சீமான் தேர்தல் அறிக்கையில் மொழி, உரிமைக்கு முக்கியம்

சென்னை: மாநில உரிமைகளை யும் மொழியையும் மையப்படுத்தி நாம் தமிழர் கட்சி வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கை பல தரப்புகளிலும் பெரும் வரவேற்பை பெற்று இருப்பதாகக் கூறப்படு கிறது.
நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் சீமானின் நாம் தமிழர் கட்சி, 'ஆட்சி செயற் பாட்டு வரைவு' என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
தமிழர் நலனுக்காகவும் தமிழ் நாட்டின் நலனுக்காவும் தமிழ் மொழியின் நலனுக்காவும் பல் வேறு திட்டங்கள் தேர்தல் அறிக் கையில் இடம்பெற்றுள்ளன.
துறைமுகங்கள் மேம்பாடு, உள்ளாட்சி அமைப்பில் பெண் களுக்கு முக்கியத்துவம், ஆறு சட்டமன்றத்திற்கு ஒரு நாடாளு மன்றத் தொகுதி என்பதை மாற்றி மூன்று சட்டமன்றத்திற்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி என்ற அளவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவது;
அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் அரச மைப்புச் சட்டத்தை மாற்றுவது ஆகியவற்றுக்குக் குரல் கொடுத்து இருக்கும் அந்த அறிக்கை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதை எதிர்க்கிறது.
மொழிக்கு முதல் முக்கியத் துவம் கொடுக்கப்படவேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சித் தேர்தல் அறிக்கை வலியுறுத்திக் கூறுகிறது.
இதனிடையே, நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சென்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் 1% வாக்குகளைப் பெற்ற சீமான் கட்சிக்கு ஆதரவாக இப்போது பல நிலவரங்களும் தலைதூக்கி இருக்கின்றன என்பது பல கணிப்புகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
கட்சியின் ஒருங்கிணைப் பாளரான சீமான் தன் காரசார மான, ஆக்ரோஷமான பிரசாரத் தின் மூலம் ஏராளமான இளை ஞர்களைக் கவர்ந்து வருவதும் மத்திய அரசாங்கத்திற்கு எதி ரான மக்களின் மனப்போக்கும் மாநில கண்ணோட்டமும் நாம் தமிழர் கட்சிக்குக் கிடைக்கக் கூடிய வாக்குகளை அதிகரிக்கும் என்று பலரும் கூறுகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!