தவறான தகவல்களைப் பரப்பும்  வாட்ஸ் அப் எண்கள் முடக்கப்படும்

புதுடெல்லி: முதல்கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள், வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் அதிகமாகப் பரப்பப்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் குவிந்து வருகின்றன. 
இதையடுத்து வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கக் கோரும் பதிவுகளை 3 மணி நேரத்தில் நீக்க அனைத்து சமூக வலைத்தளங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. 
அதன்படி கடந்த 11ஆம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலின்போது தேர்தல் ஆணையம் கோரிய சர்ச்சைக்குரிய பதிவுகள் நீக்கப்பட்டன. அப்போது 500 ஃபேஸ்புக் கணக்குகளும் ஒரு வாட்ஸ் அப் எண்ணும் இரு டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பொய் செய்திகள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பரப்பும் வாட்ஸ் அப் எண்கள் முடக்கப்படும் என்றும் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon