சுடச் சுடச் செய்திகள்

பிரேதத்துக்கு வழிவிட பேச்சை முடித்துக்கொண்ட ஸ்டாலின்

வேலூர்: திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வேலூர் ஆம்பூர் பகுதியிலும் பிறகு குடியாத்தம் பகுதியிலும் வாக்கு வேட்டையாடினார். ஆம்பூர் பகுதியில் பெரும் திரளாகக் கூடி யிருந்த மக்களிடையே ஸ்டாலின் காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்த போது அந்த வழியாக இறுதி ஊர்வலம் ஒன்று வருவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. 
அதற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்த ஸ்டாலின், உடனே தன் உரையை முடித்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு கிளம்பிவிட்டார்.
வாக்காளர்களிடம் திமுக கூட் டணியை ஆதரிக்குமாறு வேண்டு கோள் விடுத்த ஸ்டாலின், வேலூரில் அண்மையில் நடந்த வருமான வரி சோதனைகள் எல்லாம் அங்கு தேர்தலை ரத்து செய்ய இடம்பெறுவதற்கான சதிச் செயல் என்றார். 
மத்திய, மாநில அரசுகளை வீழ்த்த இப்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுபோல வாக்காளர்களுக்கு வாய்ப்பு கிடைத்து இருப்பதாகவும் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படியும் ஸ்டாலின்  மக்களைக் கேட்டுக்கொண்டார். 
குட்டிக்கரணம் போட்டு உருண்டு வந்தால்கூட தாமரை மலர வாய்ப்பில்லை என்றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon