சுடச் சுடச் செய்திகள்

நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம்: பாஜக வாக்குறுதிக்கு நடிகர் ரஜினி வரவேற்பு

மக்களவைத் தேர்தல் நாளை தொடங்கி பல கட்டங்களாக நடை பெற உள்ளது. தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி வாக்குப் பதிவு நடக் கிறது. இதுவரை வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகள் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு அதிகபட்சமாக ஆறு தொகுதிகள் தான் கிடைக்கும் என்று தெரி வித்துள்ளன. 
இந்நிலையில் அதிமுக-பாஜக அணிக்கு வலுவான பிரசாரத்திற் கான தேவை ஏற்பட்டுள்ளது. அத னால் நடிகர் ரஜினிகாந்தை பாஜக தரப்பு நாடியதாகவும் அதிலிருந்து தப்பிக்க புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பை வேகமாகத் தொடங்க ரஜினி ஏற்பாடு செய்ததாகவும் செய்திகள் வெளியாயின.
அதற்கேற்றார்போல ரஜினியின் 167வது படத்திற்கு தர்பார் என்று பெயர் சூட்டப்பட்டு அதன் முதல் படத்தோற்றம் நேற்று வெளியிடப்பட் டது. கிட்டத்தட்ட 25 ஆண்டு களுக்குப் பிறகு ரஜினி இப்படத் தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
பாஜக மட்டுமின்றி நடிகர் கமல் ஹாசனும் ரஜினியிடம் ஆதரவு கேட்டிருப்பதாக அண்மையில் தெரி வித்திருந்தார். இவர்களிடமிருந்து நழுவும் நோக்கில் இன்று ரஜினி மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் 18ஆம் தேதி வாக்களிப்பிற்காக மட்டும் சென்னை வந்துவிட்டு பிறகு இமய மலை சென்றுவிடுவார் என்றும் தமிழக நாளேடு தெரிவிக்கிறது.
இந்நிலையில், நேற்று போயஸ் தோட்டத்தில் உள்ள தமது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என்று அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதியை வரவேற்பதாகக் கூறினார்.
“நதிகளை இணைக்கும் திட் டத்தை செயல்படுத்தவேண்டும் என நான் வெகுநாட்களாக கூறி வருகிறேன். அந்த வகையில், நதி கள் இணைப்புக்கு தனி ஆணை யம் உருவாக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டி ருப்பது வரவேற்கத்தக்கது. 
“மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் இந்தத் திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நதி களை இணைத்தால் நாட்டிலிருந்து வறுமை போய்விடும். விவசாயி களின் வாழ்வாதாரம் உயரும்,” என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் யாருக் கும் ஆதரவில்லை என்று ஏற் கெனவே ரஜினி அறிவித்திருந்தா லும் நேற்று செய்தியாளர்கள் கமலுக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா என்று கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த ரஜினி, ‚“எனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதை ஏற்கெனவே கூறிவிட்டேன். எனக்கும் கமலுக்குமான நட்பை கெடுத்துவிடாதீர்கள்,” என்றார்.
கமல் உள்ளிட்ட யாருக்கும் தமது ஆதரவில்லை என்று ரஜினி மறுபடியும் கூறியிருப்பதாகவும் அதேநேரம் பாஜக வாக்குறுதியை வரவேற்றதன் மூலம் பாஜகவுக்கு மறைமுக ஆதரவைத் தெரிவித் துள்ளதாகவும் ஊடகங்கள் குறிப் பிட்டன. 
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதும் நதிகளை இணைக்க பாஜக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon