உயிருக்கு ஆபத்து என சுமலதா புகார்

பெங்களூரு:  தமக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வரும் தனது மகன் அபிஷேக் கவுடா, நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோரை அச் சுறுத்தும் வகையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசி வருவ தாக நடிகை சுமலதா குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே இம்மூவர் மட்டுமல்லா மல், தமது உயிருக்கும் ஆபத்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் அம்பரீ ‌ஷின் மனைவியான சுமலதா, இம் முறை கர்நாடக மாநிலம் மாண்டியா நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்குகிறார். இத்தொகுதியில் அம்மாநில முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார்.
தாதளம் கட்சியினர் தங்கள் மீது எத்தகைய தாக்குதலும் நடத்த தயாராக உள்ளதாக சுமலதா புகார் எழுப்பியுள்ளார்.
“எனது உயிருக்கும் எனது குடும்பத்தினருக்கும் நடிகர்க ளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் இறுதி பிரசார நாளன்று என் மீது கல்வீசி தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 
“தனது மகன் நிகில் தேர்தலில் தோற்றுவிடுவார் என்ற பயத்தில் குமாரசாமி எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி வருகிறார்,” என்று சுமலதா மேலும் தெரிவித்துள்ளார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon