பிரேமலதா பேச்சு; வாக்குகள் போச்சு

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தன் கட்சிக் கூட்டணிக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். 
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தலைதூக்கி  உள்ள நிலையில், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அண்மையில் பிரேமலதா பிரசாரம் செய்தார். 
அவருடைய இந்தப் பேச்சு தேமுதிகவில் பெரிய அளவில் பிளவை ஏற்படுத்தி இருப்பதாகவும் பிரேமலதாவின் பேச்சைக் கண்டித்து அந்தக் கட்சியிலிருந்து 200க்கும் அதிக பெண்கள் விலகி அமமுகவில் சேர்ந்துவிட்ட தாகவும் கூறப்படுகிறது. 
பிரேமலதா, அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர்களை நீ வா போ என்று ஒருமையில் பேசியது பெரிய பிரச்சினையைக் கிளப்பியது. இதில் பிரேமலதா தன் கணவரை விஞ்சி விடு வார் என்று பேசப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்