234 மையங்களில் அஞ்சல் வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை: நாடாளுமன்றத் தேர் தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு நேற்று தமிழ்நாட்டில் 234 மையங் களில் தொடங்கியது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழி யர்களும் ஆசிரியர்களும் வாக் களித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இம்மாதம் 18ஆம் தேதி 39 நாடாளுமன்றத் தொகுதி களிலும் 18 சட்டமன்றத் தொகுதி களிலும் வாக்காளர்கள் வாக்களிக் கிறார்கள். தேர்தல் பணிகளில் சுமார் 3.25 லட்சம் பேர் ஈடு படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
போலிசாரும் பாதுகாப்புப் பணி களில் அமர்த்தப்பட்டு இருக்கிறார் கள். தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருக்கும் இத்தகைய ஊழியர்கள், தங்கள் வாக்குகளை முன்னதாக அளிக்க அஞ்சல் மூலமாகவும் நேரடியாகவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டு இருக்கின்றன.
சொந்தத் தொகுதியிலேயே தேர்தல் பணியில் ஈடுபடும் அலு வலர்கள் தேர்தல் நாளன்றே வாக் குச்சாவடியில் வாக்களிக்கலாம்.
இதனிடையே, நேற்று திண்டுக் கல்லில் நடந்த அஞ்சல் வாக்குப் பதிவின்போது வாக்குப்பெட்டிகள் முறையாக மூடப்படாமல் திறந்தே கிடந்ததால் பெரும் வாக்குவாதம் மூண்டது.
திறந்திருந்த வாக்குப்பெட்டி களைக் கண்ட அரசு ஊழியர்கள், தேர்தல் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வாக்குப்பெட்டிகள் முறையாக மூடப்பட்டு அரசு ஊழியர்கள் தங்கள் வாக்குகளைப் பதிந்தனர்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது பல்வேறு குளறு படிகளால் அஞ்சல் வாக்குகள் பல செல்லாதவையாக அறிவிக்கப்பட் டன. அதேபோன்ற நிலை இம் முறையும் தொடர்வதாக தேர்தல் பணி அலுவலர்கள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!