‘தமிழகத்தை தமிழரே ஆளவேண்டும்’

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரே அம்மாநிலத்தை ஆளவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முழங்கியிருக்கிறார்.
கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல், "தமிழகத்தில் இருப்பவர் களாலேயே தமிழகம் ஆளப்பட வேண்டும். மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்," என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தமி ழகத்தை ஆளும் அதிமுகவை ஆட்டிவைப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சி களும் குற்றம் சாட்டி வருகின்றன.
இருந்தாலும், தமிழக மக்கள் அனைவரையும் அவரால் அடிமைப் படுத்த முடியாது என்றார் ராகுல்.
தமிழகத்தின் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் தமிழர்களை ஒருபோதும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை ஐந்து நிமிடங் களிலேயே மோடி புரிந்துகொள் வார் என்றார் ராகுல்.
"தமிழகத்தை நாக்பூரில் இருப்பவர்கள் ஆளக்கூடாது," என்று நாக்பூரைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் ஆர்எஸ்எஸ்காரர்களை அவர் சாடினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந் தால், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட மாட்டார் கள் என்று அவர் சொன்னார்.
"வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத பெரும் பணக்காரர்கள் சிறைக்குச் செல் வதில்லை. மாறாக, கடனைக் கட்டத் தவறிய ஏழை விவசாயி களை மட்டும் சிறையில் அடைப் பது நியாயமற்றது. 2019க்குப் பிறகு அப்படி எதுவும் நடக்காது," என்று ராகுல் பேசினார்.
காங்கிரஸ் ஆட்சியில் விவசா யிகள் விளைவிக்கும் பொருட் களுக்கு குறைந்தபட்ச அடிப்படை விலை நிர்ணயிக்கப்படும் என்றும் ஆதலால் அதற்கேற்ப விவசாயி கள் எவற்றை விளைவிப்பது என முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள முடியும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பத் தலை விகளின் வங்கிக் கணக்குகளில் ஆண்டிற்கு ரூ.72,000 செலுத்தப் படும் என்றும் அவர் உறுதி கூறினார்.
ஜவுளித் தொழில் மையமான திருப்பூரும் பட்டுத் தொழில் நகரமான காஞ்சிபுரமும் பொருள், சேவை வரியால் (ஜிஎஸ்டி) முடங்கிப்போயுள்ளதாகக் குறிப் பிட்ட அவர், காங்கிரஸ் ஆட்சி யைப் பிடித்தால் அத்தொழில் நகரங்கள் மீண்டும் தழைத்தோங் குவது உறுதி என்றார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் காலியாக உள்ள 2.4 மில்லியன் அரசுப் பணியிடங் களும் ஒரு மில்லியன் பஞ்சாயத் துப் பணியிடங்களும் நிரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மக்க ளவை, மேலவையிலும் சட்டமன் றங்களிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அவர் அறிவித்தார். அதேபோல, மத்திய அரசு வேலைகளிலும் மகளிருக்கு 33% இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அனில் அம்பானி, மெகுல் சோக்‌ஷி, நீரவ் மோடி உள்ளிட்ட தம்முடைய 15 நண்பர்களுக்காக மட்டுமே பிரதமர் மோடி அரசாங் கத்தை நடத்தினார் என்று ராகுல் குற்றம் சாட்டினார். 'மேக் இன் இந்தியா' என்ற மோடியின் முழக்கம் வெற்று முழக்கமாக ஆகிவிட்டதாகக் கூறிய அவர், இந்தியாவில் எங்கெங்கு காணி னும் 'மேட் இன் சீனா'வாகத்தான் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை மாநிலங்களே முடிவுசெய்ய வேண்டும். நீட் தேர்வால் அனிதா போன்று இனி ஒரு மாணவி உயிரை மாய்த்துக் கொள்வதை நாங்கள் விரும்ப வில்லை. அப்படியொரு துயரச் சம்பவம் இனி நடக்கவிடமாட் டோம்," என்றார்.
கிருஷ்ணகிரி, சேலத்தைத் தொடர்ந்து தேனி, மதுரை ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட் டங்களில் ராகுல் உரையாற்ற இருந்தார்.
இதற்கிடையே, தமிழகம் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று காலையில் ராமநாதபுரத்திலும் மாலையில் தேனியிலும் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றவிருக் கிறார்.

கிருஷ்ணகிரியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் ராகுல் காந்தி (வலது). படம்: ஏஎன்ஐ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!