வேட்பாளர்களுக்கு அதிமுக ஆசை வலை

சென்னை: தமிழ்நாட்டில் 18 தொகுதிகளுக்கு நடக்க இருக் கும் இடைத்தேர்தலில் குறைந்தபட் சம் எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் அதிமுக, அதற்காக புதிய தந்திரங்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அதிமுக கட்சி, பாமக, தேமுதிக போன்ற குறிப்பிடத்தக்க கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து அந்த 18 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்றாலும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி தன்னுடைய கட்சியைச் சேர்ந்த பேராளர்கள்கூட சரிவர தேர்தல் வேலைகளைக் கவனிக்காத ஒரு சூழலை அதிமுக எதிர்நோக்கு வதாகத் தெரிய வந்துள்ளது.
தேமுதிக, பாமக முதலான கட்சிகளுடன் கூட்டணி சேர்ந் திருந்தாலும் அந்தக் கட்சிகள் மூலம் கிடைக்கும் வாக்குகள், அமமுகவின் டிடிவி தினகரன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்பு களை ஈடுசெய்யும் அளவிற்கு இருக்காது என்று அதிமுக தலைமையிடம் வேவுத்துறை விளக்கிக் கூறி இருக்கிறது.
அதோடு மட்டுமின்றி, அதிமுக கட்சியில் முக்கிய பதவிகளில் இருப்பவர்களில் சிலர், தேர்தல் வேலைகளில் தயக்கம் காட்டு வதாகவும் ஊக்கமின்றி இருப்ப தாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய ஒரு நிலையில் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி களில் அதிமுக சார்பில் நிறுத்தப் பட்டுள்ள வேட்பாளர்களை எல் லாம் அழைத்து, ஆக அதிக வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெறுபவர்களுக்கு அமைச்சர் பதவி, கட்சியில் மாவட்டச் செய லாளர் பதவிகள் காத்திருக்கின் றன என்று அவர்களிடம் அதிமுக தலைமை தெரிவித்து இருப்பதாக வும் தகவல்கள் கசிந்துள்ளன.
சரியாக செயல்படாதவர்கள், உள்ளடி வேலை செய்பவர்கள், காட்டிக் கொடுப்பவர்கள் அனை வருக்கும் தேர்தல் முடிந்ததும் கட்சியில் அறவே பொறுப்பு இல் லாத ஒரு சூழ்நிலை உருவாகப் போகிறது என்றும் தலைமைப் பீடம் எச்சரித்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!