ஓபிஎஸ், இபிஎஸ்: தாயில்லா பிள்ளைக்கு தலைப்பிரசவம்

சென்னை: தாயில்லாத பிள்ளைக்கு நடக்கும் தலைப்பிரசவத்தைப் போல, ஜெயலலிதா இல்லாத அதிமுக மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது என்றும் அந்தப் பிரசவம் சுகப்பிரசவமாகவே வெற்றி அடையும் என்றும் அதிமுக தலைவர்கள், தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றில் ஊக்கமூட்டி இருக்கிறார்கள். 
கட்சியின் துணை ஒருங் கிணைப்பாளரான முதல்வர் எடப் பாடி பழனிசாமி, ஒருங்கிணைப் பாளரான துணை முதல்வரான ஓ. பன்னீர் செல்வம் இருவரும் நேற்று கட்சித் தொண்டர்களுக்கு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். 
கருத்துக் கணிப்பு மூலம் பெரும் பணத்தைச் செலவிட்டு எதிர்த்தரப்பினர் பொய்த் தகவல் களை வெளியிட்டு அதிமுக கூட் டணியினரைச் சோர்வடையச் செய்ய முயல்வதாகவும் ஆனால் அதிமுகவினர் ‘வெல்லப் பாயும் குதிரை, கொல்லையும் நோக்காது, புல்லையும் பார்க்காது’ என்பது போல குறிக்கோளை நிறைவேற்று வதில் சரித்திரம் படைப்பவர்கள் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. 
மாநிலம் எங்கும் அலை அலை யாக அணிவகுக்கும் மக்கள், இலை, பூ, கனிக்குத்தான் வாக்கு என்று முரசு அடித்துக் கூறுவதாக வும் எதிர்க்கட்சிகளின் நிலை ‘கோல் அடிக்க முடியாத கோழை ஆள் அடிப்பான்’ என்பது போலத் தான் இருக்கிறது என்றும் அவர் கள் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.  
திமுகவின் திருமங்கலம் பாணியில் தேர்தல் ஜனநாயகத்தை விலைபேச எதிர்த்தரப்பினர் திட்ட மிடுவதாகக் குறிப்பிடும் அதிமுக அறிக்கை, அந்தச் சதிக்கு ஆளாகிவிடக்கூடாது என்று கட்சி யினரை விழிப்பூட்டி இருக்கிறது. 
வாக்களிக்க இன்னமும் எஞ்சி இருக்கின்ற நாட்கள் மிக முக்கிய மானவை என்றும் அந்த நான்கு நாட்களில் விழிப்புடன் இருந்து கட்சியினர் செயல்பட்டால் 40 தொகுதிகளும் அதிமுக அணிக்கே கிடைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ள அதிமுக தலைவர்கள், இடைத்தேர்தல் நடக் கும் அத்தனை தொகுதிகளும் ‘இலைத்தேர்தலாகும்’  என்று வர் ணித்து இருக்கிறார்கள். 
இரட்டை இலை அத்தனை தொகுதிகளிலும் வெற்றிகளைக் குவிக்கும் என்று பன்னீர் செல் வமும்  பழனிசாமியும்  அறிக்கை யில் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon