சுடச் சுடச் செய்திகள்

குஷ்பு கிண்டல்: அதிமுகவின் விஞ்ஞானி தெர்மோகோல் ராஜு

சென்னை: மதுரை அதிமுக மக் களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து ரேஸ்கோர்ஸ் திடலில் வாக்கு சேகரித்த பின் செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “மதுரையில் எருமை குளித்தாலும் கூட்டம் கூடும். நடிகர்களுக்கு கூடுவதில் ஆச்சரியமில்லை.
“இன்று குஷ்புவிற்கு வயதாகி வருகிறது. எனவே அவரது பிர சாரத்தைக் கேட்டு மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள்,” என்று அவர் கூறினார்.
இதனைக் கேள்விப்பட்டு ஆத் திரமடைந்த நடிகையும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு, செல்லூர் ராஜுவின் கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “அதிமுகவின் விஞ் ஞானி தெர்மோகோல் ராஜூவிற்கு வயதாகி விட்டதுனு நல்லா தெரி யுது. பாவம் என்னமோ பேசிக் கொண்டு இருக்கிறார்,” என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon