திருமங்கலம் பாணியை   விஞ்சும் புது தந்திரம்

சென்னை: தமிழ்நாட்டில் நாடாளு மன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்களிப்பு நெருங்கிவிட்ட நிலை யில் அரசியல் கட்சியினர் பணத் துடன் களம் இறங்கி கடைசி கட்ட முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள் என்று பரபரப் பாகப் பேசப்படுகிறது. 
மிகப் பிரபலமான திருமங்கலம் பாணியை விஞ்சும் அளவுக்கு இப்போது புதிய பண விநியோகத் தந்திர முறை கண்டுபிடிக்கப் பட்டு, தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவும் அளவுக்கு அந்த முறை அமல் படுத்தப்படுவதாகத் தெரிகிறது. 
அந்தப் புதிய பணவிநியோக முறைப்படி, கட்சி நிர்வாகிகளை எந்த நேரத்தில் சோதித்தாலும் அவர்களின் பையில் கூடினபட்ச மாக ரூ. 3,500 மட்டுமே இருக்கும்.
இப்படி பறக்கும் படையினரிடம் மாட்டிக்கொள்ளும் இத்தகைய நிர்வாகிகள், மளிகைக்கடைக்குச் சாமான் வாங்கப்போவதாகச் சொல்லி தப்பி விடுகிறார்கள். 
இத்தகைய புதிய பணப்பட்டு வாடா தந்திரம் வழி 10 லட்சம் வாக்காளர்களுக்குத் தலா ரூ. 500 கொடுக்க முக்கியமான ஒரு கட்சி களத்தில் இறங்கிவிட்ட தாகக் கூறப்படுகிறது. 
1,000 வாக்காளர்களுக்கு ஐந்து பொறுப்பாளர்கள். அந்த ஐந்து பேரின் கீழ் தலா எட்டு துணைப் பொறுப்பாளர்கள். 
துணைப் பொறுப்பாளர்கள் கீழ் எடுப்புப் பொறுப்பாளர் என்று பல நிலைகளில் பண விநியோகப் பேராளர்கள் செயல்படுகிறார்கள். 
இப்படிப் பார்த்தால் ஒருவர் 12 முதல் 13 பேருக்குப் பணம் கொடுத்தாலே போதுமானது.  இந்த ஏற்பாட்டின்படி ஆளுக்கு ரூ. 300 வீதம் பணத்தைக் கொடுக்க ரூ.3,500 பணத்துடன் கட்சிப் பேராளர்கள் திரிகிறார்கள். 
இதில் வேடிக்கை என்னவென் றால் கட்சித் தலைமை ஆளுக்கு ரூ. 500 கொடுத்து இருக்கிறது என்றாலும் அதில் ரூ. 200ஐ கட்சி நிர்வாகிகளே அமுக்கிவிடுகிறார் கள் என்றும் கூறப்படுகிறது. 
அந்த அரசியல் கட்சியின் இந்தப் புதிய பாணி பட்டுவாடா பற்றி தெரிந்துகொண்டுள்ள இதர கட்சிகளும் தீவிரமாக இன்னும் புதுப்புது வழிகளை அரங்கேற்று வது குறித்து ஆராய்ந்து வருவ தாகவும் கூறப்படுகிறது. 
இந்நிலையில், கட்சிகளின் கடைசிநேர பணப்பட்டுவாடா தந் திரங்களை எப்படி முறியடிப்பது என்பது பற்றி தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் தீவிர சிந்தனை யில் ஆழ்ந்து இருக்கிறது. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon