அசத்துகிறார் ராகுல்; அசரவில்லை மோடி

தமிழ்நாட்டில் வழக்கத்திற்கு மாறாக கடும் வெப்பநிலை நிலவுகிறது. ஆனால் அரசியல் கட்சிகள் நடத்தி வரும் தேர்தல் பிரசார சூடு அதைவிட வெப்பத்தைக் கிளப்புகிறது. இதில் மாநிலத் தலைவர் களைத் தேசிய தலைவர்கள்  விஞ்சிவிட் டார்கள் என்றே பலரும் கூறுகிறார்கள். 
அதிமுகவுடன் கூட்டு வைத்திருக்கும் பாஜக பிரதமர் நரேந்திர மோடி, ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, பல முறை தமிழகத்துக்குத் திரும்பத்திரும்ப வந்து வாக்காளர்களைச் சந்தித்தார்.
அவர், தான் யார் என்பதையும் தன் நோக்கம் என்ன என்பதையும் விளக்கியும் தன் தலைமையில் இந்தியா உள்நாட்டு அளவிலும் உலகளவிலும் முன்னேறு வதைக் காண சகிக்காத எதிர்த்தரப் பினர் எல்லாரும் சேர்ந்துகொண்டு தம்மை வீழ்த்தப் பார்ப்பதாகவும் தமிழக மக்கள் தன்னைக் கைவிடமாட்டார்கள் என்றும் பேசிவந்துள்ளார். 
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அறவே ஆதரவு இல்லை என்பதை உணர்ந்திருக் கும் பிரதமர், அதிமுகவின் பலத்தைக் கொண்டுதான் அந்த மாநிலத்தில் தலை நிமிர முடியும் என்ற நம்பிக்கையுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்றார். 
தேனியில் நேற்று பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் புகழ்ந்து தள்ளினார். இருவரும் ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் என்றாரவர். 
எல்லாவற்றையும் மனதில் வைத்து,  பாஜகவின் சாதனைகளை எல்லாம் சீர் தூக்கிப் பார்த்து தமிழக மக்கள் மீண்டும் பாஜக ஆட்சி ஏற்பட உதவவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். 
ஜெயா-தினகரன்
2014 தேர்தலுடன் ஒப்பிடுகையில் இப் போது பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் ஆதரவு குறைந்து இருக்கிறது என்பது தெரியவந்து இருக்கிறது.- 
குறிப்பாக வடஇந்தியாவில் பாஜகவுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை ஈடுசெய்ய தமிழகத்தில் எப்படியும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைச் சாதிக்கவேண்டும் என்று பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. 
இந்த இலக்கை நிறைவேற்றும் வகை யில் அது அதிமுகவுடன் கூட்டணி வைத் துள்ளது. ஆனால் முன்பு எம்ஜிஆர் மரணத்திற்குப் பிறகு வி.என். ஜானகி, ஜெயலலிதா இருவருக்கும் இடையில் பிளவு ஏற்பட்டு அதிமுக முற்றிலும் தோல்வியைச் சந்தித்த ஒரு நிலையையே இப்போதைய அதிமுக எதிர்நோக்கி இருப்பதாக நம்பப்படும் ஒரு சூழலில், பிரதமர் மோடி அந்தக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார் என்று அரசியல் கவனிப்பாளர்கள் சிலர் கூறுகிறார்கள். 
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் ஓரணியிலும் டிடிவி தினகரன் தலைமையில் வேறு ஓர் அணி யினரும் பிரிந்துவிட்டனர்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெய லலிதாவின் கை ஓங்கியதைப்போல இப் போது புதிதாக அமமுக கட்சி தொடங்கி உள்ள தினகரனின் செல்வாக்குதான் இனி அதிகரிக்கப்போகிறது என்று அவர் கள் கணிக்கிறார்கள். 
இந்த நிலையில், தினகரனை ஒதுக்கி விட்டு ஓபிஎஸ், இபிஎஸ் அணியை பாஜக அரவணைத்து இருப்பது, அவர்களுக்கு எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என் பதைத் தீர்மானிக்க முடியவில்லை என்றும் கவனிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். 
அரசியல் நோக்கர்கள் இப்படி தெரி வித்து வரும் அதேவேளையில், காங்கிரஸ் கட்சியோ வேறு மாதிரியான கருத்து களைத் தமிழக வாக்காளர்களிடம் முன் வைத்து வருகிறது. 
காங்கிரஸ் கருத்து
எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரைச் சொல்லி அதிமுகவினரை மிரட்டி எடுபிடி களாகப் பயன்படுத்திக்கொண்டு வடக்கே இருந்தே தமிழ்நாட்டை மறைமுகமாகத் தாங்களே ஆட்சி புரியலாம் என்ற திட்டத் துடன் பாஜக தந்திரமாகக் காய்களை நகர்த்தி வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிடுகிறது. 
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் நான்கு நகர்களில் வாக்காளர்களைச் சந்தித்துக் கூட்டங்களில் பேசினார். 
“தமிழ்நாட்டை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஆளவேண்டும். 
“பாஜகவின் மதியுரைஞர் அமைப்பான ஆர்எஸ்எஸ்  மறைமுகமாக வடக்கே நாக் பூரில் இருந்து தமிழகத்தை ஆள்வதற்கு அனுமதித்துவிடக்கூடாது,” என்று ராகுல் பேசியது தமிழக வாக்காளர்களிடையே புதிய சிந்தனையைக் கிளப்பிவிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. 
முன்னுக்குப் பின் முரண்
“ஒரு தேசிய தலைவரே இப்படி பேசி யிருப்பது ஏதாவது ஒரு மாநில கட்சிக்கு வாக்களித்தே ஆகவேண்டும் என்ற ஒரு சிந்தனையை, இதுவரை எந்த முடிவையும் எடுத்திராத பல வாக்காளர்களிடம் ஏற்ப டுத்தி இருக்கிறது. 
“மோடி-ராகுல் இருவரும் தமிழ்நாட் டில் இதுவரை அரங்கேற்றி உள்ள தேர்தல் பிரசாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், தமிழ்நாட்டை தமிழரே ஆளவேண்டும் என்று ராகுல் பேசி இருப்பது எடுப்பாக கருத்தைக் கவரும் ஒரு பேச்சாக இருப்பது போல் தெரிகிறது,” என்று அரசியல் நோக் கர்கள் கூறுகிறார்கள். 
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக திமுகவைவிட கவர்ச்சியாக ராகுல் பிரசாரம் செய்து இருக்கிறார் என்று அந்தக் கூட்டணியைச் சேர்ந்த சிலர் சொல்வதைக் கேட்க முடிகிறது.
“தேனியில் நேற்றுப் பிரசாரம் செய்த போதுகூட வாரிசு அரசியல் நடத்துவதாக திமுகவையும் காங்கிரஸ் கட்சியையும் பிரதமர் மோடி குறைகூறினார். 
“ஆனால் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் துணை முதல்வரான ஓ. பன்னீர் செல்வத்தின் வாரிசான அவ ருடைய புதல்வர் ரவீந்திரநாத் குமாருக்கு பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தார். இது எந்த விதத்தில் நியாயம்,”? என்று அரசியல் கவனிப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக இரண்டு பெரும் கட்சி களின் தலைமையில் கூட்டணி அமைந் திருந்தாலும் அந்த இரண்டு கூட்டணி களுக்கும் ஆதரவாக நடக்கும் பிரசாரங் களில் மாநிலத் தலைவர்களைவிட தேசிய தலைவர்கள் எடுப்பாகத் தெரிகிறார்கள் என்று எந்த கட்சியையும் சாராத அரசியல் கவனிப்பாளர் ஒருவர் கருத்துரைத்தார். 
இதே அரசியல் போக்கு நீடித்தால் தமிழக அரசியல் களம் பல மாற்றங் களைக் காணும் என்றும் தேசிய தேர்தல் மட்டுமின்றி மாநில சட்டமன்றத் தேர்தலி லும் பிரசாரத்தில் மாநில கட்சிகளுக்குத் தேசிய தலைவர்கள் கைகொடுக்கும் நிலை வரக்கூடும் என்றும் அரசியல் பேச்சு தலை எடுத்து இருக்கிறது.
இப்போதைய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் மத்தியில் அமையும் புதிய ஆட்சியில் தமிழ்நாட்டின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.2019-04-14 06:10:00 +0800 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon