சுடச் சுடச் செய்திகள்

கனிமொழி, கதிர் ஆனந்த் தகுதியிழக்க நீதிமன்றத்தில் மனு

மதுரை: வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகத் தெரிவிக் கப்பட்டு இருக்கும் புகார்களை அடுத்து, திமுக நாடாளுமன்ற வேட்பாளர்களான கனிமொழி, கதிர் ஆனந்த் இருவரையும் தகுதி இழப்பு செய்யவேண்டும் என்று கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒருவர் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார்.
தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவாக கோயில் கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் நூதன முறைகளில் திமுக பணம் பட்டுவாடா செய்வ தாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.
வேலூர் தொகுதியில் போட்டி யிடும் கதிர் ஆனந்த் சார்பிலும் பெரும் பணம் வழங்கப்பட்டு வரு வதாகவும் மனுதாரர் கூறுகிறார். 
இந்த இரு வேட்பாளர்களின் செயல்பாடுகள் தேர்தல் ஆணை யத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கச் செய்வதால் இந்த இருவரையும் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர்கள் என்று அறிவிக்கும்படி கேட்டு மனுதாரர்  கோரிக்கை விடுத்திருக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon