­றும் அரசு உத­வி­பெ­றும் பள்­ளி­க­ளைச் சேர்ந்த எட்டு மாண­வர்­க­ளுக்கு மட்­டுமே எம்­பி­பி­எஸ் அனு­மதி கிடைக்­க­லாம் என்­கிறது அந்த ஆங்­கில நாளேடு.

“அர­சுப் பள்ளி மாண­வர்­களில் ‘நீட்’ தேர்­வில் 300 மதிப்­பெண்­ணுக்கு மேல் எடுத்­த­வர்­கள் 89 பேர்­தான்.

“அர­சின் பயிற்சி மையங்­களில் படித்து 500க்கு மேல் மதிப்­பெண் எடுத்த அரசு உத­வி­பெ­றும் பள்­ளி­களில் பயின்ற மாண­வர்­கள் நால்­வர், 495 மற்­றும் 497 மதிப்­பெண் பெற்ற இரண்டு பிற்­ப­டுத்­தப்­பட்ட சமு­தாய மாணாக்­கர்­கள் மற்­றும் இரண்டு மாற்­றுத் திற­னாளி மாண­வர்­கள் என மொத்­தம் 8 பேருக்கு மட்­டுமே மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் சேரும் வாய்ப்பு இருப்­ப­தா­கச் சொல்­கிறது அந்த நாளேடு.

“கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் நடத்திவரும் ‘நீட்’டை ரத்து செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வார்களாக என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

முதல்வர்: அனைவருக்கும் இலவச தடுப்பூசி

புதுக்­கோட்டை: தமி­ழக முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, தமி­ழத்­தில் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி இல­வ­ச­மாக வழங்­கப்­படும் என்று அறி­வித்­துள்­ளார்.

புதுக்­கோட்­டை­யில் வளர்ச்­சித்­திட்­டப்­ப­ணி­கள் குறித்து ஆய்வு செய்த பிறகு அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

“தமி­ழ­கத்­தில் பரி­சோ­த­னை­கள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. தீவிர சிகிச்சை கார­ண­மாக கொரோனா பாதிப்பு குறைந்­துள்­ளது. அதிக காய்ச்­சல் முகாம்­கள் நடத்­தப்­பட்­டன. புதுக்­கோட்­டை­யில் நோய்ப்­ப­ர­வல் குறைந்­தி­ருக்­கிறது. சுமார் 6 ஆயி­ரம் இல­வச வீட்­டு­ம­னைப் பட்­டாக்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன,” என்று முதல்­வர் பழ­னி­சாமி கூறி­னர்.

“புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் ஐடிசி நிறு­வன ஆலை தொடங்­கப்­பட்டு 2,500 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைத்­துள்­ளது. முத­லீட்­டா­ளர் மாநாட்­டில் எந்தத் தொழி­லும் தமி­ழ­கத்­திற்கு வர­வில்லை என ஸ்டா­லின் பொய் சொல்லி வரு­கி­றார். புதுக்­கோட்­டை­யில் 197 கோடி ரூபாய் செல­வில் தொழில் தொடங்க முத­லீடு செய்­துள்­ளன. 211 தொழில் நிறு­வ­னங்­கள் சுமார் 300 கோடி செல­வில் தொழில் தொடங்க ஒப்­பந்­தம் போடப்­பட்­டுள்­ளது.

“புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் மூலம் ஐடிசி தொழிற்­சாலை புதுக்­கோட்­டை­யில் செயல்­பட்டு வரு­கிறது. கொரோனா தடுப்­பூசி கண்­டு­ பிடித்­த­வு­டன் அரசு செல­வில் அனை­வ­ருக்­கும் இல­வ­ச­மாக தடுப்­பூசி போடப்­படும்,” முதல்வர் பழ­னி­சாமி மேலும் தெரி­வித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

உதவி கல்வியாளர்களுக்கு வாழ்க்கைத் தொழில் வாய்ப்புகள்

கற்­ற­லில் சிர­மத்தை எதிர்­நோக்­கும் மாண­வர்­க­ளுக்கு கைகொ­டுக்­கும் உதவி கல்­வி­யா­ளர்­க­ளுக்கு அடுத்த சில ஆண்­டு­களில் வாழ்க்­கைத் தொழில் வளர்ச்­சிக்­கான கூடு­தல் வழி­கள் இருக்­கப்­போ­கின்­றன.

இவர்­க­ளது முக்­கி­யத்­து­வத்தை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் கற்­றல் மற்­றும் நடத்தை தொடர்­பான ஆத­ரவை வழங்­கு­வ­தற்­காக உதவி கல்­வி­யா­ளர்­க­ளுக்­கான உயர் பத­வி­கள் உரு­வாக்­கப்­படும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­தது. இத்­த­கை­யோர், வழக்­க­மான பள்­ளி­களில் குறைந்­த­ளவு சிறப்­புத் தேவை உடைய மாண­வர்­க­ளு­டன் பணி­யாற்­றும் ஆசி­ரி­யர் அல்­லாத பள்ளி ஊழி­யர்­கள். 2022ல் உதவி கல்­வி­யா­ளர் திட்­டம் இரு தடங்­க­ளா­கப் பிரி­யும்­போது உதவி கல்­வி­யா­ளர்­க­ளுக்­குச் சுய மேம்­பாட்டு தடம் உருவாக்கப்­படும். இதன் மூலம், இத்துறை சார்ந்த வெவ்­வேறு பிரி­வி­ன­ரின் தேவை­க­ளை­யும் குறிக்­கோள்­க­ளை­யும் பூர்த்தி செய்­யும் வகை­யில் தனது திட்­டங்­களை ஆரா­யும் என்று கல்­வி­ய­மைச்­சின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

மேலும், கூடு­த­லாக பல உதவி கல்­வி­யா­ளர்­களை ஈர்க்கவும் கல்­வி­ய­மைச்சு விரும்­பு­கிறது. தற்­போது 2,000 உதவி கல்­வி­யா­ளர்­கள் பணி­யாற்­று­கின்­ற­னர். இவர்­களில் 600 பேர் கற்­றல் மற்­றும் நடத்தை ஆத­ர­வில் நிபு­ணத்­து­வம் பெற்­றுள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரி­ன் ஒவ்­வொரு தொடக்­கப்­பள்­ளி­யி­லும் நிபு­ணத்­து­வம் பெற்ற இரு கல்வி உத­வி­யா­ளர்­கள் பணி­யாற்­று­கின்­ற­னர். ஒவ்­வோர் உயர்­நி­லைப் பள்­ளிக்­கும் இத்­த­கைய உத­வி­யா­ளர் ஒரு­வர் இருப்­பார். அடுத்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரண்டாக உயரும்.

இளம் பிள்­ளை­கள் மற்­றும் பதின்ம வய­தி­ன­ருக்­கான தேவை­கள், கவ­னக்­கு­றை­பாடு தொடர்­பான சிறப்­புத் தேவை­கள் போன்ற வெவ்­வேறு நிபு­ணத்­து­வங்­க­ளைக் கொண்ட பிர­தான உதவி கல்­வி­யா­ளர்­கள் பலர் அங்கு பணி­பு­ரி­வது கல்­வி­ய­மைச்­சின் நீண்டகாலத் திட்­ட­மாக உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

‘வேலை வாய்ப்புகளை உருவாக்க உலக நாடுகளுடன் ஒத்துழைப்பு’

நிறு­வ­னங்­கள் வள­ர­வும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­க­வும் உலக நாடு­க­ளு­ட­னான ஒத்­து­ழைப்பை சிங்­கப்­பூர் தொட­ரும் என்று தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் தெரி­வித்து இருக்­கி­றார்.

கொவிட்-19 நெருக்­கடி பொரு­ளி­யல் மந்­த­நி­லையை ஏற்­ப­டுத்தி இருந்­தா­லும், தடை­யற்ற வர்த்­தக உடன்­பா­டு­கள், மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் உடன்­பா­டு­கள் போன்ற வழி­களில் அனைத்­து­லக ஒத்­து­ழைப்பை நாடும் உத்­தியை சிங்­கப்­பூர் விடாப்­பி­டி­யா­கக் கைக்­கொள்ள வேண்­டும் என்று திரு ஈஸ்­வ­ரன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

“நாம் சவால்­மிக்­க­தொரு பொரு­ளி­யல் சூழ­லில் இருக்­கி­றோம் என்­பது தெள்­ளத்­தெ­ளிவு. இத்­த­கைய சூழ­லில் இருந்து நாம் எப்­படி வெளி­யே­றப் போகி­றோம் என்­பது நமது செயல்­பா­டு­க­ளைப் பொறுத்தே அமை­யும்,” என்றார் அமைச்­சர்.

சிங்­கப்­பூர் தொழில் சம்­மே­ள­னத்­தின் தடை­யற்ற வர்த்­தக உடன்­பாட்டு நாளில் பங்­கேற்று, மெய்­நிகர் முறை­யில் உரை­யாற்­றி­ய­போது அவர் இவ்­வாறு சொன்­னார்.

கொரோனா நெருக்­க­டி­யைக் கார­ண­மா­கச் சொல்லி, தடை­யற்ற வர்த்­த­கத்­தில் இருந்­தும் வெளிப்­ப­டைத் தன்­மை­யு­டைய நாடாக இருப்­ப­தில் இருந்­தும் பின்­வாங்­கு­வது குறு­கிய கால நோக்­கில் சரி­யான செய­லா­கத் தோன்­றக்­கூ­டும் என்­றார் அவர்.

“ஆனால், நீண்­ட­கால நோக்­கில் பார்த்­தால், அப்­ப­டிச் செய்­வது நம்­மு­டைய வளர்ச்சி வாய்ப்­பு­க­ளை­யும் நம் மக்­க­ளின் வாழ்க்­கைத்­த­ரத்தை உயர்த்­து­வ­தை­யும் பெரி­தும் பாதித்­து­வி­டும். சிறிய நாடா­னா­லும் பெரிய நாடா­னா­லும் இது­தான் உண்மை,” என்று வர்த்­தக உற­வு­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

புளூம்­பெர்க் தொலைக்­காட்சிக்கு அளித்த இன்­னொரு நேர்­கா­ண­லின்­போது, வர்த்­தக உற­வு­களை மேலும் மேம்­ப­டுத்­து­வது குறித்து சிங்­கப்­பூர் பல நாடு­க­ளு­டன் பேசி வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

“சிங்­கப்­பூ­ரில் தொழில் செய்ய விரும்­பும் பல பங்­கா­ளி­களை நாம் கண்டு வரு­கி­றோம். சிலர் தங்­க­ளது வட்­டா­ரத் தலை­மை­ய­கங்­க­ளை­யும் இங்கு அமைத்­துள்­ள­னர். நம்­மு­டைய தடை­யற்ற வர்த்­தக உடன்­பா­டு­க­ளின் ஒட்­டு­மொத்த விளை­வு­க­ளால் இது சாத்­தி­ய­மா­னது,” என்­றார் அமைச்­சர்.

மின்­னி­லக்­கப் பொரு­ளி­யலை மைய­மா­கக் கொண்ட உடன்­பா­டு­கள் உள்­ளிட்ட இரு­த­ரப்பு உடன்­பா­டு­கள் குறித்த பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தும் அதே­வே­ளை­யில், வட்­டார முழு­மை­யான பொரு­ளி­யல் பங்­கா­ளித்­து­வம், பொருட்­கள் தொடர்­பான ஆசி­யான் ஒப்­பந்­தம் ஆகி­ய­வற்­றி­லும் சிங்­கப்­பூர் கவ­னம் செலுத்­து­கிறது. தற்­போ­துள்ள உலக வர்த்­தக சங்­கி­லி­த் தொடரை வர்த்­த­கங்­கள் கிள்­ளுக்­கீ­ரை­யாக எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டாது. புதிய சந்­தை­க­ளி­லும் பன்­முக சந்­தை­க­ளி­லும் வாய்ப்­பு­க­ளைப் பெற நாம் அனைத்­து­லக மய­மாக வேண்­டும் என்­று திரு எஸ். ஈஸ்வரன் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

பசிப்பிணியை போக்கும் பெரும் முயற்சியில் சிங்கப்பூரர் ரதி

ஐ.நாவின் உலக உண­வுத் திட்­டத்­திற்கு, இவ்­வாண்டு அமை­திக்­கான நோபெல் பரிசு வழங்­கப்­பட்­டுள்­ளது. இத்­திட்­டத்­தின் துணை இயக்­கு­நரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார் சிங்­கப்­பூ­ர­ரான திரு­வாட்டி ரதி பால­கிருஷ்­ணன், 44.

திட்­டம் பல­ரை­யும் சென்­ற­டைந்து பல­ன­ளிக்க வேண்­டும் என்­ப­தற்­காக தம்­மால் முடிந்த அள­வுக்­குப் பாடு­பட்டு வரு­கி­றார்.

பசி­யைப் போக்­கு­வது, சண்டை-சச்­ச­ர­வால் பாதிக்­கப்­பட்ட இடங்­களில் அமைதி நில­வச் சூழலை மேம்­ப­டுத்­து­வது, போர்-சச்­ச­ர­வு­களில் பசியை ஆயு­த­மா­கப் பயன்­படுத்­து­வ­தைத் தவிர்க்க ஓர் உந்து சக்­தி­யாக இருப்­பது ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் உலக உண­வுத் திட்­டம் எடுத்து வரும் முயற்­சி­களை நோபெல் பரி­சுக்­கான வெற்­றி­யாளர்­க­ளைத் தேர்­வு­செய்­யும் பணிக்­குழு சுட்­டி­யி­ருந்­தது.

நான்கு பிள்­ளை­க­ளுக்­குத் தாயான திரு­வாட்டி ரதி, இவ்­வாண்டு ஜன­வரி முதல் அதி­கா­ர­பூர்­வ­மாக வாஷிங்­ட­னில் தம் பணியை மேற்­கொண்­டார்.

இருப்­பி­னும், கொவிட்-19 நெருக்­க­டி­யால் தற்­போது ரோம் நக­ரில் உள்ள உலக உண­வுத் திட்­டத்­தின் தலை­மை­ய­கத்­தில் தம் வேலை­யில் ஈடு­பட்­டுள்­ளார்.

தம் தனிப்­பட்ட வாழ்க்­கை­யை­யும் வேலை வாழ்க்­கை­யை­யும் அர்த்­த­முள்­ள­தாக இருக்­கச் செய்து இரண்­டி­லும் சம­நிலை காண்­பதே தாம் வேண்­டு­வது என்­றார் அவர்.

“என் குடும்­பத்­திற்கு நிலைத்­தன்மை இருக்க வேண்­டும் என்­பதே என் விருப்­பம். நாம் யாருக்­காக சேவை­யாற்­று­கி­றோமோ, அவர்­களும் அதே போல் தங்­களின் குடும்­பங்­க­ளுக்கு இருக்க விரும்­பு­வர்,” என்று குறிப்­பிட்­டார்.

“கேட்­ப­தற்கு எளி­தான ஒன்­றாக இருக்­கும். ஆனால் உல­கமே தவ­றான திசையை நோக்­கிச் செல்­கிறது என்­ப­து­தான் உண்மை,” என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மூத்த வழக்­க­றி­ஞர் மற்­றும் முன்­னாள் வழக்­க­றி­ஞர் சங்­கத்­தின் தலை­வ­ரு­மான ஆர். பால­கி­ருஷ்­ண­னின் மகள் திரு­வாட்டி ரதி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

வெளிநாட்டுப் பயணங்களுக்கு பயன்படுத்த கொவிட்-19 ‘தடுப்பூசி மருந்து கடப்பிதழ்’ திட்டம் சாத்தியமாகலாம்

அனைத்துலகப் பயணங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய கொவிட்-19 ‘தடுப்பூசி மருந்து கடப்பிதழ்’ திட்டம் குறித்து சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் பரிசீலித்து வருகின்றன. இத்திட்டப்படி உருவாக்கப்படும் ஓர் உலகளாவிய மதிப்பீட்டுக் கட்டமைப்பின்கீழ் வெளிநாட்டுப் பயணங்கள் அனுமதிக்கப்படும். இருப்பினும், கொரோனா கிருமி அண்மையில் புதிதாக உருவாகிய ஒன்று என்பதால் இத்திட்டம் சாத்தியமாக இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதாகக் கூறப்பட்டது. தற்போது ‘மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி மருந்துக்கான சான்றளிப்பு ஒன்றே உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்தத் தடுப்பூசி வாழ்நாள் எதிர்ப்புச் சக்தியைத் தருவதாகத் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதார பள்ளி ஏற்பாடு செய்த இணையக் கருத்தரங்கில் இது குறித்துப் பேசப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

Pages