நடிகர் ரித்திஷ்  திடீர் மரணம்

ராமநாதபுரம்: நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பு காரணமாக 
நேற்று திடீரென காலமானார். அவருக்கு வயது 46.‘சின்னபுள்ள’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர்ரித்திஷ் அண்மையில் வெளியான எல்கேஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். 2009ல் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, 2014ல் அவர் அதிமுகவில் இணைந்தார். 
நடிகர், அரசியல்வாதி மட்டுமல்லாது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கப் பணிகளிலும் ரித்திஷ் ஈடுபட்டு வந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். 
இந்நிலையில், அவர் மக்களவைத் தேர்தலுக்காக ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்தி ரனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ராமநாதபுரத்தில் தமது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon