சுடச் சுடச் செய்திகள்

4 தொகுதிகளுக்கு  மே 19ல் இடைத்தேர்தல்

சென்னை: தமிழகத்தில் காலி யாக உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள் ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து 18 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் அடுத்த வாரம் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) நடக்கிறது. காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் இதே தேதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந் தன. 
ஆனால் இந்தக் கோரிக் கையை தேர்தல் ஆணையம் நிரா கரித்துவிட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி ஆனது. 
இந்நிலையில், இந்த நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
இதற்கான வேட்பு மனுத் தாக் கல் ஏப்ரல் 22ஆம் தேதி  தொடங்கும் என்றும் 29ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்றும் ஆணை யத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 
ஏப்ரல் 30ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நிறைவடைகிறது. மே 2ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.
இந்த நான்கு தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளின் எண் ணிக்கை மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக் குகளுடன் சேர்த்து மே 23ஆம் தேதி நடத்தப்படும்  என்றும் அறி விக்கப்பட்டுள்ளது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon