முதற்கட்ட வாக்களிப்பு: ஆந்திராவில் அடிதடி, இருவர் கொலை

உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 17வது நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு டன் தொடங்கியது. முதல் கட்டமாக நேற்று 20 மாநிலங்க ளின் 91 தொகுதிகளில் வாக்க ளிப்பு இடம்பெற்றது. 
ஆந்திரா, ஒடிசா, அருணாச் சல பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டமன்றங் களுக்கும் தேர்தல் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதிலிருந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
ஆந்திர மாநிலத்தில் காலையி லிருந்தே பிரச்சினை தொடங்கி யது. அங்கு 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் 175 சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற வேளையில், பல்வேறு பகுதிகளில் தேர்தல் தொடர்பாக ஆளும் தெலுங்குதேசம் கட்சி யினருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிர சாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளனர். 
குண்டக்கல் ஜனசேனா கட்சி யைச் சேர்ந்த மதுசூதன் குப்தா வாக்கு இயந்திரத்தில் சின்னம் சரியாக இல்லை என்பதால் இயந்திரத்தை உடைத்து சேதப் படுத்தினார். அவரை போலிசார் கைது செய்தனர்.
பல்வேறு இடங்களில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் தேர்தல் அதிகாரிகள் தலையிட்டு அதை வேகமாக சீர் செய்தனர்.
“மாநிலம் முழுவதும் வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வரு கிறது. ஒருசில இடங்களில் திடீ ரென கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டாலும் போலிசார் தலை யிட்டு அதை சரிசெய்தனர். பல வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்களில் கோளாறு ஏற்பட்டது. அவை உடனுக்குடன் சரி செய் யப்பட்டது,” என மாநில தேர்தல் தலைமை அதிகாரி கோபால் கிருஷ்ணா திவேதி தெரிவித்தார்.
இந்நிலையில், மசூலிப்பட்டி ணம் நகரில் உள்ள ஒரு வாக்குப் பதிவு மையத்தில் வாக்கு இயந்தி ரத்தை பரிசோதித்தபோது 125 வாக்குகள் அழிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்  அந்த இயந்திரம் மாற்றப்பட்டு ஏற் கெனவே வாக்களித்த 125 பேரும் திரும்ப வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணை யத்திற்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி யுள்ளார். “மாநிலத்தில் 30% இயந்திரங்களில் கோளாறு ஏற் பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அங்கு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டாலும் திரும்பிச் சென்ற வாக்காளர்கள் மீண்டும் வாக்குப் போட வரமாட்டார்கள். இதனால், மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபின் நடந்த முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இதுவாகும்.
காஷ்மீரில் முதல்கட்ட தேர்தலை எதிர்த்துப் பிரிவினை வாதிகள் வேலைநிறுத்தத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
எனினும் வாக்குப்பதிவில் பிரச்சினைகள் எதுவும் ஏற்பட வில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த முதல்கட்டத் தேர்தலில் மக்களின் ஆதரவை என்னால் உணரமுடிகிறது.  மோடி அரசு மீண்டும் அமையும் என்பதை உணர்த்தும் ஆதரவு அலை வீசு வதை முதல்கட்ட தேர்தல் நமக்கு உணர்த்துகின்றன என்று  அசாம் மாநிலம் சில்சாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 
மோடி வெல்லமுடியாதவர் அல்ல என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என்று காங்கிஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்தார். 
அதேநேரத்தில், ராகுல் மீது ஸ்னைஃபர் துப்பாக்கியில் பயன் படும் லேசர் ஒளி 7 முறை பாய்ச்சப் பட்டதால் அவருக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்தக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அது ஸ்னைஃபர் துப்பாக்கியின் லேசர் ஒளி அல்ல, கைபேசியின் ஒளி. ராகுலின் பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை என்று மத்திய அரசு மறுத்துள்ளது.
இந்தியாவின்  543 நாடாளு மன்றத் தொகுதிகளுக்கு மே 19 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மே 23ல் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. 
நாடு முழுவதும் 100% ஓட்டுப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலும் வாக்கைப் பதிவு செய்ய முடியும்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon