(காணொளி) லிட்டில் இந்தியா உணவகத்திற்கு வெளியே கைகலப்பு

சிராங்கூன் ரோட்டிலுள்ள ‘உஸ்மான்’ஸ் ரெஸ்ட்ரோன்ட்’ (Usman's Restaurant) உணவகத்திற்கு வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை  நடந்த கைகலப்பில் 41 வயது ஆடவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

ஹனி என்ற ஸ்டாம்ப் செய்தித்தள வாசகர், அப்பொழுது பின்னிரவு நேரத்தில் தமது மகனுடன் உஸ்மான் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது உணவகத்திற்கு வெளியில் சிலர் ஆடவர் ஒருவரை அடித்துக்கொண்டிருந்ததைக் கண்டதாகத் தெரிவித்தார்.  சம்பவத்தைக் காணொளி எடுத்த ஹனி, சம்பவ இடத்திற்குப் போலிசார் அழைக்கப்பட்டதாக கூறினார்.

ஹனி பகிர்ந்த காணொளியில் வெள்ளை சட்டை அணிந்திருந்த ஒருவர் மற்றொருவரைப் பலமுறை குத்தியதும் சுற்றியிருந்தவர்கள் அவரைத் தடுக்க முயன்றதும்  காணப்பட்டது.

238 சிராங்கூன் ரோட்டில் ஒருவர் மற்றொருவரை வேண்டுமென்றே காயப்படுத்த முயன்ற சம்பவம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதாக போலிசார் கூறினர். “இந்தச் சம்பவத்தில் 41 வயது ஆடவர் ஒருவர் சுயநினைவுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

கொவிட்-19 தொற்று பரவல் குறித்த கவலை - சிங்கப்பூரர்களுக்கு குறைவு

கொவிட்-19 தொற்று பரவல் குறித்த கவலை சிங்கப்பூரர்களுக்கு மிகக் குறைவு என்றாலும் பொருளியல் மீட்சியில் அவர்களது நம்பிக்கை மிகவும் குறைவு என்று அண்மை ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

தங்களது வேலைகள் பாதுகாப்பாக உள்ளனவா என்பது குறித்த நம்பிக்கை மூன்று மாதங்களுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் குறைவாக இருப்பதாக ஆய்வில் பங்கேற்ற 500 சிங்கப்பூரர்களில் பாதிக்கும் அதிகமானோர் தெரிவித்தனர். இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்த விகிதம் ஆக அதிகம். அடுத்த ஆறு மாதங்களில் பொருளியல் மேம்படும் என்ற நம்பிக்கை சிங்கப்பூரர்களில் 27 விழுக்காட்டினருக்கு மட்டும் இருப்பதாக சந்தை ஆய்வு நிறுவனம் இப்சோஸ் தெரிவித்தது.

இணைய கருத்தாய்வை நடத்திய இப்சோஸ் நிறுவனம், கொவிட்-19 கிருமிப்பரவல் குறித்த கேள்விகளைத் தனது பங்கேற்பாளர்களிடம் கேட்டிருந்தது. மேற்கூறப்பட்ட ஆறு தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் மக்கள் கொவிட்-19 விதிமுறைகளால் எப்படி தங்களது வாழ்க்கை முறையை மாற்றினர், அவர்களது குடும்ப வருமானம் மற்றும் செலவினம் எப்படி மாறின போன்ற விவரங்கள் இந்தக் கருத்தாய்வில் இடம்பெற்றன.

இந்த நாடுகளிலிருந்து வெவ்வேறு இனம் வயது, பாலினம், உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 500 பேர் ஆய்வு செய்யப்பட்டதாக இப்சோஸ் தெரிவித்தது.

கொரோனாகிருமி தொற்றியது குறித்து “மிகவும் கவலைப்படுகிறார்கள்” அல்லது “ஒரளவு கவலைப்படுகிறார்கள்” என்று 73 விழுக்காட்டினர் தெரிவித்தனர். இந்த விழுக்காடு பிலிப்பீன்சுக்கு 95 விழுக்காடாகவும் வியட்நாமுக்கும் மலேசியாவுக்கும் 93 விழுக்காடாகவும் உள்ளன. ஆயினும், வேலை பாதுகாப்பை பொறுத்த அளவில் தங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை என்று 56 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.  இந்த விகிதம் பிற நாடுகளுக்கு சராசரியாக 49 விழுக்காடாக உள்ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

கொவிட்-19: சமூக அளவில் பாதிப்பில்லை

சிங்கப்பூரில் புதிதாக 10 பேருக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .இதனுடன் இந்நாட்டின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை  57,951க்கு உயர்ந்துள்ளது. 

இந்தப் பத்து பேர் அனைவருக்குமே வெளிநாடுகளில் கிருமித்தொற்று ஏற்பட்டது. சிங்கப்பூரை அடைந்த உடனே இவர்களுக்கு வீட்டித் தங்கும் உத்தரவுக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சமூக அளவில் எவரும் பாதிப்படையவில்லை

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

வெங்காய விலை கூடியதால் ‘ஆம்லெட்’ இல்லை என கைவிரிப்பு

மதுரை: மது­ரை­யில் உள்ள சில உண­வ­கங்­களில் ‘ஆம்­லெட்’ போடு­வது நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. வெங்­கா­யம் அதிக விலைக்கு விற்­கப்­ப­டு­வ­தால் சில ஹோட்­டல்­களில் ‘ஆம்­லெட்’ கிடை­யாது என்ற அறிவிப்புகளும் வைக்கப்பட்டு உள்ளன.

பொது­வாக புரோட்டா கடை­களில் ஒரு ‘ஆம்­லெட்’ ரூ.15க்கு விற்­கப்­ப­டு­வது வழக்­கம். தற்போது ரூ.20 வரை ஆம்­லெட் விற்­கப்­ப­டு­கிறது. இத­னால் ‘ஆம்­லெட்’ பிரி­யர்­கள் கவலை அடைந்­துள்­ள­னர்.

மது­ரை­யைச் சேர்ந்த ‘ஆம்­லெட்’ ரசி­கர் ஒரு­வர், “ஆம்­லெட்­டுக்கு வெங்­கா­யம் தேவை. எனவே வெங்­கா­யத்­தின் விலை­யேற்­றத்தைப் பொறுத்து ‘ஆம்­லெட்’ விலையை உயர்த்தலாம். ஆனால் வெங்­கா­யம் இல்­லா­மல் வெறும் முட்­டை­யில் செய்­யப்­படும் ‘ஆஃப்பா­யில்’ விலை­யை­யும் ஏற்­றி­விட்­ட­னர். இது பற்றி கேட்­டால் முட்டை உண­வு­க­ளுக்கு எல்லாம் ஒரே விலை என்று கடைக்­கா­ரர்­கள் கூறு­கின்றனர்,” என்று நொந்­து­கொண்­டார்.

மதுரை புரோட்டா கடை­களில் ஆம்­லெட், வெங்­காய தோசை, வெங்­காய ஊத்­தப்­பம் போன்­ற­வற்றை வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­கம் விரும்பி சாப்­பி­டு­கின்­ற­னர். ஆனால் தற்போதைய சூழலில் வெங்காயம் இல்லாத சாதா தோசை, இட்லி, பொங்கல் போன்ற உணவு வகைகளுக்கு வாடிக்கையாளர்கள் மாறி வருகின்றனர்.

கடந்த சில மாதங்­க­ளாக பெரிய வெங்­கா­யம் கிலோ ரூ.50க்கும் குறை­வாக விற்கப்பட்டது.தெலுங்­கானா, மகாராஷ்டிரா, ஆந்­திரா, கர்­நா­டகா ஆகிய மாநி­லங்­களில் பெரிய வெங்­கா­யம் அதிக அள­வில் விளை­கிறது.

அண்மையில் இந்த மாநி­லங்­களில் கடும் மழை பெய்­தது. இதன் கார­ண­மாக பெரிய வெங்­கா­யத்­தின் விளைச்­சல் கடும் சரிவை சந்­தித்து உள்­ளது. வெங்காய வரத்து குறை­வின் கார­ண­மாக சந்­தை­களில் பெரிய வெங்­கா­யத்­தின் விலை கிடு­கி­டு­வென உயர்ந்­துள்­ளது. நாடு முழு­வ­தும் கடந்த ஒரு வாரத்­தில் பெரிய வெங்­கா­யம் விலை கிலோ­வுக்கு ரூ.50க்கு அதி கரித்து ரூ.100 வரை விறகப் படுகிறது.

இதற்கிடையே வெங்­கா­யத்­தின் விலையைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் ஆப்­கா­னிஸ்­தான், எகிப்து உள்­ளிட்ட நாடு­களில் இருந்து பெரிய வெங்­கா­யத்தை மத்­திய அரசு இறக்­கு­மதி செய்து வரு­கிறது. இறக்­கு­மதி செய்­யப்­பட்ட வெங்­கா­யம் கிலோ ரூ.45க்கு விற்­கப்­படும் என்­றும் அரசு அறி­வித்து உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

‘வேலை வாய்ப்புகளை உருவாக்க உலக நாடுகளுடன் ஒத்துழைப்பு’

நிறு­வ­னங்­கள் வள­ர­வும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­க­வும் உலக நாடு­க­ளு­ட­னான ஒத்­து­ழைப்பை சிங்­கப்­பூர் தொட­ரும் என்று தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் தெரி­வித்து இருக்­கி­றார்.

கொவிட்-19 நெருக்­கடி பொரு­ளி­யல் மந்­த­நி­லையை ஏற்­ப­டுத்தி இருந்­தா­லும், தடை­யற்ற வர்த்­தக உடன்­பா­டு­கள், மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் உடன்­பா­டு­கள் போன்ற வழி­களில் அனைத்­து­லக ஒத்­து­ழைப்பை நாடும் உத்­தியை சிங்­கப்­பூர் விடாப்­பி­டி­யா­கக் கைக்­கொள்ள வேண்­டும் என்று திரு ஈஸ்­வ­ரன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

“நாம் சவால்­மிக்­க­தொரு பொரு­ளி­யல் சூழ­லில் இருக்­கி­றோம் என்­பது தெள்­ளத்­தெ­ளிவு. இத்­த­கைய சூழ­லில் இருந்து நாம் எப்­படி வெளி­யே­றப் போகி­றோம் என்­பது நமது செயல்­பா­டு­க­ளைப் பொறுத்தே அமை­யும்,” என்றார் அமைச்­சர்.

சிங்­கப்­பூர் தொழில் சம்­மே­ள­னத்­தின் தடை­யற்ற வர்த்­தக உடன்­பாட்டு நாளில் பங்­கேற்று, மெய்­நிகர் முறை­யில் உரை­யாற்­றி­ய­போது அவர் இவ்­வாறு சொன்­னார்.

கொரோனா நெருக்­க­டி­யைக் கார­ண­மா­கச் சொல்லி, தடை­யற்ற வர்த்­த­கத்­தில் இருந்­தும் வெளிப்­ப­டைத் தன்­மை­யு­டைய நாடாக இருப்­ப­தில் இருந்­தும் பின்­வாங்­கு­வது குறு­கிய கால நோக்­கில் சரி­யான செய­லா­கத் தோன்­றக்­கூ­டும் என்­றார் அவர்.

“ஆனால், நீண்­ட­கால நோக்­கில் பார்த்­தால், அப்­ப­டிச் செய்­வது நம்­மு­டைய வளர்ச்சி வாய்ப்­பு­க­ளை­யும் நம் மக்­க­ளின் வாழ்க்­கைத்­த­ரத்தை உயர்த்­து­வ­தை­யும் பெரி­தும் பாதித்­து­வி­டும். சிறிய நாடா­னா­லும் பெரிய நாடா­னா­லும் இது­தான் உண்மை,” என்று வர்த்­தக உற­வு­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

புளூம்­பெர்க் தொலைக்­காட்சிக்கு அளித்த இன்­னொரு நேர்­கா­ண­லின்­போது, வர்த்­தக உற­வு­களை மேலும் மேம்­ப­டுத்­து­வது குறித்து சிங்­கப்­பூர் பல நாடு­க­ளு­டன் பேசி வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

“சிங்­கப்­பூ­ரில் தொழில் செய்ய விரும்­பும் பல பங்­கா­ளி­களை நாம் கண்டு வரு­கி­றோம். சிலர் தங்­க­ளது வட்­டா­ரத் தலை­மை­ய­கங்­க­ளை­யும் இங்கு அமைத்­துள்­ள­னர். நம்­மு­டைய தடை­யற்ற வர்த்­தக உடன்­பா­டு­க­ளின் ஒட்­டு­மொத்த விளை­வு­க­ளால் இது சாத்­தி­ய­மா­னது,” என்­றார் அமைச்­சர்.

மின்­னி­லக்­கப் பொரு­ளி­யலை மைய­மா­கக் கொண்ட உடன்­பா­டு­கள் உள்­ளிட்ட இரு­த­ரப்பு உடன்­பா­டு­கள் குறித்த பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தும் அதே­வே­ளை­யில், வட்­டார முழு­மை­யான பொரு­ளி­யல் பங்­கா­ளித்­து­வம், பொருட்­கள் தொடர்­பான ஆசி­யான் ஒப்­பந்­தம் ஆகி­ய­வற்­றி­லும் சிங்­கப்­பூர் கவ­னம் செலுத்­து­கிறது. தற்­போ­துள்ள உலக வர்த்­தக சங்­கி­லி­த் தொடரை வர்த்­த­கங்­கள் கிள்­ளுக்­கீ­ரை­யாக எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டாது. புதிய சந்­தை­க­ளி­லும் பன்­முக சந்­தை­க­ளி­லும் வாய்ப்­பு­க­ளைப் பெற நாம் அனைத்­து­லக மய­மாக வேண்­டும் என்­று திரு எஸ். ஈஸ்வரன் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

முரண்பாடுகள் ஆராயப்படுகின்றன ‘ரெம்டெசிவிர்’ சிகிச்சைமுறை தொடர்கிறது

கொரோனா கிரு­மித்­தொற்று சிகிச்­சைக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்டு வரும் ‘ரெம்­டெ­சி­விர்’ மருந்து தொடர்­பி­லான அண்­மைய முரண்­பட்ட கண்­டு­பி­டிப்­பு­களை தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யம் (என்­சி­ஐடி) தீவி­ர­மாக ஆராய்ந்து வந்­தா­லும் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­குத் தொடர்ந்து அம்­ம­ருந்து ஒரு சிகிச்சை முறை­யாக இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உலக சுகா­தார நிறு­வ­னம் சென்ற வாரம் அதன் ‘சோலி­டே­ரிட்டி’ சோத­னை­யின் இடைக்­கால முடி­வு­களை வெளி­யிட்­டி­ருந்­தது. கொவிட்-19 நோயா­ளி­கள் மருத்­து­வ­ம­னை­யில் எவ்­வ­ளவு காலம் இருப்­பார்­கள், அவர்­கள் பிழைப்­பது எந்த அளவு சாத்­தியம் ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் ‘ரெம்­டெ­சி­விர்’ மருந்து எவ்­வி­தத் தாக்­கத்­தை­யும் ஏற்­ப­டுத்­த­வில்லை என்று அதில் கூறப்­பட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்து அமெ­ரிக்க தேசிய சுகா­தா­ரக் கழ­கங்­க­ளின் கொவிட்-19 சிகிச்­சை­முறை சோதனை முடி­வு­க­ளை­யும் என்­சி­ஐ­டி­யின் கொவிட்-19 சிகிச்­சை­முறை பணிக்­குழு, ஆராய்ந்து வரு­கிறது. மருத்­து­வச் சோத­னை­கள் தவிர வேறு கார­ணங்­க­ளுக்­கா­க­வும் ‘ரெம்­டெ­சி­விர்’ மருந்­தைப் பயன்­ப­டுத்த, சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் ஜூன் மாதத்­தில் நிபந்­த­னை­யு­டன் ஒப்­பு­தல் வழங்கி­ இ­ருந்­தது.

இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட தற்­போதைய சிகிச்சை முறை­யில் மாற்­றம் இல்லை. குறைந்த பிரா­ண­வாயு செறிவு நிலை, கூடு­தல் பிரா­ண­வாயு தேவைப்­படும் நிலை போன்ற நோயா­ளி­க­ளுக்­குத் தொற்­று­நோய் நிபு­ணர்­கள் ‘ரெம்­டெ­சி­விர்’ மருந்­தைச் செலுத்த அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் கண்­டு­பி­டிப்­பு­கள் சீராக இல்லை என்­றும் வேறு ஆய்­வு­கள் ‘ரெம்­டெ­சி­விர்’ மருந்­தின் பலன்­களை உறு­தி­செய்­துள்­ளன என்­றும் மருந்தை உரு­வாக்­கிய ஜிலிட் நிறு­வ­னம் கூறி­யுள்­ளது. இருப்­பி­னும், இது நம்­ப­க­மான முடிவே என்­றார் உலக சுகா­தார நிறு­வ­னத்­தால் நிய­மிக்­கப்­பட்ட புள்­ளி­வி­வர நிபு­ணர் டாக்­டர் ரிச்சர்ட் பெட்டோ.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

ஸாக்கி: வேலையிட பாதுகாப்பை புறக்கணிக்க வேண்டாம்

கொவிட்-19 தொடர்­பான பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களைக் கடைப்­பி­டித்து, நிறு­வ­னங்­கள் மீண்­டும் தங்­கள் பணி­க­ளைத் தொடங்­கி­யுள்­ளன. இருப்­பி­னும், அடிப்­படை வேலை­யி­டப் பாது­காப்பு அம்­சங்­க­ளை­யும் நினை­வில் கொள்­வது அவ­சி­யம் என்­றார் மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது.

இவ்­வாண்டு ஜூன் 2 முதல் இது­வரை பத்து வேலை­யிட உயி­ரி­ழப்­பு­கள் பதி­வா­கி­யுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார். அவற்­றில் செப்­டம்­பர் மாதத்­துக்­குப் பிறகு பதி­வா­னவை நான்கு. நான்­குமே அதிக அபா­ய­க­ர­மான பணி­கள் தொடர்­பா­னவை என்­றார்.

வேலை­யிட உயி­ரி­ழப்­பு­க­ளின் எண்­ணிக்கை வழக்­கத்தை விட மிக அதி­க­மாக இல்­லா­விட்­டா­லும், வெகு­நாட்­க­ளாக பணி­களில் ஈடு­படாத ஊழி­யர்­க­ளுக்­குப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் அவ்­வ­ள­வாக பரிச்­ச­ய­மாகி இருக்­காது என்ற அக்­கறை நில­வு­வ­தாக திரு ஸாக்கி குறிப்­பிட்­டார். இழந்த வேலை நேரத்­திற்கு ஈடு­கட்ட வேண்­டும் என்று நிறு­வனங்­கள் அவ­ச­ரப்­ப­ட­லாம். ஆனால் பாது­காப்பு தொடர்­பான கொள்­கை­களை முத­லா­ளி­கள் மீண்­டும் பார்­வை­யிட வேண்­டும் என்­றும் ஊழி­யர்­கள் அவற்­றைப் பழ­கிக்­கொள்­ள­வும் தேவைப்­பட்­டால் அவர்­க­ளுக்கு மறு­ப­யிற்சி அளிக்­க­வும் வேண்­டும் என்று அறி­வு­றுத்­தி­னார் அமைச்­சர்.

‘சைனிஸ் கார்­டன்’ பகு­தி­யில் அமைந்­துள்ள ஒரு கட்­டு­மா­னத் தளத்­திற்­குச் சென்­றி­ருந்த திரு ஸாக்கி இவ்­வாறு பேசி­யி­ருந்­தார். அங்கு நடந்­து­கொண்­டி­ருந்த மேம்­பாட்­டுத் திட்­டத்­திற்­கான பணி­கள், கிருமி முறி­ய­டிப்­புக் கால­கட்­டத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டன.

ஊழி­யர்­க­ளின் பாது­காப்பை உறுதி­செய்­வ­தற்­காக திட்­டத்­துக்­குப் பொறுப்­பான நிறு­வ­ன­மான ‘குவான் எய்க் ஹோங் கன்ஸ்ட்­ரக்­‌ஷன்’, பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கண்­கா­ணிக்­கும் கரு­வி­யைப் பயன்­படுத்­தும் திட்­டத்தை அமல்­ப­டுத்­தி­யுள்­ளது. கரு­வி­களை வைத்­தி­ருக்­கும் ஊழி­யர்­கள், பாது­காப்பு இடை­வெளியை மீறி­னால் அவர்­க­ளது கருவி ஒலி எழுப்­பும். கரு­வி­யோடு இணைக்­கப்­பட்ட செயலி வழி மேற்­பார்­வை­யா­ள­ருக்­கும் தக­வல் தெரி­விக்­கப்­படும். இத்­து­டன் நிறு­வ­னத்­தின் 220 ஊழி­யர்­களும் வெவ்­வேறு வேலை­யி­டப் பகு­தி­களில் பணி­யாற்­று­வர். ஒரு பகு­தி­யில் பணி­யாற்­று­ப­வர் வேறு பகு­தி­யில் உள்­ள­வ­ரு­டன் பழக அனு­மதி இல்லை.

திட்­ட­மிட்ட காலத்­திற்­குள் வேலையை முடிப்­ப­தில் ஓர் அவ­ச­ர­நிலை இருந்­தா­லும், பாது­காப்­புக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வ­தாக நிறு­வ­னத்­தின் பொது மேலா­ளர் ஃபேபியன் லொய் தெரி­வித்­தார்.

கட்­டு­மா­னத் தளத்­தில் மேற்­பார்­வை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் கண்­கா­ணிப்பு தீவி­ர­ம­டை­யும் என்று அவர் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

Pages