ராகுல் காந்தி கருத்து: நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி தனக்கு ஏற்றார்போல் மாற்றிப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்குமாறு அவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராகுல் காந்தி கூறிய கருத்து களை நீதிமன்றம் ஒருபோதும் கூறவில்லை என்றும் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தெரிவித்துள் ளனர்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதி மன்றம், சீராய்வு மனுவுடன் தாக் கல் செய்யப்பட்ட ஆதாரங்களையும் நாளேடுகளில் வெளியான ஆதா ரங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த இருப்பதாக தெரிவித்தது.
இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணை விரைவில் தொடங்கும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி யிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
அப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. இது குறித்து பேசிய ராகுல், 'காவலாளி எனக் கூறிக் கொள்பவரை, திருடன் என நீதிமன்றமே கூறிவிட்டது' என்று குறிப்பிட்டார்.
இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீதி பதிகள் தெரிவிக்காத கருத்தை ராகுல் தெரிவித்திருப்பதாக பாஜக சாடியது.
இதையடுத்து பாஜகவின் டெல்லி தொகுதி எம்பியான மீனாட்சி லெகி என்பவர் ராகு லுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குற்றவியல் அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி வேண்டுமென்று திரித்து, அதற்கு அரசியல் சாயம் பூசி, தனிமனிதரான பிரதமர் மோடியை தாக்கிப் பேச பயன் படுத்தி உள்ளார் என்றும் ராகு லின் வார்த்தைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இல்லை என்றும் மீனாட்சி லெகி தமது மனுவில் குறிப் பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, நீதிமன்றத்தின் கருத்துகளை, ஆய்வுகளை, கண்டுபிடிப்புகளை தாங்கள் தெளிவாக கூறியிருப்ப தாகக் குறிப்பிட்டது.
ஆனால் ராகுல் காந்தி நீதிமன்றத்தின் கருத்துக்களை ஊடகங்களிடமும் மக்களிடமும் தவறாக எடுத்துரைத்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
"அரசு தலைமை வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்த குறிப்பிட்ட சில ஆவணங்களை சட்ட ரீதியாக ஏற்கலாம் என்றுதான் தெரிவித் தோம். ராகுல் தனது பேச்சுக்குரிய விளக்கத்தை வரும் 22ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும். ," என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!