சுடச் சுடச் செய்திகள்

மர்ம வாகனம்; பணம் என பரபரப்பு

கோவை: கோவை உக்கடம் ஆத்துப் பாலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக சென்ற கண்டெய்னர் லாரியைப் பார்த்த அப் பகுதி மக்கள், அதனை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். இந்தத் தகவலால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதி காரிகளும் காவல் துறையினரும் விசா ரணை மேற்கொண்ட னர். ஆட்சியர் அலு வலகத்தில் வைத்து திறக்கப்பட்ட லாரியில் மூட்டை மூட்டை யாக டீத்தூள் இருந்தது. இதனை பொதுமக்களும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் பார்வையிட்டனர். கரூரில் பிடிபட்ட கண்டெய்னர் லாரிபோல பணத்துடன் பிடிபட்டதாக வெளியான தகவலால் உக்கடத்தில் பரபரப்பு நிலவியது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon