55 செய்தியாளர்கள் மீது தாக்குதல்

புதுடெல்லி: கொவிட்-19 தொற்று குறித்த செய்திச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட செய்தியாளர்கள் 55 பேர் தாக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, துன்புறுத்தல் இன்றியும் பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சமின்றியும் செய்தியாளர்கள் பணியாற்றுவதை உறுதிசெய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இரு அனைத்துலகப் பத்திரிகைச் சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளன.

செய்தியாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து தேச துரோக வழக்குகளையும் உடனே கைவிடும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறும் ஆஸ்திரியா, பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த அச்சங்கங்கள் பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

‘தன்னையே பாதுகாக்க தெரியாத டிரம்ப், மக்களைக் காப்பது சந்தேகம்’

ஃபிலடெல்ஃபியா: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா (படம்), எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனை ஆதரித்து நேற்று பிரசார மேடையில் ஏறினார்.

அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்கள்கூட இல்லாத நிலையில், அதிக போட்டி எதிர்பார்க்கப்படும் பென்சில்வேனியா மாநிலத்தில் தமது முன்னாள் துணை அதிபர் பைடனுக்காக வாக்குகளைச் சேகரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். 
பென்சில்வேனியாவின் ஃபிலடெல்ஃபியா நகரில் பிரசாரம் செய்த திரு ஒபாமா, அதிபர் டோனல்ட் டிரம்ப்பை கடுமையாக சாடினார்.

“தம்மைத் தவிர வேறு எவருக்கும் உதவி செய்வதிலோ பணியை மேற்கொள்வதிலோ டிரம்ப் ஆர்வம் காட்டவில்லை,” என்று அவர் குறைகூறினார்.

2009 முதல் 2016ஆம் ஆண்டு வரை இரு தவணைக் காலம் அதிபராக இருந்த திரு ஒபாமா, ஜனநாயகக் கட்சியில் தொடர்ந்து பிரபலமாக இருக்கிறார். கொரோனா கிருமித்தொற்றுச் சூழலை திரு டிரம்ப் கையாளும் விதத்தைச் சாடிய திரு ஒபாமா, அதிபரே கிருமித்தொற்றுக்கு ஆளானதைச் சுட்டினார்.

“தன்னையே பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத டிரம்ப் எப்படி அமெரிக்க மக்களைக் காப்பாற்றுவார்? 

“இது ஒன்றும் ரியாலிட்டி ஷோ அல்ல. இது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை. திறமையில்லாத அதிபரின் ஆட்சியால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் விமர்சித்தார்.

நாடு முழுவதும் நியூயார்க் டைம்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், ஒன்பது புள்ளி வித்தியாசத்தில் திரு பைடன் தற்போது முன்னணி வகிப்பதாகத் தெரியவந்து உள்ளது.
பென்சில்வேனியா மாநிலத்தில் மட்டும் நான்கு புள்ளிக்கும் சற்று குறைவான வித்தியாசத்தில் அவர் முன்னிலை வகிக்கிறார்.

ஆனால் கருத்துக்கணிப்புகளை நம்பி வாக்காளர்கள் மெத்தனமாக இருந்துவிட வேண்டாம் என்று எச்சரித்த திரு ஒபாமா, 2016ல் நடைபெற்ற தேர்தலில் திரு டிரம்ப்பின் எதிர்பாரா வெற்றிக்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பிழை ஏற்பட்டிருந்ததை நினைவுபடுத்தினார்.

“கருத்துக்கணிப்புகளைப் பற்றி நான் பொருட்படுத்துவதே கிடையாது. கடந்த தேர்தலிலும் ஏராளமான கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. அதன்படி ஹில்லரி கிளிண்டன்தான் வெற்றி பெறுவார் என்று நினைத்த அமெரிக்கர்கள் பலரும் வாக்களிக்காமல் மெத்தனமாக இருந்துவிட்டனர். ஆனால், 2016 தேர்தலில் நிலவரம் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. ஆனால் இம்முறை அதேபோன்ற தவறு ஏற்பட்டுவிடக்கூடாது,” என்று திரு ஒபாமா எச்சரித்தார்.

திறந்தவெளி கார் நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களில் இருந்தவாறு திரு பைடனின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் திரு ஒபாமா பிரசாரம் செய்வதைக் கண்டனர். கார் நிறுத்துமிடம் முழுவதும் நிரம்பும் அளவிற்கு கிட்டத்தட்ட 280 வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

திரு டிரம்ப், திரு பைடன் பங்கேற்கும் இரண்டாவது மற்றும் இறுதி நேரடி விவாதம், சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

முஸ்தஃபா சென்டர் முதலாளியின் உறவினர் 3ல் 1 பங்கு கேட்கிறார்

சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான முஸ்தஃபா சென்டர் முதலாளி முஷ்டாக் அகமதின் உறவினரான ஃபயாஸ் அகம்மது என்பவரும் அவருடைய சகோதரரான அன்சார் என்பவரும், திரு முஷ்டாக்குக்கு சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் இதர பல நாடுகளிலும் உள்ள முஸ்தஃபா தொழில் சாம்ராஜ்ஜியத்தில் மூன்றில் ஒரு பங்கு தங்களுக்கு வேண்டும் என்று கோருகிறார்கள்.

இந்த வழக்கு, திரு முஷ்டாக்குக்கும் அவருடைய குடும்பத்துக்கும் எதிராக திரு முஷ்டாக்கின் ஒன்றுவிட்ட உடன்பிறப்புகளும் அவர்களின் தாயாரும் தொடுத்துள்ள ஒரு வழக்குடன் விசாரிக்கப்பட்டு வருகிறது. 
வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஃபயாஸ் அகம்மது சாட்சியம் அளித்தார். 
தன்னுடைய தந்தையான சம்சுதீன் முக்தார் அகம்மது, 2004ஆம் ஆண்டு ஒரு நாள், நிறுவனத்தில் தனக்கு 15.12 பாத்தியதை இருக்கிறது என்று தெரிவிக்கும் ஓர் உயிலை எழுதிவிட்டு, குழந்தைபோல் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்ததாக அவர் சாட்சியம் அளித்தார். 

மகனைப் போல் கருதி தான் வளர்த்த திரு முஷ்டாக் தன்னை ஏமாற்றிவிட்டதாக தன் தந்தை வேதனைப்பட்ட தாகவும் ஃபயாஸ் அகம்மது கூறினார். ஆனால் திரு முஷ்டாக்கின் வழக்கறிஞர் ஆல்வின் இயோ இதை ஏற்கவில்லை. ஃபயாஸ் அகம்மதின் தந்தை எழுதிவைத்த உயில் இந்த வழக்கில் ஃபயாஸ் அகம்மதுக்குச் சாதகமாக இருக்காது என்பதால் ஃபயாஸ் இட்டுக்கட்டி அப்படிச் சொல்கிறார் என்று வழக்கறிஞர் வாதிட்டார். விசாரணை தொடர்கிறது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

பாஸ்போர்ட் குற்றம்: முன்னாள் தடுப்புக்காவல் கைதிக்கு சிறை

பயங்கரவாதம் தொடர்பான செயல்கள் காரணமாக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் சிங்கப்பூரர் ஒருவருக்கு பாஸ்போர்ட் குற்றத்துக்காக ஆறு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

சுல்ஃபிகார் முகம்மது ஷரிஃப், 49, என்ற அந்த ஆடவர், சிங்கப்பூர் குடியுரிமை இருந்தாலும் ஆஸ்திரேலிய குடியுரிமையையும் பெற்று இருந்தார்.  ஆனால் 2013ல் சிங்கப்பூர் பாஸ்போர்ட் பெறுவதற்கு மனுச் செய்தபோது, வேறு எந்த நாட்டு குடியுரிமையும் தனக்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

சுல்ஃபிகார் முகம்மது ஷரிஃப், பயங்கரவாதத்தையும் ஐஸ்ஐஎஸ் அமைப்பையும் மும்முரமாக ஆதரித்ததற்காக கைதானவர். சிங்கப்பூரில் இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதி இல்லை. ஆகையால் அவர் சிங்கப்பூர் குடியுரிமையைத் துறந்துவிட்டார். 

பாஸ்போர்ட் சட்டத்தை மீறிய தாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டின் பேரில் சுல்ஃபிகார் குற்றத்தை இன்று ஒப்புக்கொண்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

இளைஞரை கத்தியால் தாக்கியதாக ஒப்புக்கொண்டார்

சைனா டவுனில் மே மாதம் 10ஆம் தேதி நடந்த கைகலப்பில் குண்டர்கும்பல் உறுப்பினர் ஒருவர் கத்தியால் இளைஞர் ஒருவரைத் தாக்கினார். அந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்திலும் வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. 

புளோக் 101, அப்பர் கிராஸ் ஸ்திரீட், பீப்பிள்ஸ் பார்க் சென்டர் முகவரி கட்டடத்தில் 16வது மாடியில் பொது நடைபாதையில் இரு குழுவினர் மோதிக்கொண்டனர். 
முகம்மது ஷரைல் ஹைக்கல் அப்துல்லா, 19, என்பவர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரைத் தாக்கியவர்களில் ஒருவரான நூர் நஜாத் ஆல்வி என்பவர் இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

கொவிட்-19 நிபந்தனைகளை மீறியதாகவும் அவர் இன்று ஒப்புக்கொண்டார். ஏப்ரல் 7 முதல் ஜூன் 1 வரை கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது மக்கள் சரியான காரணமின்றி வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நூர் ஒரு சிங்கப்பூரர். அவருக்கு இன்று 21 வயதாகிறது.

சீர்திருத்த பயிற்சி மற்றும் நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் நூர் நஜாத்தை வைக்க அவர் பொருத்தமானவர்தானா என்பதை மதிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு நவம்பர் 12ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும். 

ஆயுதத்துடன் கலகத்தில் ஈடுபடுவதாகக் கூறும் ஒவ்வொரு குற்றச்சாட்டின் பேரிலும் குற்றவாளிக்கு 10 ஆண்டு வரை சிறையும் பிரம்படியும் விதிக்க முடியும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

மானபங்கம் செய்த முன்னாள் காற்பந்தாட்டக்காரர்

டின்டர் செயலி வழியாக மற்றொரு பெண்ணைச் சந்தித்த திருமணமான காற்பந்தாட்டக்காரர், அந்தப் பெண்ணின் தோழியை மானபங்கம் செய்தார். இவர் குற்றவாளி என வட்டார நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

2018ல் 38 வயது முகம்மது இம்ரான் சாகிப்பும் அந்த இரண்டு பேரும் கேளிக்கைக் கூடத்தில் சந்தித்து பொழுதைக் கழித்தனர். பின்னர் அந்த டிஆடவர் அந்த இரண்டு பெண்களைத் தமது காரில் அழைத்துச் சென்று இருவரையும் வீட்டில் இறக்கிவிட இருந்தார். மதுமயக்கத்தால் முதல் பெண்ணுக்கு வாந்தி ஏற்பட்ட நேரத்தின்போது இம்ரான் இரண்டாவது பெண்ணைத் தகாத முறையில்  தீண்டினார். 

டெம்பனிஸ் ரோவர், ஹோம் யுனைட்டட் ஆகிய காற்பந்து குழுக்களில் விளையாடிய  இம்ரான் மீது மானபங்கம் தொடர்பிலான இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 5,000 வெள்ளி பிணையில் வெளிவந்துள்ள அந்த ஆடவருக்கு அடுத்த மாதம் 13ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

ஆய்வு: வேலையில் இருக்க மறுதிறன் பயிற்சி, திறன் மேம்பாடு அவசியம் என பத்தில் ஒன்பது ஊழியர்கள் கருத்து

அதிகரித்து வரும் நிச்சயமற்ற, இறுக்கமான வேலை சந்தையில் வேலை இழப்பது அல்லது வேலைக்குப் பொருத்தமற்றவராக இருப்பது குறித்து சிங்கப்பூர் ஊழியர்கள் குறிப்பாக வயதானவர்கள் கவலைப்படுகிறார்கள். அண்மைய யுஓபி ஆய்வில், இங்கு பணிபுரியும் 10 பத்தில் ஒன்பது பேர், தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் போட்டித்தன்மையுடன் இருக்க அவர்கள் மறுதிறன்பயிற்சி பெற வேண்டும் அல்லது திறன்களை மேம்படுத்த வேண்டும் என்று நம்புவது தெரியவந்துள்ளது.

பொருளியல் மந்தநிலையில், புதிய பதவிகளைப் பெறுவதும் கடினமாக இருக்கும் என்றும் ஊழியர்கள் கருதுகிறார்கள். ஆய்வில் பங்கேற்ற சிங்கப்பூரர்களில் 88 விழுக்காட்டினர் நிறுவனங்கள், பல வேலைகளைச் செய்யக்கூடிய ஊழியர்களையே தேர்வுசெய்யும் என்று கருதுகின்றனர். ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் (87%), பணியாளர்களை பணியமர்த்துவதற்குப் பதிலாக மின்னிலக்க மயமாக்குவதையே முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள், அல்லது செலவுகளைக் குறைப்பதற்கான வழிமுறையாக வேலை நீக்கத்தை (88%) நாடுவதாகக் கூறினர். 

வேலை பாதுகாப்பு பற்றிய கவலைகள் முதிய சிங்கப்பூரர்களிடம் மிகவும் அதிகமாக உள்ளது. 56 முதல் 65 வயதிற்குட்பட்ட அனைவருமே (98%) வேலைக்கு  ஏற்றவர்களாக இருக்க மறுதிறன், மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தினர். 24 முதல் 55 வயதுடையவர்களில், 10 பேரில் ஒன்பது பேர் இதில் ஈடுபாடு  காட்டினர். இந்த ஆய்வை ஐந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 18 முதல் 65 வயது வரையுள்ள 3,510 பேரிடம் சென்ற ஜூலை மாதம் யுஓபி ஆசியான் நுகர்வோர்  வங்கியும் பிளாக்பாக்சும் நடத்தியது. இந்த ஆய்வில் சிங்கப்பூரைச் சேர்ந்த 1,030 பேர் பங்கேற்றனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

உதவி கல்வியாளர்களுக்குக் கூடுதலான வாழ்க்கைத் தொழில் வாய்ப்புகள்

கற்றலில் சிரமம் எதிர்நோக்கும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் உதவி கல்வியாளர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளில் வாழ்க்கைத் தொழில் வளர்ச்சிக்கான கூடுதல் வழிகள் இருக்கப்போகின்றன. இவர்களது முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் கற்றல் மற்றும் நடத்தை தொடர்பான ஆதரவை வழங்குவதற்காக உதவி கல்வியாளர்களுக்கான உயர் பதவிகள் உருவாக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.  இத்தகையோர், வழக்கமான பள்ளிகளில் குறைந்தளவு சிறப்புத் தேவை உடைய மாணவர்களுடன் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்கள்.

2020ல் உதவி கல்வியாளர் திட்டம் இரண்டு தடங்களாகப் பிரியும்போது உதவி கல்வியாளர்களுக்குச் சொந்தமான மேம்பாட்டு தடம் வழங்கப்படும் என்று கல்வியமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம்,  உதவி கல்வியாளர்களுக்கிடையே உள்ள வெவ்வேறு பிரிவினரின் தேவைகளையும் குறிக்கோள்களையும் பூர்த்தி செய்யும் வகையில் தனது திட்டங்களை ஆராயும் என்று கல்வியமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். 

மேலும், கூடுதலாக பல உதவி கல்வியாளர்களை ஈர்த்து அவர்களை அந்த வேலையில் தொடர்ந்து இருக்கச் செய்ய கல்வியமைச்சு விரும்புகிறது.  தற்போது 2,000 உதவி கல்வியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 600 பேர் கற்றல் மற்றும் நடத்தை ஆதரவில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். சிங்கப்பூரிலுள்ள ஒவ்வொரு தொடக்கப்பள்ளியிலும் இந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள இரண்டு கல்வி உதவியாளர்கள் பணியாற்றுகின்றனர். ஒவ்வோர் உயர்நிலைப் பள்ளிக்கும் இத்தகைய உதவியாளர் ஒருவர் இருப்பார். 

அடுத்த சில ஆண்டுகளில் கூடுதலான உயர் நிலை வேலைகளை கல்வியமைச்சு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் உருவாக்கத் தொடங்கும். கற்றல் மற்றும் நடத்தைக்கான இரண்டு உதவி கல்வியாளர்கள் அங்கு பணிபுரிவர். இளம் பிள்ளைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான தேவைகள், கவனக்குறைபாடு தொடர்பான சிறப்புத் தேவைகள் போன்ற  வெவ்வேறு நிபுணத்துவங்களைக் கொண்ட பிரதான உதவி கல்வியாளர்கள் பலர்  அங்கு பணிபுரிவது கல்வியமைச்சின் நீண்ட காலத் திட்டமாக உள்ளது.  மாணவர்களின் தேவைகளுக்கு ஈடுகட்டும் விதமாக பள்ளிகளில் பணிபுரியும் இத்தகைய உதவி கல்வியாளர்களின் எண்ணிக்கை 40 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

மனோதிடத்தை மேம்படுத்த புதிய இணையச் சேவை

கொவிட்-19 தொற்றுநோய் பரவல் சூழலில் மன அழுத்தத்திற்கு உட்படுவோர் ‘உணர்வுபூர்வமான விவேக’ Wysa எனும் ‘சாட்போட்’ இணைய வசதியை பயன்படுத்தி தங்களுடைய மனவலிமை மேம்படுத்திக்கொள்வதுடன் சுய பராமரிப்பையும் கற்றுக்கொள்ளலாம். நேற்று அறிமுகம் கண்ட mindline.sg எனும் தளத்தின் புதிய பதிப்பில் கிடைக்கும் இச்சேவையைப் பயன்படுத்துவோர்,  சுயவிவரங்களைத் தெரிவிக்கத் தேவையில்லை.

சுகாதாரப் பராமரிப்பின் மாற்றத்துக்கான சுகாதார அமைச்சு அலுவலகம் (MOHT), சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, தேசிய சமூக சேவை மன்றம், மனநலக் கழகம் ஆகியவை இணைந்து இதனை அறிமுகப்படுத்தியுள்ளன. கட்டண சேவையான வைசா சாட்போட் சேவையை, மைன்ட்லைன் தளத்தில் ஓராண்டு காலத்துக்கு இலவசமாக இந்த முகவைகள் பெற்றுள்ளன.

மனஅழுத்தத்தை நிர்வகிப்பது தொடர்பான தகவல்கள், அவசரசேவை எண்கள் போன்ற வளங்களையும் இந்த இணையத் தளத்தில் பெறலாம்.பயனாளர்களின் சுகாதாரத் தேவைகளுக்கு உதவ நல்வாழ்வு சுய மதிப்பீட்டு கருவியும் இதில் இடம்பெற்று உள்ளது. வைசா தளம் வழியாக தியானம், சுவாசப் பயிற்சி, யோகா, தன்முனைப்பு உரையாடல்கள், உடற்பயிற்சிகள் ஆகியவற்றையும் பெறலாம். பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்க தேவையில்லை.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

சொத்து முகவர்களின் தரநிலையை ஒழுங்குபடுத்த புதிய வழிகாட்டி

சிங்கப்பூர் சொத்துச் சந்தைத் துறையில் சொத்து முகவர்களின் தரநிலையை இணையத்தில் ஒழுங்குபடுத்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளை சொத்து முகவர்கள் மன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் சொத்து முகவைகளே தரநிலையை நிர்ணயிக்கின்றன. 

புதிய வழிகாட்டி நெறிமுறைப்படி அவர்களின் தரநிலை சில முக்கிய அம்சங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட உள்ளது. புதிய நெறிமுறைப்படி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேலாக சொத்து முகவர் சேவை வழங்கினாரா என்பது கருத்தில் கொள்ளப்படும். அத்துடன், சொத்து முகவர்கள் வெளிப்படைத்தன்மையுடனும் சொத்து தொடர்பான அனைத்து விவரங்களையும் உண்மையுடன் விளக்கி, வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக செயல்பட்டுள்ளனரா என்றும் மதிப்பிடப்படும்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

Pages