பணப்பட்டுவாடா: தேர்தல் ஆணையம் மீது மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: கட்சிகளையே பணத்தால் விலை பேசி கூட்டணிக்குள் கொண்டு வந்தவர்கள், வாக்காளர் களாகிய பொதுமக்களையும் விலை பேசிட முடியும் எனக் கருதுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மத்திய, மாநில ஆளுங் கட்சிகள் 200 ரூபாயில் தொடங்கி, 20 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொரு வாக்குக்கும் விலை வைத்து விநி யோகிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் பணப்பட்டு வாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்று குறிப்பிட் டுள்ள அவர், நாட்டை இருட்டில் தள்ளி, பின்னோக்கி இழுத்த பாசிச அடிமை ஆட்சியை ஒருசேர விரட் டிட ஏப்ரல் 18ஆம் தேதி தமிழக மக்கள் தீர்ப்பு எழுத வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
"தேர்தல் ஆணையம், காவல் துறை, பறக்கும் படை என்றெல் லாம் சொல்லப்படும் அமைப்புகளில் இருப்பவர்கள் எதிர்க்கட்சிகளை குறி வைப்பதும் விவசாயிகள், வணிகர்கள், ஏழை நடுத்தர மக் களை மடக்கி சோதனை என்ற பெயரில் பாடாய்ப் படுத்துகிறார் களே தவிர, ஆட்சியில் உள்ளவர் கள் அமைத்துள்ள கூட்டணியின் பண விநியோகத்தைத் தடுக்க வில்லை. மாறாக அதற்கு துணை போகிறார்கள்.
"கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 650 கோடி ரூபாயை செலவழித்து தான் வெறும் 1.1 விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது என்பது ஆதாரப் பூர்வமாக அம்பலமாகிவிட்டது," என ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்களின் நம்பிக்கையை முற் றிலும் இழந்துவிட்ட மத்திய, மாநில ஆளுங்கட்சிகளும் அவற் றுடன் கூட்டணியில் உள்ளோரும் தோல்வி பயத்தில் வசவுகளை, அவதூறுகளை திமுக கூட்ட ணியை நோக்கி வீசிப் பார்த்ததாக குறிப்பிட்டுள்ள அவர், மக்களே கேடயமாக இருந்து அந்த அவ தூறு அம்புகளை முனை முறித்துப் போட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!