சுடச் சுடச் செய்திகள்

வாக்களித்தால் கோழி சலுகை விலை

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி நடக்கும் பொதுத்தேர்தலில் 100% வாக்குப்பதிவைச் சாதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நடிகர்களை வைத்து விளம்பரம் செய்து வருகிறது. 
இந்த நிலையில், சென் னையில் அயனாவரத்தில் இறைச்சிக் கடை வைத்துள்ள மகேஷ் என்பவர், தேர்தல் ஆணையத்துக்குக் கை கொடுக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்து வாடிக்கையாளர்களை மிக வும் கவர்ந்து வருகிறார். 
தேர்தலில் வாக்களித்து விட்டு விரலில் வாக்களித்த மையுடன் வருவோர் தன் கடையில் இறைச்சி வாங் கினால் ரூ.50 தள்ளுபடி கொடுக்கப்படும் என்று மகேஷ் அறிவித்துள்ளளார். 
“சோம்பல், விடுமுறை இல்லா நிலை, ஊக்கக் குறைவு போன்றவை காரண மாக பலரும் வாக்களிக்காமல் இருந்துவிடுகிறார்கள். வாக் களிப்பது ஒவ்வொரு குடி மகனின் கடமை என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் நான் இந்த முயற்சியை மேற் கொண்டு இருக்கிறேன்,” என்று கடைக்காரர் மகேஷ் தெரிவித்துள்ளார். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon