ஆறு நாள் சோதனையில் $236,000 மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, தீவு முழுவதும் மேற்கொண்ட ஆறு நாள் சோதனையில் $236,000 மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கைப்பற்றியது. பிப்ரவரி 27ஆம் தேதியிலிருந்து நேற்று வரை சோதனை தொடர்ந்தது. இந்த நடவடிக்கையில் மொத்தம் 103 பேர் கைதாயினர். கைதானவர்களில் ஒருவரான 43 வயது மலே சியரிடமிருந்து 1.3 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. போதைப் பொருளை வாங்க முயற்சி செய்த சில சிங்கப்பூரர்களும் கைதாயினர்.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

மோசமான குடியிருப்பு; இரு கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம்

தவறான தக­­­வல்­­­கள் கொடுத்­­­தது, வெளி­­­நாட்டு ஊழி­­­யர்­­­களுக்­­­குத் தகுந்த குடி­­­யி­­­ருப்பு வச­­­தி­­­கள் வழங்கா­­­தது ஆகிய குற்­­­றங்களுக்­­­காக இரு கட்­­­டு­­­மான நிறு­­­வ­­­னங் களுக்கு $180,000 அப­­­ரா­­­தம் விதிக்­­­கப்­­­பட்டது. ‘3எஸ் சாலிட் சர்ஃபேஸ் பிரைவேட் லிமிடெட்’, ‘சிங் சாலிட் சர்ஃபேஸ் பிரைவேட் லிமிடெட்’ ஆகிய இரு நிறு­­­வ­­­னங்களும் வெளி­­­நாட்டு ஊழி­­­யர்­­­களின் முகவரி தொடர்­­­பாக, மனி­­­த­­­வள அமைச்­­­சின் வெளி­­­நாட்டு ஊழியர் சேவைப்பிரிவு இணையத் தளத்தில் தவறான தக­­­வல்­­­களை அளித்­­­த­­­தா­­­க­­­வும் வசதி குறைந்த பாது­­­காப்­­­பற்ற இடங்களில் வெளி­­­நாட்டு ஊழி­­­யர்­­­களை தங்க வைத்ததாகவும் குற்றம் சாட்­­­டப்­­­பட்­­­டது.

வெளி­­­நாட்டு மனி­­­த­­­வள சட்­­­டத்­­­தின் கீழ் சுமத்­­­தப்­­­பட்ட 18 குற்­­­றச்­­ ­சாட்­­­டு­­­களை­­­யும் நிறு­­­வ­­­னங்கள் ஒப்புக் ­­­கொண்டன. முப்பது குற்றச்­­ ­சாட்­­­டு­­­கள் கவ­­­னத்­­­தில் கொள்­­­ளப்­­­ பட்­­­டன. அந்த நிறு­வ­னங்கள் வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­து­வ­தற்கும் மனி­த­வள அமைச்சு தடை­வி­தித்த­து. மேலும் தற்­போ­தைய ஊழி­யர்­களின் வேலை அனுமதி அட்டை ­களை­யும் அவை புதுப்­பிக்க முடி யாது. 2007 ஜூலை முதல் 2014 ஜூல் வரை­யி­லான கால­கட்­டத்­தில் ‘வொர்க் பாஸ்’ பிரி­வுக்கு தவறான தக­வல்­களை இந்­நி­று­வ­னங்கள் கொடுத்­துள்­ளன.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

வாழ்நாள் கற்றல் நிகழ்ச்சியில் மாணவர்களுடன் அமைச்சர் ஓங் யி காங்

மார்க்கெட் பிளேசில் நேற்று நடைபெற்ற ‘ஃபியூச்சர் ஆஃப் அஸ்’ கண்காட்சியில் ‘எஸ்ஜி ஃபியூச்சர்’ வாழ்நாள் கற்றல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங். இதில் பங்கேற்ற மாணவர்கள் கற்றலின் ஊக்கம், கற்றல் சவால்கள், இளையர்களிடையே திறன்களை பகிர்ந்து கொள்வதில் உதவுதல் போன்றவை குறித்து விவாதித்தனர்.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

சுருதிக்கு போலிஸ் வலை

கோவை: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் சந்தோஷ்குமார், 32. திருமணத்திற்காக இணையத்தளத்தில் பதிவு செய்தவருடன் கோவை பீளமேட்டைச் சேர்ந்த சுருதி, 20, அறிமுகமானார். சுருதி சந்தோஷ் குமாரை திருமணம் செய்து கொள் வதாகக் கூறி, நெருங்கிப் பழகி, அவரிடம் ரூ.43 லட்சம் பணத்தை அபகரித்து தலைமறைவானார். இதுகுறித்து கோவை குற்றப் பிரிவு போலிசில் சந்தோஷ்குமார் புகார் செய்ய, போலிசார் சுருதி யைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சிதம்பரம் சிவ சக்தி நகரைச் சேர்ந்த அருள் குமரகுரு ராஜா, 28, என்ற பொறி யியலாளரும் கோவை போலிசில் புகார் செய்தார். அதில் இணையத் தளம் மூலம் அறிமுகமான சுருதி தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.50 லட் சத்தை நயவஞ்சகமாகப் பறித்துக் கொண்டார். அவர் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். புகார்களையடுத்து போலிசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், இவர்களுடன் இன்னும் பல வாலிபர்களையும் சுருதி வீழ்த்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

“இணையத்தள திருமணத் தகவல் மையத்தில் தனது புகைப்படத்துடன் பதிவு செய்துள்ள சுருதி பணக்கார பொறியியலாளர்களைக் குறிவைப்பார். அவர்களின் தொலைபேசி எண்களைப் பெற்று உங்களைப் பிடித்திருக்கிறது. முறைப்படி வீட்டுக்கு வந்து பெண் கேளுங்கள் என்று கூறுவார். அதற்கு முன்பு ஷாப்பிங் அழைத்துச்சென்று லட்சக்கணக்கில் பொருட்களை வாங்கி மோசடி செய்வார். திருமணத்திற்கு வற்புறுத்தும்போது தனக்கு மூளையில் கட்டியிருப்பதாகக் கூறி மருத்துவமனை செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டு பணத்தைக் கறந்து ஏமாற்றிவிடுவார்,” என்று போலிசார் விவரம் தெரிவித்துள்ளனர்.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

திமுக வேண்டாம்; தனித்தும் போட்டி இல்லை: வாசன் உறுதி

சென்னை: எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் எண்ணமில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். ஒருபோதும் திமுக கூட்டணி யில் இடம்பெறப் போவதில்லை என்றும் சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசியபோது அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள் ளார். “வரும் சட்டப்பேரவைத் தேர்த லில் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு தமாகாவுக்குப் பலம் இல்லை. மக்கள் விரும்பும் கூட்ட ணியில் தமாகா இடம்பெறும். அது குறித்து விரைவில் அறிவிப்போம். “திமுக-=காங்கிரஸ் கூட்டணி அமைத்து இருப்பதால் அந்த கூட்டணியில் தமாகா சேராது. எங்களைப் பொறுத்தவரை தமிழ் மாநில காங்கிரசின் தனித்தன்மையை இழக்கமாட்டோம்,” என்றார் ஜி.கே.வாசன்.

காங்கிரசில் இருந்து 75 விழுக் காடு தொண்டர்களும் நிர்வாகிகளும் வெளியேறி விட்டதாகக் குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள கூட்டணியில் தமாகா ஒருபோதும் சேராது என்றார். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற எழுவர் விடு தலை குறித்து சட்ட நுணுக்கங் களை ஆராயவேண்டும் என்று வலியுறுத்திய அவர், நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு செயல்படுகிறது என்றார். தேமுதிக இடம்பெறும் கூட்ட ணியில்தான் தமாகாவும் இடம் பெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெறப் போவதில்லை என வாசன் அறி வித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு குறித்தும் தமாகாவினர் அதிகம் விமர்சிப்பது இல்லை என அரசியல் கவனிப் பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

மாநில வரைபடத்தில் மாயமான கரியம்பட்டி கிராமம்

வேலூர்: தமிழக வரைபடத்தில் தங்களது கிராமம் மாயமாகி உள்ளதை அறிந்த பொதுமக்கள் ஆவேசமடைந்து குடும்ப அட்டை, வாக்காளர் அட்டைகளை சாலையில் வீசி போராட்டம் நடத்தினர். வேலூர் மாவட்டம், பள்ளத்தூர் ஊராட்சியில் உள்ள கரியம்பட்டி என்ற கிராமம் தற்போது வரைபடத்தில் இடம்பெற வில்லை. கடந்த சில ஆண்டுகளாக அக்கிராமம் தங்களது ஊராட்சியில் இடம்பெறவேண்டும் என பள்ளத்தூர், நரியனேரி ஊராட்சித் தலைவர்களிடையே மோதல் இருந்து வருகிறது. இந் நிலையில், மாநில வரைபடத்தில் தங்கள் கிராமம் மாயமானதால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

வெயிலின் தாக்கம்: தீப்பற்றி எரியும் கொடைக்கானல் வனப்பகுதி

மதுரை: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கொடைக்கானல் வனப்பகுதியில் அவ்வப்போது காட்டுத் தீ பற்றி எரிவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த மூன்று தினங்களாக அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் 400 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிவதாகவும் இதனால் அரிய வகை மரங்கள், மூலிகை மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டதாகவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். தீயை அணைக்கும் பணியில் ஏராளமானோர் இரவு பகலாக ஈடுபட்டு வரும் நிலையில், காற்று வீசுவதால் தீயை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை எனக் கூறப்படுகிறது. காட்டுத் தீயால் பொதுமக்களுக்கோ சுற்றுலாப் பயணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

ஸ்டாலின் படத்துடன் அகராதி விநியோகம்

திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் 45,000 மாணவர்களுக்கு ஆங்கில அகராதிகளை அரசு, தனியார் பள்ளிகளில் திமுகவினர் விநியோகித்தனர். “ஸ்டாலின் புகழை மாணவர்கள் மூலம் பெற்றோர் வரை கொண்டு செல்லத் திட்டமிட்டோம். இதற்காக கட்சியின் தேர்தல் பணிக் குழு, மதுரை கிழக்குத் தொகுதியிலுள்ள மாணவர்களைக் கணக்கெடுத்து அகராதிகளை வழங்கியது. “அகராதிகளில் உள்ள அட்டைப் படத்தை நீக்கிவிட்டு நாங்கள் தயாரித்த அட்டைப் படத்தை இணைத் தோம். அதில், ‘தமிழக தளபதியின் 64ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசு’ என்ற வாசகத்துடன் ஸ்டாலின் படங்கள், உதயசூரியன் சின்னத்துடன் உள்ளன,” என்றனர் திமுகவினர். படம்: ஊடகம்

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

‘நஜிப்புக்கு எதிரான ஆதாரங்களை கனி பட்டேல் வைத்திருந்தார்’

கோலாலம்பூர்: 1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் நஜிப்புக்கு எதிரான ஆதாரங்களை முன்னாள் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி கனி பட்டேல் வைத்திருந்ததாக அம்னோ துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள முகைதின் யாசின் மீண்டும் கூறுகிறார். திரு கனி பட்டேல் தம்மிடம் காட்டிய ஆதாரம் திரு நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டது பற்றியதாகும் என்றார் அவர். கனி பட்டேல் தம்மிடம் இன்னும் அதிகமான ஆதாரங்களைக் காட்டியதாகக் கூறிய முகைதின் யாசின், அவற்றை வெளியிட முடியாது என்றும் ஏனென்றால் வழக்கு இன்னும் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை என்றும் சொன்னார்.

‚“நஜிப் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும்,” என்று கோலாலம்பூரில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் முகைதின் கூறினார். நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டை முன்னாள் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி கனி பட்டேல் தயாரித்தாரா என்ற கேள்விக்கு அதுபற்றி தனக்குத் தெரியாது என்று அவர் பதில் அளித்தார். திரு நஜிப்பை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்தில் தமக்கு பங்கிருப் பதாகக் கூறப்படுவதை முகைதின் மறுத்தார். சதித்திட்டம் ஏதும் இல்லை என்றும் திரு நஜிப் மீது புகார் கூறுவதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

தாம் துணைப் பிரதமராக இருந்த போது அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி கனி பட்டேலை சந்திப்பது வழக்கமான ஒன்றே என்று அவர் கூறினார். திரு நஜிப் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்துள்ள தற்போதைய அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அபாண்டி, திரு நஜிப் மீது மீண்டும் விசாரணையைத் தொடங்குமாறு சிறப்பு நடவடிக்கைக் குழு கேட்டுக்கொண்டிருப்பதை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முகைதின் கூறியுள்ளார்.

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

உலகின் ஆக இளவயது செல்வந்தர்

உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் நார்வேயைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் அலெக்சாண்ட்ரா ஆண்டர்சனும் இடம் பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் சஞ்சிகை உலகில் உள்ள ஆக செல்வந்தர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களை மார்ச் முதல் தேதி அறிவித்தது. அந்த வரிசையில் குமாரி அலெக்சாண்ட்ரா ஆண்டர்சன் ஆக இள வயது செல்வந்தராவார். இவரது சொத்தின் மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்( S$1.68 பில்லியன்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

செல்வந்தர் பட்டியலில் இவரது சகோதரியான 20 வயது கத்ரினாவும் இடம் பெற்றுள்ளார். இந்த சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் 42.2 விழுக்காடு பங்கு உள்ளது. இதன் அடிப்படையிலேயே இவர்களின் சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. அலெக்சாண்ட்ராவுக்கு 17 வயது ஆகும் வரை அவரது சொத்து மதிப்பு பற்றி அவருக்கு தெரியாமல் இருந்ததாம். பள்ளிப் பருவம் முதல் சேமிக்கும் பழக்கம் தனக்கு உள்ளது என்று அவர் கூறுகிறார்.

அலெக்சாண்ட்ரா குதிரைப் பிரியர் ஆவார்.

Pages