சுடச் சுடச் செய்திகள்

ஒப்புகைச் சீட்டுகள் வழங்கும் இயந்திரங்களை  பரிசோதிக்கும் நடவடிக்கை

புதுடில்லி: தேர்தலில் வாக்களித்த தற்கான அளிக்கப்படும் விவிபி ஏடி எனப்படும் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரங்களின் பயன்பாடு காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குகள் துல்லியமாக பதிவாவதை உறுதி செய்யும் வகையில் ஒப்புகைச் சீட்டுகள் சரியாக வழங்கப்படுகின்றனவா என்று பரிசோதிக்கும் நடவடிக்கை அதிகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவின் துல்லியத்தன்மையை அதிகரிக் கும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 
இதையடுத்து இத்தகைய நட வடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
“ஒவ்வொரு தொகுதியிலும் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் வழி வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டுகளில் 50 விழுக்காட்டை சரிபார்க்கவேண்டும் என்றால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து நாட்கள் காலதாமதம் ஏற்படும்.
“எனினும் உச்ச நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிடவில்லை. ஒரே ஒரு இயந்திரத்துக்குப் பதி லாக அதிகபட்சமாக 5 இயந் திரங்களை இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தவேண்டும் என்று மட்டுமே உத்தரவிட்டுள்ளது,” எனத் தேர்தல் ஆணைய வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இதையடுத்து வாக்குப்பதிவு முறையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன் றத்தின் உத்தரவு அமைந்திருப்ப தாக பலரும் தெரிவித்துள்ளனர்.2019-04-09 06:00:00 +0800

அதிருப்தியில் உள்ள அத்வானி, ஜோ‌ஷியை சந்திக்கும் அமித் ஷா
புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் பிரதமர் மோடியை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோ‌ஷி வாரணாசி தொகுதியில் களமிறங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அவரை சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானியையும் மிக விரைவில் அமித்ஷா சந்திப்பார் எனத் தெரிகிறது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இவ்விரு தலைவர்களுக்கும் பாஜக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் இருவரும் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் இருவரையும் அமித்ஷா சமாதானப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon