சுடச் சுடச் செய்திகள்

‘ஆரத்தி பணமே வரவில்லை, ரூ.6,000 வரவாபோகிறது?’ 

சிவகங்கை: சிவகங்கைத் தொகு திக்கு உட்பட்ட மானாமதுரையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்குப் பேசியபடி              ரூ.500 கொடுக்காமல் வெறும் ரூ.32ஐ மட்டும் கொடுத்ததால் பிரச்சினை மூண்டது. 
அவர்களிடம் வாக்குவேட்டை யாடிய கார்த்தி, காங்கிரஸ் ஆட் சிக்கு வந்தால் மாதம் ரூ.6,000 வீடு தேடிவரும் என்றார். அதைக் கேட்ட பெண்கள், “ஆரத்தி பணமே வரவில்லை, ரூ.6,000 வரவாப்போகிறது?” என்று முணு முணுத்தபடி சென்றார்கள். 
இந்தச் சம்பவம் காணொளி யாக வெளியாகி இருப்பதை அடுத்து தேர்தல் ஆணையம் காங்கிரஸ் வேட்பாளர் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே, தேனி தொகுதி யில் போட்டியிடும் துணை முதல் வரின் மகனான ரவீந்திரநாத், தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு ரூ.500 கொடுத்து வருவதாக வும் இதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி காட்டமாக கூறியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon