தாமரை மீண்டும் மலருமா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வாகை சூடியது. 30 ஆண்டுகளில் அறுதிப் பெரும்பான்மையைச் சாதித்த முதல் கட்சியாக பாஜக அப்போது திகழ்ந்தது.

ஆசியாவின் மூன்றாவது ஆகப் பெரிய பொருளியலாக இந்தியா உள்ளது. ஆனால் அதன் மக்கள் தொகை வளரும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் வேலை வாய்ப்புகள் வளரவில்லை. இந்தியாவில் வேலையின்மை தற்போதைய ஆகப் பெரிய பொருளியல் பிரச்சினையாக உள்ளது.

பொற்காலம் பிறக்கும், பொருளியல் முன்னேற்றம் ஏற்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த தேர்தலின்போது அளித்த திரு மோடியை மக்களில் பலர் நம்பிக்கையுடன் தங்களின் அடுத்தத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். பிரதமர் பதவியை ஏற்றது முதல் கட்டுமானம், சுகாதாரம், மின்சார வசதி, எரிபொருள் வசதி, மின்னிலக்கச் சேவைகள், பொருள் சேவை வரி, நாணய மதிப்பிழப்பு, வெளியுறவு ஆகியவற்றின் தொடர்பில் ஏராளமான திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார்.

இருந்தபோதும், பாஜக தனது இந்து அடிப்படைவாதக் கண்ணோட்டத்தை மற்ற சமூகத்தினர் மீது திணிக்க முயல்வதாக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மாட்டிறைச்சியைச் சாப்பிடுபவர்கள் மீதான தாக்குதல்கள் முதல் தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை கலவரம் வரை இந்தியாவில் ஆங்காங்கே நிகழும் பல்வேறு வெறிச்சம்பவங்களுக்கு பாஜக பொறுப்பு என்பதே திரு மோடியைச் சாடுபவர்களின் தொடர் விமர்சனம்.

திரு மோடி தேசிய அளவில் பேரிடரை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பாஜக மீது அண்மையில் வளர்ந்துவரும் அதிருப்தி, கடந்த டிசம்பர் மாதத்தில் காங்கிரஸுக்கு மாநிலத் தேர்தல் வெற்றியாக மாறியது.

தாம் வெற்றியடைந்தால் நாட்டின் உள்கட்டமைப்புக்காக 1.4 ட்ரில்லியன் டாலர் செலவிடப்போவதாகத் திரு மோடி இம்முறை உறுதியளித்திருக்கிறார். அயோத்தியில் முஸ்லிம்களால் இடிக்கப்பட்ட ராமர் கோவிலை மீண்டும் எழுப்பப் போவதாகவும் அவர் கூறினார். மேலும், வெளிநாடுகளின் ராணுவத் தாக்குதல்களிலிருந்து இந்தியாவைத் தற்காக்கும் காவல்காரராகத் தொடர்ந்து இருக்கப்போவதாகவும் திரு மோடி உறுதி அளித்தார்.

தாமரை மீண்டும் மலருமா? 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக வெற்றியடையும் என்று அனைவரும் நினைத்திருந்தபோது அக்கட்சி எதிர்பாராதவிதமாகத் தோற்றதைச் சிலர் சுட்டிக்காட்டுவர். எனவே, கருத்துக்கணிப்புகளைவிட காலம்தான் உறுதியான பதிலைக் கூறும் என்கின்றனர் அரசியல் கவனிப்பாளர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!