மோடியின் தேர்தல் பிரசாரத்திற்கு ஓபிஎஸ் ரூ.50 கோடி செலவு செய்தார்: தங்க தமிழ்செல்வன்

அலங்காநல்லூர்: தேனி நாடாளு மன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்குமாரும் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழ கம் சார்பில் தங்க தமிழ்ச் செல் வனும் போட்டி போடுகிறார்கள்.
இந்த மூன்று பேருக்கும் இடை யேதான் தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அலங்காநல் லூரில் தங்க தமிழ்செல்வன் பரிசுப் பெட்டிக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்தின் மூலம் அதிமுக டெபாசிட் இழக்கும். நாட் டில் எத்தனையோ மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் போது அதி முக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்காக அதிலேயும் ஓபிஎஸ் தனிப்பட்ட வேண்டுகோளுக்காக மோடி தேனிக்கு வந்து பிரச்சாரம் செய்துள்ளார். இது இந்திய அர சியல் வரலாற்றில் வெட்கக் கேடாக இருக்கிறது. இந்த தேர்தல் பிரசாரத்திற்காக 50 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.
"ஆனால் தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எதிர்க் கட்சி வேட்பாளர்களின் வீடு களில் சோதனை செய்யும் வருமான வரித்துறையினர் ஓபிஎஸ் வீட்டில் சோதனை மேற்கொள்ளலாமே. தேனி தொகுதிக்கு ஆயிரம் கோடி செலவு செய்யும் ஓபிஎஸ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? தேனி தொகுதியில் அதிமுகவினர் ஒரு ஓட்டுக்கு 20,000 வரை பணம் கொடுக்க இருக்கிறார்கள்.
"அப்பணம் போலிஸ் வாக னங்கள் மூலம் கொண்டு செல்லப் படுகின்றன. அதை சாலை களிலும் தெருக்களிலும் பகிரங்க மாகவே வைத்து பணப் பட்டு வாடா செய்து வருகின்றனர். இது பற்றி தேர்தல் ஆணையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதுதான் வெட்கக்கேடாக இருக்கிறது," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!